உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா? Jeffersonville, Indiana, USA 63-0630E 1நாம் சற்று நேரம் நின்ற வண்ணமாக நம் தலைகளை வணங்கி கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டிய விண்ணப்பங்கள் ஏதாகிலும் இருக்குமானால், இந்த நேரத்தில் உங்கள் கரங்களை இப்படி உயர்த்தி, நீங்கள் விரும்புகிறவைகளை உங்கள் இருதயத்தில் நினைத்துக் கொள்வீர்களா? எங்கள் பரலோகப் பிதாவே, மற்றொரு நாளுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது முடிவடைய ஆயத்தமாகி, அது சரித்திரமாகப் போகின்றது. காலை ஆராதனை ஏற்கனவே முடிந்துவிட்டது. அப்பொழுது கூறப்பட்ட வார்த்தைகள் காற்றில் மிதந்தும், ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஒரு நாளில் அதை நாங்கள் சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அது சரியாக இருக்க வேண்டும், அல்லது தவறாக இருக்க வேண்டும். அது சரியென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஏனெனில் அது உம்முடைய வார்த்தை. இன்றிரவு நாங்கள் உம்மிடம் கேட்கும் இவ்விண்ணப்பங்களை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். எங்கள் கரங்களை உயர்த்தினவர்களாய், எங்களுக்குத் தேவையானது இன்னதென்றும், நாங்கள் என்ன கேட்கப் போகின்றோம் என்றும் ஏற்கனவே நீர் அறிந்துள்ள விண்ணப்பங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்கு நீர் உத்தரவு அருளி, எங்கள் இருதயத்தின் விருப்பங்களை அளிப்பீராக, ஆண்டவரே, அதை உம்மை மகிமைப்படுத்துவதற்கு மாத்திரமே நாங்கள் உபயோகிக்க முடியுமானால். எங்கள் மத்தியிலுள்ள வியாதிகளை சுகப்படுத்தும். எல்லா பாவத்தையும் அவிசுவாசத்தையும் எடுத்துப் போடும். உமது வார்த்தையைக் குறித்தும், நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தைக் குறித்தும் தியானிக்கும் இந்நேரத்தில், உமது ஆசீர்வாதங்களின் ஒரு பங்கை இன்றிரவு எங்களுக்குத் தாரும். பிதாவே, நாங்கள் ஒன்று கூடியுள்ள நோக்கம், நாங்கள் இன்னும் எவ்வளவு சிறப்பாக வாழ வேண்டுமென்றும், இன்னும் உமக்கு எவ்வளவு அருகாமையில் வாழ வேண்டுமென்றும் கற்றுக் கொள்வதற்கு மாத்திரமேயன்றி, வேறெதற்காகவும் அல்ல. நாளானது சமீபித்து வருவதை நாங்கள் பார்க்கும் போது, நாங்கள் அடிக்கடி ஒன்று கூடி உம்முடைய புத்திமதிகளை பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். பிதாவே, இதை அருள்வீராக, இயேசுவின் நாமத்தில், ஆமென். உங்களுக்கு நன்றி. நீங்கள் உட்காரலாம். 2இங்கு மிகவும் உஷ்ணமாயுள்ளதென்று அறிகிறேன்... இடமெல்லாம் ஜனங்களால் நிறைந்துள்ளது. இங்கு குளிர்சாதன வசதி இல்லை என்பதனால் வருந்துகிறோம். நான்... ஒருக்கால்... நான் விரும்பும் விதமாக என்னால் செய்யக் கூடுமானால், இந்த சபைக்கு இரண்டு காரியங்களை செய்ய விரும்புகிறேன். பியானோ ஒன்றை இந்த விதமாக அமைக்க விரும்புகிறேன். அப்பொழுது பியானோ இசைப்பவர் சபையோரைப் பார்த்த வண்ணம் இசைக்கலாம். இந்த பக்கத்தில் ஒரு ஆர்கனை வைக்கலாமென்று எண்ணுகிறேன். பின்பு குளிர்சாதன கருவியைப் பொருத்த விரும்புகிறேன். அப்பொழுது எனக்கு மனநிறைவு ஏற்படும் அவ்வளவு தான், எனவே நாம்... நாம் கர்த்தரை விசுவாசிப்போம், இவைகளை அவர் நமக்கு அருளுவார் என்று நாமறிவோம். 3இதை சகோ. ஹிக்கர்ஸன் ஒரு பத்திரிக்கையிலிருந்து எடுத்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று நினைக்கிறேன். அவர் என் மேசையின் மேல் வைத்து சென்றுவிட்டார். அது தூதர்களின் கூட்டமாகும். அந்த பத்திரிக்கை அதை வெளியிட்டது. கூர்நுனிக் கோபுர வடிவத்தைப் பாருங்கள். இந்த பக்கத்திலுள்ள இந்த தூதன், கூர்மையான சிறகுகள் உடையவராய், மார்பை நிமிர்ந்து வெளியே தள்ளினவராக என் வலது பக்கமாக இருப்பதை கவனியுங்கள். இதே பிரசங்க பீடத்திலிருந்து அநேக மாதங்களுக்கு முன்பே இதைக் குறித்து நான் அறிவித்தேன். பாருங்கள்? அது நிறைவேறினது. 'லூக்' பத்திரிக்கை... இல்லை, 'லைஃப்' பத்திரிக்கை அதை வெளியிட்டுள்ளது. அதன் மே 17-ந் தேதி பத்திரிக்கையில் (அது சரியா?). மே, 17-ந் வெளியீடு. சகோதரி உட் என்னிடம், அநேகர் அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு கேட்டதாக கூறினார்கள். அது மே மாதம் வெளியீட்டில், மே, 17-ந் தேதி. அது மர்மமான ஒரு மேகம். அது 26 மைல் உயரத்தில் 30 மைல் விட்டம் கொண்டதாயிருந்தது. அதைக் குறித்து தான் இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கு தான் கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து அந்த இடத்தை அசைத்தார். அந்த முழு இடமே... அந்த சப்தம் அதிகமாயிருந்தது. 4எனக்குத் தெரியும், ஒரு மனிதன்... சகோ. சாத்மன் என்று நினைக்கிறேன், சற்று முன்பு அவரை இங்கு கண்டேன். அவர் இங்கு நின்று கொண்டிருந்தார் (ஆம், பின்னால் இருக்கிறார்). இது நிகழ்ந்தபோது, அவர் அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து நான் அதிக தூரத்தில் இருக்கவில்லையென்று நினைக்கிறேன். அவரை நான் பார்த்துவிட்டு, கையை ஆட்டி சைகை காட்டினேன். (அவருடைய இரு கண் தொலைநோக்கி என்னிடமிருந்தது), நாங்கள் வேட்டையாட நினைத்த மிருகங்கள் அந்த மலையில் இல்லை. அவை வேறு மலைக்கு சென்றுவிட்டன. அதற்கு முந்தின தினம் அவைகளை நான் கண்டேன். அவைகளை வேட்டையாட எங்கு செல்ல வேண்டுமென்று அவர்களிடம் கூறினேன். அங்கு நான் சென்று, அவை அந்த பக்கம் வர நேரிட்டால், நான் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு மற்ற பக்கம் விரட்டியடிப்பேன் என்றும், அப்பொழுது அவர்கள் அந்த மிருகத்தை வேட்டையாடலாம் என்றும் கூறினேன். அது காட்டு பன்றி. 5ஆகவே நான் இந்த பக்கம் சென்றேன். அவை இரண்டு பக்கங்களிலும் இல்லை. சகோ. ஃபிரட் நடந்து செல்வதைக் கண்டேன், அவை அங்கே இல்லை. அவர் திரும்பி சென்றுவிட்டார். சகோ. நார்மன் மலையின் மேல் சென்றுவிட்டார். நான் திரும்பி, ஒரு சிறு பள்ளம் வழியாக சென்று, மேலே வந்தேன், நான் மாத்திரம். கரடுமுரடான இடத்தின் வழியாக ஒன்றரை மைல் தூரம் நடந்து சென்றேன். நான் உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். வெயில் அதிகமாகிக் கொண்டிருந்தது. நான் என் கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த, ஆடு மேய்ப்பர்கள் ஊமுள் என்றழைப்பதை எடுத்துக் கொண்டிருந்தேன். அது நிகழ்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, நான் கண்ட தரிசனத்தில், அதே விதமாக நான் ஊமுள்ளை எடுத்துக் கொண்டிருந்ததாக உங்களிடம் கூறினேன். நான், “அது வினோதமாயுள்ளதே. நான் டூசானுக்கு சரியாக வடக்கில், சிறிது வடகிழக்கில் இருக்கிறேன்'' என்று நினைத்து கொண்டேன். நான் உங்களிடம், டூசான் அந்த இடத்திற்கு தென்மேற்கில் இருந்ததாக கூறினேன். நான், ''அது வினோதமாயுள்ளதே“ என்று எண்ணினேன். நான் இப்படி அந்த ஊமுள்ளை பார்த்துக் கொண்டே, என் கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த நிறைய ஊமுள்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அங்கு சென்றிராதவர்களுக்கு இதை கூறுகிறேன். அது வனாந்தர பிரதேசம். அது இந்த இடம் போல் அல்ல. இதைக் காட்டிலும் இருபது மடங்கு வெளிச்சமாக இருக்கும். இங்குள்ளது போல் அங்கு மரங்கள் எதுவும் கிடையாது. முட்செடிகளும் மணலும் மாத்திரமே. நான் இப்படி பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களை மேலே உயர்த்தி நோக்கின போது, எனக்கு அரை மைல் தொலைவில் காட்டுப் பன்றி மந்தை ஒன்று அந்த முனையில் கிழங்கு மேய்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான், “சகோ. ஃபிரட்டையும், சகோ. நார்மனையும் இங்கு வரவழைத்தால், இது பொருத்தமான இடம்” என்று எண்ணினேன். 6அதற்கு முந்தின மாலை பரிசுத்த ஆவியானவர் முகாமில் வல்லமையாக அசைவாடினார். அவர் என்னிடம், நடந்த காரியங்களைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார். நான் எழுந்து முகாமிலிருந்து வெளியே செல்ல வேண்டியதாயிற்று. அடுத்த நாள் காலை நான் மேலே சென்றேன். நான் புறப்பட்டேன். “நான் சகோ. ஃபிரட்டைக் கண்டால், அவரை இந்த மலைக்கு வரவழைப்பேன்” என்று எண்ணினேன். அது இந்த பக்கம் ஒரு மைல் தொலைவில் இருந்தது. அவரை சந்திக்க வேண்டுமானால், இரண்டு அல்லது மூன்று மைல் இந்த பக்கம் நடந்து, அவர்கள் 'ஹாக்பாக்' (hogback) என்றழைக்கும் செங்குத்தாக கீழே இறங்கும் குறுகிய மலையின் உச்சியின் மேலேறி, இப்படியாக மேலே கரடுமுரடான மலைகளின் வழியாக சென்று, மறுபடியும் கீழே இந்த பக்கம் இறங்கி, குறுக்கே இந்த திசையில் சென்று, அவரை சந்திக்க வேண்டும். அதன் பின்பு அவர், மலையின் தாழ்வாரத்தை அடைந்து சகோ. நார்மனை சந்திக்க வேண்டும். அது ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து மைல் தூரம் இருக்கும், பின்பு அவர் திரும்பி வர வேண்டும். நான் அடையாளத்திற்காக அங்கிருந்த புதரில் 'கிளீனக்ஸ்ஸை' தொங்கவிடப் போனேன். ஏனெனில் நான் திரும்பும், எந்த மலைத் தொடர் உச்சியை அடைய வேண்டுமென்று எனக்குத் தெரிய வேண்டும். 7அங்க கரடுமுரடான பாறைகள் நிறைய இருந்த சிறு குறுகிய மலையின் உச்சியை அடைந்தேன். அங்கு ஒரு மான் கூட்டம் மற்ற பக்கத்திலிருந்து, சிகரத்துக்கு நாற்பது அல்லது ஐம்பது, கெஜம் கீழே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது காலை வேளையாக இருந்தது, 8.00 அல்லது 9.00 மணியிருக்கும். சகோ. ஃபிரட், நேரம் அவ்வளவு தானே ஆகியிருக்கும்? ஒருக்கால் 9.00 மணியிருக்கும். பன்றிகள் என்னைக் காணாதபடிக்கு, நான் இந்த பக்கம் வேகமாக ஓடினேன். அவை காட்டுப் பன்றிகள் என்று உங்களுக்குத் தெரியும். அவை பயமுறுத்தக் கூடியவை. எனவே நான் இந்த பக்கம் மலையின் மேல் சென்றேன். நான் மலையின் மேல் ஓடி, நாம் 'டாக் டிராட்' (dog trot) என்றழைக்கும் இடத்தை அடைந்தேன். திடீரென்று முழு பிரதேசமே குலுங்கினது. அப்படிப்பட்ட ஒரு வெடிசத்தத்தை நான் கேட்டதில்லை. அது அந்த இடத்தை குலுக்கி, பாறைகள் கீழே உருண்டன. நான் தரையிலிருந்து ஐந்தடி உயரம் மேலே குதித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் பயந்து போனேன். ''ஓ, என்னே!'' என்று நினைத்தேன். யாரோ என்னை சுட்டுவிட்டார்கள் என்று எண்ணினேன். நான் ஒரு கறுப்பு தொப்பியை அணிந்திருந்தேன். அவர்கள் ஒருக்கால் மலையின் மேல் ஓடும் காட்டுப் பன்றி என்று நினைத்து என்னை சுட்டுவிட்டார்களோ என்று எண்ணினேன். அது மிகுந்த சத்தத்துடன் என் மேல் வந்தது, திடீரென்று ஏதோ ஒன்று ''மேலே பார்'' என்றது. அப்பொழுது அது காணப்பட்டது. அவர் ''இது ஏழு முத்திரைகள் திறக்கப்படுதலாம். வீடு திரும்பு“ என்று என்னிடம் கூறினார். ஆகவே நான் இங்கே வந்தேன். 8ஒரு மணி நேரம் கழித்து நான் சகோ. ஃபிரட்டையும், சகோ. நார்மனையும் கண்டேன். அவர்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அது இதோ இங்குள்ளது. மூடுபனியோ, புகையோ, நீர்த்துளியோ அவ்வளவு உயரத்திற்கு செல்வது என்பது கூடாத காரியம் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. பாருங்கள், அது ஓரளவு உயரம் மாத்திரமே செல்ல முடியும்... எவ்வளவு உயரம் என்று சரியாக எனக்குத் தெரியாது. நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ஒன்பதாயிரம் அடி உயரத்தில் பயணம் செய்கிறோம். அது புயல் உருவாகும் மண்டலத்திற்கும் உயரத்தில். அது ஏறக்குறைய நான்கு மைல் உயரம். பதினைந்து மைல்களுக்கு அப்பால் நீர்த்துளிகள் இருக்க முடியாதென்று நாம் வைத்துக் கொள்வோம், ஆனால் இது 26 மைல் உயரத்தில் காணப்பட்டு, நாள் முழுவதும் அங்கேயே இருந்தது. பாருங்கள்? அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நமக்குத் தெரியும். சகோ. ஹிக்கர்ஸன், நன்றி. அதை என் மேசையின் மேல் வைத்துக் கொள்வேன். அவர்கள் புத்தகத்தை எழுதும் போது, இந்த புகைப்படத்தை அதில் சேர்த்துக் கொள்ளலாம். 9ஒரு சிறு குறிப்பு என் கையில் கொடுக்கப்பட்டது. நான் சென்ற முறை இங்கிருந்ததைக் காட்டிலும், நமது எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது என்று கேள்விப்படுகிறேன். அவனுடைய பெயர்... அவனுடைய தந்தையின் பெயர் டேவிட் வெஸ்ட். அந்த சிறுவனை அவர்கள் கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்ய விரும்புகின்றனர். அது சரியா? இன்றிரவா அல்லது புதன் இரவா? எனக்குத் தெரியவில்லை. அது... இன்றிரவா? நல்லது. சரி... நீங்கள் டேவிட், இல்லையா? நீங்கள் தான் டேவிட் ஆக இருக்குமென்று நினைத்தேன், சரி, அந்த சிறுவனை மேலே கொண்டு வருகிறீர்களா? நமது சகோதரி இங்கே பியானோ கருவிடம் வந்து, ''அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்“ என்னும் பாடலை இசைத்தால் நலமாயிருக்கும், போதகர் மேலே வந்தால், நாம் இந்த சிறுவனை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்யலாம். இதை நாம் வேதபூர்வமாக அனுசரிக்க முயல்கிறோம். 10சகோ. வெஸ்ட், இது உங்கள் பேரனா... அது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. இல்லையா? சகோ. வெஸ்ட், அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்... நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நானும் ஒரு பாட்டன்தான். அது டீமாஸ் ஷகரியானை எனக்கு நினைவூட்டுகிறது. அவர் திரளான ஜனங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தார். அவர் என்னைப் போலவே எல்லாவற்றையும் குழப்பிக் கூறுகிறவர். அவர் அங்கு நின்று கொண்டு, “நான் பாட்டியான முதற்கொண்டு எனக்கு அதிக வயதாகிவிட்டது போல் தோன்றுகிறது என்று என் மனைவி ரோஸிடம் கூறினேன்'' என்று கூறிவிட்டு, ”நான் பாட்டனான முதற்கொண்டு என்பதற்கு பதிலாக பாட்டியான முதற்கொண்டு என்று தவறாக கூறிவிட்டேன்'' என்று தன் தவறை திருத்தினாராம். சகோ. வெஸ்ட், உங்களுக்குத் தெரியுமா... இந்த விஷயத்தில் நீங்கள் மாத்திரம் தனிமையில் இல்லை, உங்களைப் போன்ற அநேக பாட்டனார்கள் இங்குள்ளனர். பரவாயில்லை. நமது பேரப் பிள்ளைகளை நாம் உண்மையாகவே பாராட்டலாம், நான் கூறப்போவது மோசமாகத் தென்படாது என்று நம்புகிறேன். நமது பிள்ளைகளிடத்தில் நாம் செலவழித்த நேரத்தைக் காட்டிலும் அதிக நேரத்தை நமது பேரப் பிள்ளைகளிடத்தில் செலவழிக்கலாம். அதைக் குறித்து அன்றொரு நாள் என் மனைவியிடம் கேட்டேன். அவள், “நிச்சயமாக அவர்களை சற்று நேரம் கொஞ்சின பிறகு, அவர்களுடைய தாயிடம் கொடுத்து விட்டு போய்விடுவேன்'' என்றாள். 11எனக்கு ஒரு பேரன் இருக்கிறான். அவன், ''பப்பா பிரசங்கிக்கிறார், பப்பா பிரசங்கிக்கிறார் என்பான். சென்ற ஞாயிறு இரவு அவர்கள் காணிக்கை எடுத்து அதை மேசையின் மேல் வைத்திருந்தார்கள். அவனை அவர்கள் அங்கு கொண்டு வந்திருந்தனர், நான் பிரசங்கம் செய்வதை அவன் ஒலிப் பெருக்கியில் கேட்டான். அவன் “பப்பா பிரசங்கிக்கிறார், பப்பா பிரசங்கிக்கிறார்'' என்றான். பில்லி, “ஆம், அதோ மேலே பிரசங்கிக்கிறார்” என்றான். அவன், “இல்லை'' என்று சொல்லி ஓடி வந்த போது, காணிக்கையை தட்டி தரையில் கொட்டிவிட்டான். அவன் இங்கு வரமுயன்றான், அவன் எப்பொழுதும் என்னைப் பார்த்து சத்தமிடுவான். அவன் கன்வென்ஷனில் என்னைக் காணும் போது, ''பப்பா பிரசங்கிக்கிறார்'' என்று சத்தமிடுவான். அவர்கள் மிகவும் இனிமையானவர்கள் என்று எனக்குத் தெரியும். 12உன்னுடைய தலைமயிரில் கொஞ்சம் நான் எடுத்துக் கொள்ளட்டுமா? இப்பொழுது இவனுக்கு இது தேவையில்லை. எனக்கோ தேவைப்படுகின்றது. இவனுடைய பெயர் என்ன? (சகோதரி வெஸ்ட் “டேவிட் ஜோனத்தான்” என்று கூறுகின்றார்கள் - ஆசி) டேவிட் ஜோனத்தான். இது ஒரு அழகான பெயர் அல்லவா? நல்லது, இவனுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளதோ இதற்கேற்ப ஜீவியத்தை இவனுடைய வாழ்க்கை செய்யும் என நான் நம்புகிறேன். ராஜாவாகிய தாவீது; தாவீது, அவனுடைய சிங்காசனத்தில் கிறிஸ்து உட்காரவிருக்கின்றார்; மற்றும் ஜோனத்தான், அந்த அருமையான நண்பன். அவர்கள் அருமையானவர்கள் என்று நான் - நான் உங்களுக்கு கூறுகிறேன். நாம் அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியுறுகிறோம், மிகவுமாக. நான்... இவன் உறக்கத்திலிருந்து எழுகின்றான். மற்றவர்களைப் போலவே இவனாலும் 'ஆமென்' என்று கூச்சலிட முடியும், உங்களுக்கு தெரியுமல்லவா, ஆகவே அது நம்மை தொல்லைப்படுத்தாது. நாம் இவனை கர்த்தரிடமாக பிரதிஷ்டை செய்கின்றோம். ஒரு இளம் தம்பதி, இந்த அருமையான சிறு குழந்தையை இவர்களுடைய பொறுப்பில் தேவன் கொடுத்து வைத்து, இவர்கள் இவனை கர்த்தரிடம் கொடுக்க வந்துள்ள இக்காரியம் மிகவும் இனிமையான ஒன்றல்லவா. இவ்விதமாக நீங்கள் செய்யும் போது, இது எதைக் காண்பிக்கிறதென்றால் நீங்கள்... தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கின்றதை தேவனிடமாகவே அதை நீங்கள் திரும்பக் கொடுக்கின்றீர்கள். தேவன் இக்குழந்தையை ஆசீர்வதிப்பாராக. 13நீங்கள் இவனை உங்கள் கையிலேந்திக் கொள்வீர்களானால், என்னை விட சற்று நன்றாக தாய் கையிலேந்திக் கொள்வாள் என்று நான் நம்புகிறேன். இவன் மீது நாம் நமது கைகளை வைக்கலாமல்லவா? நீங்கள் இவனை கையில் வைத்துக் கொள்கிறீர்களா? எனக்கு சற்று அச்சமாக இருக்கிறது, இவனை கீழே போட்டு விடுவேனோ என்று இல்லை, கீழே போட்டு விடமாட்டேன், சற்று இவனை நொறுக்கி விட அல்லது வேறெதாவது ஆகி விடுமோ என்கின்ற ஒரு பயம் எனக்குண்டு, உங்களுக்கு அது தெரியும். குழந்தைகளை உடைத்து விடுவேனோ என்று எப்போதுமே எனக்கு ஒரு பயமுண்டு, உங்களுக்கு அது தெரியும். என் - என்னுடைய மேடா கூறினாள், அங்கே பின்னாலே ...இங்கே பிரசங்க மேடையில் நான் செய்கின்ற ஒரே காரியத்தைக் குறித்து தான் அவள் பொறாமை கொள்கின்றாள், நீங்கள் அதை அறிவீர்கள். அவளுக்கு கையில் ஏந்திக் கொள்ள விரும்புகிறாள்... ஆம், இங்கே பாருங்கள், இவன் என்னை நோக்கிப் பார்க்கப் போகின்றான். இவன் ஒரு அருமையான பையன். ஆம் ஐயா. இவனை நான் கையில் ஏந்திக் கொள்ளலாம் போலிருக்கிறதே. ஓ, சகோதரியே, நான் கீழே விழமாட்டான் என நம்புகிறேன். இதோ, இவன் அழகாயிருக்கிறான் அல்லவா? அழகானவன்? எப்படி இருக்கிறாய்? நல்லது, அருமையானவன். 14நம்முடைய தலைகளை தாழ்த்தலாம் கர்த்தராகிய இயேசுவே, அனேக வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்தவமானது, கிறிஸ்து என்ற ஒரு மனிதனின் ருபத்தில் பிறந்தபோது (அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவாகவும், அவருடைய பெயர் இயேசுவாகவும் இருந்தது.) அப்போது, அவருடைய கைகளை பிள்ளைகள் மேல் வைத்து, “அவர்களை ஆசீர்வதிக்கும்படி மக்கள் தங்களுடைய கை குழந்தைகளை அவரிடம் கொண்டு வந்தார்கள். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வர தடை செய்ய வேண்டாம் பரலோக ராஜியம் அப்படிபட்டவர்களுடையது” என்றீர். ஆகவே, இங்கே இருக்கிற இந்த அருமையான தம்பதியினர் மற்றும் அவர்களுடைய தாத்தா, பாட்டி வார்த்தையை உண்மையாய் பின்பற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுவே, போதகரும், நானும் இந்த அருமையான சிறிய டேவிட் ஜோனத்தான் வெஸ்டை இன்றிரவு உம்மண்டை ஏறெடுக்கத் தக்கதாக நான் கொண்டு வருகிறேன். தாய் மற்றும் தகப்பனிடமிருந்து உம்மண்டை இவனை நான் தருகிறேன். இந்த உலகத்திற்குள் இவனைக் கொண்டு வந்த சர்வ வல்லவருக்கு கனத்தை அளிக்கவும், ஊழியத்திற்கென்று ஒரு நீண்ட வாழ்க்கைக்காகவும், பலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், கர்த்தாவே, உம்மிடமாக இவனை நான் வழங்குகிறேன். தேவனுடைய ஆசீர்வாதங்கள் தாமே இவன் மீது தங்கியிருப்பதாக. பரிசுத்த ஆவியானவர் தாமே குழந்தையின் மீது தங்கியிருப்பாராக. நாளை என்று ஒன்று இருக்குமானால், இவனுடைய பெற்றோரும் மற்றும் இவனுடைய தாய் தந்தையின் பெற்றோரும் இன்றைக்கு மிகவுமாக இவர்கள் நெஞ்சார நேசித்து பற்று கொண்டிருக்கின்ற இந்த சுவிசேஷத்தை இவன் தாமே கொண்டு செல்லட்டும். இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த குழந்தையின் ஜீவியத்தின் பிரதிஷ்டைக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் இதை நான் அளிக்கின்றேன். ஆமென். 15இந்த சிறு பையனை புகைப்படம் எடுக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். (புகைப்படம் கருவியின் சத்தம் கேட்கின்றது - ஆசி) நானும் கூட குதித்தேன். சகோதரியே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீ தாமே கர்த்தராகிய இயேசுவை நேசித்து பற்றிக் கொண்டிருப்பாயாக, இந்த சிறு பையன் தாமே தேவனுடைய போதனையில் வளர்க்கப்பட்டு ஒரு அருமையான சிறு பையனாக உனக்கு இருப்பானாக. நிச்சயமாக. தேவன் உன்னோடு இருப்பாராக. இவனுடைய சிறிய அமைதிபடுத்தும் பொருளை கீழே போட்டுவிட்டான் என்று நான் நினைக்கிறேன்? அதை எடுத்துவிட்டார்களா? ஓ, என்னே! ஓ, என்னே! இப்பொழுது நாம், ''அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்“ என்னும் சிறிய பாடலை எல்லோரும் சேர்ந்து அந்த சிறுவனுக்காக பாடுவோம் (சரி, சகோதரியே) உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள். சிறுவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். கைகளை வைப்பதற்கு, கர்த்தராகிய இயேசுவின் கைகளைக் காட்டிலும் மேலான கைகளை நான் அறியேன். உங்களுக்குத் தெரியுமா? 16அங்கு உஷ்ணமாயுள்ளதென்று நானறிவேன். வாயிற்காப்போனாகிய என் சகோதரன் டாக்குக்கும், காப்போராய் பணிபுரியும் மற்றவர்களுக்கும் இதை கூற விரும்புகிறேன். சில சகோதரிகள் நாற்காலிகளின் மேல் படிந்துள்ள எண்ணெய் பசையினால் தங்கள் பாவாடைகளை அழுக்காக்கிக் கொள்கின்றனர். உங்களில் எத்தனை பேருக்கு எண்ணெய் பசை படிந்துள்ளது? என் மனைவி, என் இரண்டு மகள்கள், சிறு பெட்டி காலின்ஸ், திருமதி. பீலர் இன்னும் மற்றவர்கள் அழுகாக்கிக் கொண்டதை நானறிவேன்... அது ஏதோ அதன் மேல் படிந்துள்ள எண்ணெய்பசை. டாக், உங்களால் சற்று கவனிக்க முடியுமானால், அது... நான் நினைக்கிறேன் அது... இருக்கை சுலபமாக மேலும் கீழும் நகர்வதற்காக அவர்கள் போடும் பசை அல்லது வர்ணம் என்று நினைக்கிறேன். அது... அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்று... அது என்னிடம் கூறப்பட்ட போது, நான் 'டாக்' கிடம் கூறுவதாகச் சொன்னேன். சரி. புதன் இரவு ஜெபக் கூட்டம்... (சகோ. பிரன்ஹாம், சகோ. நெவிலுடன் பேசுகிறார் - ஆசி). அறிவிப்புகள் அனைத்தும் செய்து முடிந்துவிட்டது. 17கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிறு காலை, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததாக இந்த சந்ததியின் மேல் குற்றஞ்சாட்டும் பொருளின் மேல் பேசப் போகின்றேன். நீங்கள், “இந்த சந்ததி அதை செய்திருக்க முடியாது'' என்று கூறலாம். அவர்கள் செய்தார்களா இல்லையா என்பதை வார்த்தையின் அடிப்படையில் நாம் பார்க்கலாம். அடுத்த ஞாயிறு காலை, கர்த்தருக்கு சித்தமானால் இல்லையென்றால்... வேறொதாகிலும் சம்பவித்தால்... இந்த வாரம் நான் ஹவுஸ்டனில் ஒரு கன்வென்ஷனில் பங்கு கொள்ள வேண்டும். அது ஞாயிறு வரை நடக்கும். எனவே என்னால் முடியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் இம்மாதம் கடைசி வாரத்தில் சிக்காகோவில் நடைபெறவிருக்கும் கன்வென்ஷன் அல்லது கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பு, இரண்டு ஞாயிறுகள் இடையே இருக்கும். ஆனால் நான் என் குடும்பத்தை அரிசோனாவுக்கு திரும்பக் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் பிள்ளைகளின் விடுமுறை கழிந்துவிட்டது. அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 18எத்தனை பேர் தேவனுடைய வார்த்தையை படித்து அதனால் உண்டாகும் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கிறீர்கள்? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி ) நாம் எல்லோரும் அதிகமாக அனுபவித்து வருகிறோம். மிகவும் உஷ்ணமாயுள்ளது. உங்களில் சிலர் இன்றிரவே வீடு திரும்ப வேண்டுமென்று அறிவேன். சகோ. ராட்னி, சார்லி, இன்னும் மற்றவர்கள் வெகுதூரம் காரோட்டி செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியும். ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் விடுமுறையில் இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் மீன்பிடிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். ஒரு மனிதன் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஆண்டவர் அந்த நேரத்தை அவன் கணக்கில் சேர்ப்பதில்லை. நீங்கள் மீன் பிடிக்கும்போது, உங்களுக்கு வயது அதிகமாவதில்லை. பெண்களாகிய நீங்கள் அவர்களுடன் செல்லப் போகின்றீர்கள். பாருங்கள்? கூடுமானால் நானும் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். அப்பொழுது... நல்ல தேவன், ஒரு மனிதன் மீன் பிடிக்கச் செல்லும் போது, அந்த நேரத்தை அவன் கணக்கில் சேர்ப்பதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு இறுக்கம் ஏற்படும் போது, நீங்கள் அதிகமாக மீன்பிடித்தலில் ஈடுபடுங்கள். மீன் பிடித்தல் இறுகத்தை தளர்த்தும் சிறந்த ஒரு பொழுதுபோக்கு என்பது என் வாழ்க்கையில் நான் கண்டறிந்த உண்மை. 19ஒரு முறை திரு. ட்ரெளட்மன் என்பவர் ஒரு சிறு அட்டை எனக்கு அனுப்பியிருந்தார். நியூ ஆல்பனியில் பனிக்கட்டி கம்பெனி நடத்தும் திரு. ட்ரெளட்மன்னை யாருக்காவது ஞாபகம் உள்ளதா? அவர் ஒரு சிறு அட்டை வைத்திருந்தார். அதில், ''மீன் பிடிக்கச் செல்லுதல்“ என்பதைக் குறித்து எழுதப்பட்டிருந்தது. அது, ”ஒரு மனிதன்... அவனுடைய சகோதரனுடன் மீன் பிடிக்கச் செல்கிறான். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து மீன் பிடிப்பார்கள் என்று கூறினது“. அதில் மேலும் எட்டு அல்லது பத்து வெவ்வேறு காரியங்கள் எழுதப்பட்டிருந்தன. அதன் கடைசி வரியில், ''மனிதன் மீன் பிடிக்கச் செல்லும்போது, தேவனுக்கு இன்னும் சற்று அருகாமையில் இருக்கிறான்'' என்று எழுதப்பட்டிருந்தது. அது மிகவும் உண்மையென்று கருதுகிறேன். மீன் பிடிக்கச் செல்லும் போது, பணக்காரனும் ஏழையும் எவ்வித பாகுபாடுமின்றி ஒன்றாயிருக்கின்றனர். பாருங்கள்? அவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். அதில் எழுதப்பட்டிருந்த அனைத்துமே ''மீன் பிடிக்கச் செல்லுதல்” என்பதைக் குறித்தே. கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் ஈடுபட்டு வரும் மீன்பிடித்தலைக் குறித்து உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் மனிதரின் ஆத்துமாக்களை பிடித்து வருகிறேன். நாம் காணும் ஒவ்வொரு ஆத்துமாவையும் பிடிக்க கர்த்தர் தாமே உதவி செய்வாராக. 20இன்றிரவு இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. ஜிம் இங்கு ஒலிப்பதிவு செய்து கொண்டிருப்பாரானால், இன்று காலை நான் ''இரண்டாம் யாத்திரை'' என்று கூறினதாக யாரோ ஒருவர் என் கவனத்துக்கு கொண்டு வந்தார், நான் இரண்டாம் யாத்திரை என்று கூற எண்ணவில்லை. அது மூன்றாம் யாத்திரை. அக்கினி ஸ்தம்ப வடிவில் பரிசுத்த ஆவியானவர் - தேவன் - இறங்கி வந்து தம்மை வெளிப்படுத்தி, முதலாம் யாத்திரை நேரிடும்படி செய்தார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கிறிஸ்து சபையை யூத மார்க்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது தான் இரண்டாம் யாத்திரை. மூன்றாம் யாத்திரை என்பது அதே அக்கினி ஸ்தம்பம் மணவாட்டியை ஸ்தாபன சபையிலிருந்து வெளியே கொண்டு வருதல் பாருங்கள்? இயற்கையிலிருந்து, ஆவிக்குரியதிலிருந்து, ஆவிக்குரியதிலிருந்து ஆவிக்குரியவர்கள் - மூன்று பாருங்கள்? இல்லை, ஸ்தாபன சபையிலிருந்து ஆவிக்குரியவர்கள். நாம் மூன்று என்னும் எண்ணிக்கையை பெற்றுள்ளோம் - அதன் மூன்று காலங்கள். இன்றிரவு வேறொரு செய்தியை ஒலிப்பதிவு செய்ய எத்தனிக்கிறேன். அது: ''உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா?“ என்று தலைப்பு கொள்ளும். நான் எழுதி வைத்துள்ள வேத வாக்கியங்களையும் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பிரசங்கித்தால், நீண்ட நேரம் பிடிக்காது. ஆனால் முதலாவதாக நாம் தேவனுடைய வார்த்தையை படிக்க விரும்புகிறோம். அதை செய்யும் முன்பு, நம்முடைய இருதயங்களை அவரிடம் சற்று நேரம் வணங்குவோம். 21கர்த்தராகிய இயேசுவே, எந்த மனிதனும், ஸ்திரீயும், பிள்ளையும் தங்கள் கைகளினால் வேதாகமத்தின் பக்கங்களைத் திருப்பக் கூடும். ஆனால் அதை வெளிப்படுத்தி தரக் கூடியவர் நீர் ஒருவரேயன்றி வேறுயாருமில்லை. என் இருதயத்தில் தங்கியுள்ள இந்த பொருளை எடுத்து பேசி, அதை பல்வேறு தேசங்களிலுள்ள ஜனங்களிடம் அனுப்பும் போது, அவர்கள் எத்தகைய வாழ்க்கை வாழ வேண்டுமென்று அறிந்து கொள்ள நீர் உதவி செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் அநேகர், “கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சபை ஆராதனையில் பங்கு கொள்வதா? ஏழைகளுக்கு, தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்வதா? அல்லது தொடர்ந்து சபை அங்கத்தினனாக இருப்பதா? ஸ்தாபன சபைக்கு உத்தமமாய் இருப்பதா?” என்று இப்படிப்பட்ட அநேக கேள்விகளை என்னிடம் கேட்டிருக்கின்றனர். பிதாவே, இந்த வார்த்தைகளை மக்களிடம் கொண்டு வர முயற்சிக்கும் இந்நேரத்தில், அதற்கு சரியான விடை இன்றிரவு கிடைக்கும்படி அருள் செய்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 22இப்பொழுது பரி. லூக்கா சுவிசேஷத்திற்கு உங்கள் வேதாகமத்தை திருப்புங்கள். நாம் 14-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து தொடங்கி, நமது பொருளுக்கு ஆதாரமாக சில வசனங்களை வாசிப்போம். இந்த பிரசங்கத்திற்காக நாம் முப்பது முதல் நாற்பது நிமிடங்கள் ஒதுக்க முயல்வோம். இப்பொழுது பரி. லூக்கா 14-ம் அதிகாரம் 16-ம் வசனம் முதல்: அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் ஒரு மனதோடே போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக் கொண்டேன். நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்க வேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர் மாடு கொண்டேன், அதை சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன் பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி... (கவனியுங்கள், ஊழியக்காரர்களை அல்ல, 'ஊழியக்காரனை')... நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக் கொண்டு வா என்றான். ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்ட படி செய்தாயிற்று. இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும் படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக் கொண்டுவா. அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசி பார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.'' லூக். 14: 16-24 23அதில் மூன்று இழுப்புகள் அல்லது மூன்று திருப்பங்கள் இருந்ததைக் கவனித்தீர்களா? முதலாவதாக, அவர்கள் அழைக்கப்பட்டவர்களிடத்தில் சென்று அவர்களை அழைத்த போது, அவர்கள் வரவில்லை. எனவே சுகமளிக்கும் பிரச்சாரக் கூட்டம் (campaign) ஒன்று நடந்து கொண்டிருந்தது, அது குருடர்களையும் ஊனர்களையும் கொண்டு வந்தது. அதன் பிறகும் இடம் இருந்தது. எனவே அவன் சென்று, நல்லார், பொல்லார், சிரத்தையற்றவர் அனைவரையும் உள்ளே வரும்படி கட்டாயப்படுத்தினான். இதே போன்ற வேறொரு உவமையை நீங்கள் மத். 22:1 - 10-ல் படிக்கலாம் - நீங்கள் பிறகு படிக்க விரும்பினால், இதிலிருந்து: “உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா?”, என்னும் பொருளைத் தெரிந்து கொள்கிறேன். 24மனிதன் எப்பொழுதுமே தேவனுடைய வார்த்தையின் அழைப்பை ஏற்க மறுத்து, சாக்கு போக்கு சொல்ல முயல்கிறான் என்று இயேசு இங்கு கூறுகிறார். அது தேவனுடைய விருந்து என்றும், அது அவருடைய அழைப்பு என்றும் உறுதியாய் நிரூபிக்கப்பட்ட போதிலும், மனிதர் தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லுகின்றனர். நீங்கள் மத்தேயு. 22-ம் அதிகாரத்தை படிப்பீர்களானால், சாக்குபோக்கு சொல்லப்பட்டதை நீங்கள் காணலாம். அவர்கள்... அது எல்லா காலங்களிலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது முன் காலத்திற்கு செல்கின்றது. ஒரு மனிதன் திராட்சை தோட்டம் ஒன்றை வைத்திருந்தான். தோட்டத்திலுள்ள கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி தன் ஊழியக்காரர்களை அனுப்பினான். முதலாவதாக ஒரு ஊழியக்காரன் வந்தான். அவனை அவர்கள் அடித்துத் துரத்தினார்கள். அடுத்ததாக, வேறொரு ஊழியக்காரன் வந்தான். அவர்கள் அவனுக்கு என்ன செய்தார்கள்? அவனையும் அவர்கள் கல்லெறிந்தார்கள். இப்படியாக அவர்கள் ஒவ்வொரு ஊழியக்காரனையும் துரத்திவிட்டார்கள். முடிவில் ராஜா தன் குமாரனை அனுப்பினான். குமாரன் வந்தபோது, “இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்திரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள்'' என்று அவர்கள் கூறினதாகக் காண்கிறோம். அப்பொழுது ராஜா ஆட்களை அனுப்பி அந்த கொலையாளிகளைக் கொன்று போட்டு, அவர்களுடைய பட்டினத்தை சுட்டெரித்தான் என்று இயேசு கூறினார். 25தேவன் ஒரு மனிதனுக்கு அழைப்பை விடுத்து, அவன் ஏதாவது செய்ய வேண்டும் அல்லது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எதிர் பார்க்கும்போது, அவன் அதை புறக்கணித்தால், இரக்கத்தைப் புறக்கணித்த பின்பு நியாயத்தீர்ப்பு மாத்திரமே விடப்பட்டுள்ளதேயன்றி வேறொன்றுமல்ல. நீங்கள் இரக்கத்தின் எல்லையைக் கடந்துவிட்டால், அதன் பிறகு ஒன்று மாத்திரமேயிருக்கும். அதுதான் நியாயத்தீர்ப்பு. ஒவ்வொரு காலத்திலும் மனிதன் இதை செய்து வந்தான் என்று நாம் காண்கிறோம். ஒவ்வொரு வேதாகம காலத்திலும் இவ்வாறு நடந்து வந்துள்ளது. தேவன் தமது ஊழியக்காரனாகிய நோவாவை அனுப்பி, இரட்சிக்கப்பட விரும்பும் மக்களுக்கு தப்பிக்க ஒரு வழியை உண்டு பண்ணின போது... ஜனங்கள் நோவாவைப் பரியாசம் பண்ணி சிரித்தார்கள். தேவன் வழியை உண்டு பண்ணினார், ஆனால் அவர்களோ சாக்குபோக்கு சொன்னார்கள். அது அவர்களுடைய நவீன கருத்துகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கவில்லை. அவர்களுக்கு வேண்டிய விதமாக அது அமைந்திருக்கவில்லை. ஆகவே நோவாவின் நாட்களில் அவர்கள் சாக்கு போக்கு சொன்னார்கள். 26மோசேயின் நாட்களிலும் அவர்கள் சாக்கு போக்கு சொன்னார்கள். எலியாவின் நாட்களிலும் அவர்கள் சாக்கு போக்கு சொன்னார்கள். கிறிஸ்துவின் நாட்களிலும் அவர்கள் சாக்க போக்கு சொன்னார்கள். அவ்வாறே இன்றும் அவர்கள் சாக்கு போக்கு சொல்லுகிறார்கள். அவர் விருந்துக்கு அழைக்கப்பட்ட இஸ்ரவேலரைக் குறித்து இந்த உவமையைக் கூறுகிறார். ஆனால் நான், தேவனுடைய ஆவிக்குரிய விருந்துக்கு வரும்படியாக அழைக்கப்பட்டு, வராமலிருக்கிற மனிதர்களுக்கும் சபைகளுக்கும் இதை பொருத்துகிறேன்... அவர்கள் விருந்துக்கு வர மறுக்கின்றனர். அப்படி செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களுக்கு செய்ய வேறு அநேக காரியங்கள் உண்டு, அவர்கள் சாக்கு போக்கு சொல்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலர் தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தால், அவர்கள் இன்றுள்ள நிலையில் இருக்கமாட்டார்கள். கலியாண விருந்துக்கு வரும்படியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விடுக்கப்பட்ட அழைப்பை இஸ்ரவேலர் ஏற்க மறுத்தனர். அவர்கள் அதை புறக்கணித்து நியாயத்தீர்ப்புக்கு சென்றனர். இயேசு கூறினது போன்று, அவர்கள் சாக்கு போக்கு சொல்லி, அவர்களிடத்திற்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளைக் கல்லெறிந்து கொன்றார்கள். 27அவர்கள் ஒவ்வொரு நாளும் கூறின சாக்கு போக்கு... இயேசு தமது நாட்களில் யாருடனும் சேரவில்லையென்று நாம் காண்கிறோம். அவர்கள், “இந்த மனிதன் எங்கே இதை கற்றார்? எந்த பள்ளியிலிருந்து அவர் வந்திருக்கிறார்? இவர் தச்சனின் குமாரன் அல்லவா? அவருடைய தாய் மரியாள் அல்லவா? யாக்கோபும் யோனாவும் அவருடைய சகோதரர்கள் அல்லவா? அவருடைய சகோதரிகள் நம்முடன் இருக்கின்றனர் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இவைகளைச் செய்ய இந்த அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்?'' என்றனர். பாருங்கள்? வேறு விதமாகக் கூறினால், அவர் அவர்களுடன் சேராத காரணத்தால், அவர்கள், ”இவன் பெயல்செபூல், இவன் சமாரியன், இவன் பிசாசு பிடித்தவன், இவன் பைத்தியக்காரன். மத சம்பந்தமான பொல்லாத ஆவி இவனைப் பிடித்திருக்கிறது. அது அவனைப் பைத்தியக்காரனாக்கிவிட்டது. அதனால் தான் அவன் காட்டுமிராண்டியைப் போல் இருக்கிறான். அவன் மேல் கவனம் செலுத்தாதீர்கள்'' என்றனர். இஸ்ரவேலருக்கு நேர்ந்தது என்னவென்று நமக்குத் தெரியும். அவர்கள் நிச்சயமுடையவர்களாயிருந்த காரணத்தால் அவர்கள் அவரைக் குற்றஞ்சாட்டின் போது, அவர்கள்... “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக'' என்றனர். அன்று முதல் அந்த இரத்தப்பழி அவர்கள் மேல் இருந்து வருகிறது. 28இயேசு அவர்களிடம், அவர்களுடைய சாக்கு போக்கு தான் அவர்களிடத்தில் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் கொல்லப்பட காரணமாயிருந்தது என்று கூறினார். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக மனிதர் அவர்களுக்களித்த கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டனர். அப்படி செய்ததன் மூலம், அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்கினர். நீங்கள் இது தேவனுடைய சித்தம் அல்லது தேவனுடைய வாஞ்சை என்று கூறவேண்டும், அல்லது நீங்கள் இதை விட சிறந்ததாக வேறொன்றைக் கருதுவதாகக் கூற வேண்டும். இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும், தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் (mammon) ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. “இது சத்தியம்'' என்றோ அல்லது ''இது சரியாக பொருந்தவில்லை என்றோ , அல்லது இது சரியாக வியாக்கியானம் செய்யப்படவில்லை'' என்றோ நீங்கள் கூறத்தான் வேண்டும். தேவனுடைய வார்த்தையை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாதென்று வேதம் கூறியுள்ளது. யாருமே அதற்கு தனிப்பட்ட வியாக்கியானம் அளிக்கக் கூடாது. அது எவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதே விதமாக அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது என்ன கூறுகிறதோ, அது தான் அது. அது கூறும் விதமாக - அது எழுதப்பட்டுள்ள விதமாக - அதை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை தங்களுக்கு அவமாக்கி கொள்கின்றனர். அவர்கள் அதை விட்டு கடந்து சென்றுவிடுகின்றனர். 29எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவில் பரிசுத்த ஆவி விழுந்த போது, ரஷியா மாத்திரம் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை அன்று ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்கு அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க மாட்டார்கள். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவில் மகத்தான எழுப்புதல் உண்டானது. தேவன் அவர்கள் மத்தியில் வந்து, சைபீரியா போன்ற இடங்களில் மகத்தான எழுப்புதல் உண்டானது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை புறக்கணித்தனர். இன்றைக்கு அந்த தேசம் போய்விட்டது. அரசு அனுமதியின் பேரில் மாத்திரமே அவர்கள் சபைகளை வைத்திருக்கலாம். அவர்கள் நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் கம்யூனிஸம் என்னும் கொடிய கோபாவேசத்திற்குள் வழிதப்பி சென்று, தங்களை பிசாசுக்கு விற்றுப் போட்டனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவி இங்கிலாந்தில் விழுந்தது. விசுவாசத்தின் மகத்தான வீரர்களான ஜார்ஜ் ஜெஃப்ரீஸ், எஃப். எஃப். பாஸ்வர்த், சார்லஸ் பிரைஸ், ஸ்மித் விக்கில்ஸ்வர்த் போன்றவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழும்பி, இங்கிலாந்துக்கு பரிசுத்த ஆவியின் எழுப்புதலை அளித்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அவர்களைக் கேலிசெய்து, சிறையிலடைத்து, பைத்தியக்காரர்கள் என்றழைத்து, அவர்களுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டதாகக் கருதினர். ஜனங்கள் அவர்களுடைய பிரசங்கங்களைக் கேட்பதற்கு செல்ல, சபைகள் அனுமதியளிக்க மறுத்துவிட்டன. இவர்கள் பிணியாளிகளை சுகப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மகத்தான கிரியைகளைச் செய்தனர். இங்கிலாந்து ஒரு தேசமாக சுவிஷேத்தைப் புறக்கணித்த காரணத்தால், அவளுடைய பாவங்கள் உலகம் முழுவதிலும் அறியப்பட்டுள்ளன. உலகத்தில் இங்கிலாந்தைப் போல் ஒரு மார்க்கம் தப்பின தேசம் (apostate nation) வேறெங்குமில்லை எனலாம் - ரோமாபுரியும் பிரான்சும் உட்பட இங்கிலாந்திற்கு மேலாக அவள் மார்க்கம் தப்பினவர்களுக்குத் தாய். ஃபின்னி போன்ற மகத்தானவர்கள் பிரசங்கித்த அந்த இடத்தில்... ஹேமார்க்கெட், சார்லஸ் ஜீ, ஃபின்னி, வெஸ்லி போன்றவர்கள் - அவளோ அதை புறக்கணித்துவிட்டாள். 30சென்ற வாரம், அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் செய்தித்தாள்களில் பார்த்தோம். அவர்களுடைய பெரிய மனிதர்கள் கொண்டிருந்த பாலுணர்ச்சி பலவீனத்தின் காரணத்தால், ஒற்றர்கள் உள்ளே புகுந்தனர். அவர்களுடைய தலைவர் இன்னும் அநேகரைக் கண்டுபிடித்தார். பத்திரிக்கைகள் அந்த செய்தியை வெளியிட்டன. அவர்களுடைய அரசில் காணப்பட்ட அவதூறின் பாவம் அவர்களுடைய மானக்கேடான பெயரை உலகம் பூராவும் அறிவித்தது. ஏன்? அவள் சத்தியத்தைப் புறக்கணித்தாள். அவளுக்கு கூற சாக்கு போக்கு உண்டாயிருந்தது. அவள் முடிந்துவிட்டாள். நீண்ட காலம் முன்பே இங்கிலாந்து தேவனற்ற நாடாகிவிட்டது. பெந்தெகொஸ்தேவிலிருந்து தொடர்ச்சியாக வந்த அந்த மகத்தான சுகமளிக்கும் எழுப்புதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கின போது - தலைநகரான வாஷிங்டன் டீ.சி.யில் எழுப்புதல் உண்டானது... ஜனாதிபதிகளும், உப ஜனாதிபதிகளும், பிரமுகர்களும், ஆளுநர்களும்; பெரிய காரியங்கள் நிகழ்ந்தன. ஆளுநர்கள், பெரிய மனிதர்கள் சுகம் பெற்றனர். அறுபத்தாறு ஆண்டுகளாக சப்பாணியாயிருந்த காங்கிரஸ்காரர் உப்ஷா சுகமடைந்தார். அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அது இல்லையென்று மறுக்க முடியாது. அவர்களுடைய முன்னிலையில் இது நடந்தது. ஆனால் அவர்களோ அதைப் புறக்கணித்தனர். 31அதன் காரணமாகத் தான் இந்த தேசம்... அவள் தண்டிக்கப் பட வேண்டியவள், அவளுக்கு நம்பிக்கை எதுவுமில்லை. அவள் இரக்கத்துக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையேயுள்ள கோட்டை கடந்துவிட்டாள். அவள் தேசத்தை ஆளுகை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவள் முழுவதும் அழுகிப் போனவளாயிருக்கிறாள். அவளுடைய அரசியல் அழுகிவிட்டது. இந்த தேசத்தின் ஒழுக்கம் என்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தாழ்ந்த நிலையை அடைந்துள்ளது, இங்குள்ள மத சம்பந்தமான முறைமைகள், ஒழுக்கத்தைக் காட்டிலும் அதிகம் அழுகியுள்ளது. அப்படி இருப்பதனால், இந்த தேசத்திலுள்ள சபைகள் அனைத்துமே சபைகளின் சங்கத்தில் சேர்ந்து கொண்டு, மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொண்டுள்ளன. என்னே ஒரு காரியம்! ஏன்? ''என் விருந்துக்கு வாருங்கள்'' என்று கிறிஸ்து அவர்களுக்குத் தருணம் அளித்தார் - பெந்தெகொஸ்தே விருந்துக்கு. பெந்தெகொஸ்தே என்றால் ''ஐம்பது.'' 32பரிசுத்த ஆவி ரஷியாவில் ஊற்றப்பட்ட போது, அவர்கள் பெந்தெகொஸ்தே விருந்துக்கு - ஆவிக்குரிய விருந்துக்கு - அழைக்கப்பட்டனர். அவர்களோ அதை நிராகரித்தனர். இங்கிலாந்தின் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது, அவர்கள் அதை நிராகரித்தனர். அவ்வாறே பரிசுத்த ஆவி அமெரிக்காவில் ஊற்றப்பட்ட போது, அவர்களும் அதை நிராகரித்தனர். அவர் மூன்று முறை அழைத்தார். அவர் மூன்று முறை அனுப்பினார். அவர்களோ விருந்துக்கு வரும்படி விடுக்கப்பட்ட அழைப்புக்கு செவி கொடுக்கவில்லை. அவர் மறுபடியும் அனுப்பி, “இந்த ஜனங்களை கட்டாயப்படுத்தி அழைத்து வா'' என்றார். மேசையை ஆயத்தப்படுத்த வேண்டும். அது ஆயத்தமாயுள்ளது. இன்னும் இடமுள்ளது. இன்னும் சில மாதங்களில், அல்லது ஓராண்டில், எதுவாயிருப்பினும், தேவன் வேறாரு அசைவை தேசம் முழுவதிலும் அனுப்புவாரென்று நான் நம்புகிறேன். ஏனெனில் முன் குறிக்கப்பட்ட வித்து எங்கோ உள்ளது. எங்கோ, உலகத்தின் ஏதோ ஒரு பாகத்தில், வெளிச்சம் விழ வேண்டியதாயுள்ளது. ஆனால் இந்த தேசமோ போய்விட்டது. 33இந்த வாரம் 'லைஃப்' பத்திரிக்கையை அன்றொரு நாள் நான் லிட்டில் ராக் என்னுமிடத்தில் - இல்லை, ஹாட்ஸ்பிரிங் என்னுமிடத்தில் - பார்த்துக் கொண்டிருந்தேன். அது நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் என்று நினைக்கிறேன். அவர் அரை நிர்வாணப் பெண் ஒருத்தியுடன் ஹானலூலூவில் நடனமாடிக் கொண்டிருந்தார். அதற்கு கீழே வேறொரு பிரபலமானவர். ஓ, என்னே ஒரு அவமானம்! நம்முடைய தேசத்தை இன்று பாருங்கள். நமது தேசத்தின் நிலையைப் பாருங்கள். அவள் எங்கு அடைந்திருக்கிறாள் என்றும் அவள் எவ்வளவாக தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள் என்றும் பாருங்கள். இன்றுள்ள நமது மத சம்பந்தமான முறைமைகளைப் பாருங்கள். தற்போதைய நிலையை அவர்கள் எப்படி அடைய முடிந்தது? அவர்கள் தேவனுடைய செய்தியை - விருந்துக்கு வரும்படி அவர் விடுத்த அழைப்பை - புறக்கணித்த காரணத்தால், அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதாக நீங்கள் கூற முடியுமா? தங்கள் ஜனங்களைப் புகை பிடிக்கவும், மற்றும் பல காரியங்களைச் செய்யவும் அனுமதிக்கும் அப்படிப்பட்ட வாழ்க்கை. 34அன்றொரு நாள் ஒரு குறிப்பிட்ட சபையில் ஒரு சிறிய அளவிலான லீக் கோட்டி அணி ஒன்று இங்கே ஒரு விளையாட்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. என் மைத்துனரின் மகன் அந்த அணிகளில் ஒன்றுக்கு பந்து வீசுபவன். அவன் அங்கு பந்து வீசிக் கொண்டிருந்தான். அந்த சபையின் விளையாட்டு கோஷ்டி அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. இந்த சிறுவர்களுடன் இங்கே நாம் இருக்கின்ற இடத்தைச் சேர்ந்த ஒரு சபையின் போதகரும் விளையாடினார். அவர் சிகரெட்டுகளை ஒன்றின் பின் ஒன்றாக புகைத்துக் கொண்டேயிருந்தார். நமக்கு - அருகாமையில் அந்த சபை உள்ளது. போதகர் இப்படி செய்யலாமா... அங்கு உட்கார்ந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கூட அதை கவனித்தனர். அவர் அதைக் குறித்து எந்த கவலையும் படாத நிலைக்கு அது அடைந்துள்ளது. எனக்குத் தெரிந்த ஒரு குறிப்பிட்ட பாப்டிஸ்டு சபை, ஞாயிறு ஆராதனையின் போது போதகரும் மற்றவர்களும் வெளியில் சென்று புகை பிடித்து, மறுபடியும் ஆராதனையில் கலந்து கொள்ள, பதினைந்து நிமிடம் இடைவேளை அளிக்கின்றது. அந்த சபையை நிறுவின ஜான் ஸ்மித், தேவன் எழுப்புதலை அனுப்ப வேண்டுமென்று கதறியழுது மிகவும் ஊக்கமாக ஜெபித்தன் விளைவாக, இரவில் அவருடைய கண்கள் வீங்கி, அவருடைய மனைவி அவரை மேசைக்கு நடத்தி சென்று, கரண்டியால் ஆகாரம் ஊட்டுவாராம். அவர் ஏற்படுத்திய சபை இந்நிலையை அடைந்துள்ளது என்று அவர் அறிய நேர்ந்தால், அவர் தன்னுடைய கல்லறையில் புரளுவார். அது என்ன? அவர்கள் வரும்படியாக அழைக்கப்பட்டு அவர்கள் அதைப் புறக்கணித்தனர். அது மாத்திரம் தான் அழைக்கப்பட்டவர்கள் வர மறுத்தால், அவருடைய விருந்தை அவர்கள் புசிப்பதில்லையென்று இயேசு கூறியுள்ளார். 35தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பி,ஒரு மனிதனுடைய கதவை அவர் தட்டி, அவன் வேண்டுமென்றே அதை புறக்கணித்தால், என்றாவது ஒரு நாள் அவன் கடைசி முறையாக அதை செய்ய நேரிடும். அப்பொழுது நீ சிலாக்கியம் பெற்ற ஒருவனாக இருக்க முடியாது. நீ ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டு சுவிசேஷத்தைக் கேட்டுஅதை ஆமோதிக்கலாம். ''அது சரியென்று எனக்குத் தெரியும்'' என்று நீ கூறலாம். ஆனால்அது உனக்கு உதவி செய்ய, நீ உன் விரலை அதன் மேல் போடமுடியாது. பாருங்கள்? நீ அதை கேட்க மாத்திரம் செய்யலாம். 'அது சரி யென்று நம்புகிறேன்'' என்று நீ கூறுகின்றாய்,அதனுடன் நீ அனுதாபம் கொள்கிறாய், அவ்வளவு தான். “அது பத்தாயிரம் டாலர்கள் என்று நம்புகிறேன்'' என்று நான் கூறலாம். அப்படி கூறுவதனால், அதைப் பெற்றுக் கொண்டேன் என்று அர்த்தமல்ல. பாருங்கள்? ''அது குளிர்ந்த நீர்'' என்று கூறி, அதை நான் பருக மறுக்கலாம். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? இது நித்திய ஜீவன். அதை ஏற்க மறுத்தால், ஒரு நாளில் நீ நியாயத்தீர்ப்புக்கும் இரக்கத்துக்கும் நடுவேயுள்ள கோட்டை கடந்து விடுவாய். அப்பொழுது, நீ வந்து அதை பெற்றுக் கொள்ளும் சிலாக்கியம்உனக்கு இராது. இங்கு வரும் ஜனங்களே... மற்ற போதகர்கள் உங்களிடம் என்ன கூறியுள்ளார்கள் என்பதற்கு நான் பொறுப்பல்ல, ஆனால் நான்கூறுவது உண்மையானால், அதற்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துள்ளதைக் காட்டிலும் அதிக பயனுள்ள வேறொன்று எது? 36இந்த மாத்திரையை உட்கொண்டால், நீங்கள் ஓராயிரம் ஆண்டு காலம் உயிர் வாழ்வீர்கள் என்று விஞ்ஞான ரீதியாய் நிரூபிக்கப்பட்ட ஒரு மாத்திரையை நான் விநியோகம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதைப் பெற்றுக்கொள்ள வரும் திரளான ஜனங்களை அவ்விடத்திலிருந்து வெளியே துரத்த, நான் இராணுவப்படையை அழைக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பீட அழைப்பு கொடுக்க வேண்டிய அவசியமிராது. நீங்கள் அவர்களை துரத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்தல்.... நித்திய பிதா தமது வல்லமையும்,தமது உயிர்த்தெழுதலையும் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து, அது உங்களுக்கு நித்திய ஜீவனை வாக்களித்திருக்கும் போது, நீங்கள் பெற்றுக் கொள்ளாமல் உங்களை விரட்டியடிக்க சாத்தான் தன்னுடைய லேகியோன்களை அங்கு நிறுத்துகிறான். பாருங்கள்? நீங்கள் அதைக்கண்டு, அது சரியென்று அறிந்து கொள்ள புத்தியுடையவர்களாயிருக்கலாம். ஆயினும் அதை நீங்கள் நிராகரிக்கக் கூடும். பாருங்கள்? ஏதோ ஒன்று. ஏதோ ஒரு விதமானசாக்கு போக்கு. “அதிக உஷ்ணமாயுள்ளது. எனக்கு அதிக களைப்பாயுள்ளது. நாளை செய்கிறேன்'' போன்ற ஒருவிதமான சாக்கு போக்கு. அதை மாத்திரமே அவர்கள் செய்கின்றனர். தேவன் சந்திக்கும் நாளை நீ புறக்கணிப்பதனால், அது உன்னை தேவனிடமிருந்து பிரித்துவிடுகின்றது. 37இப்பொழுது நாம் காண்கிறோம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் யூபிலி வருஷம் என்று ஒன்றிருந்தது. யூபிலி முழங்கும் போது, எல்லா அடிமைகளும் விடுதலை பெறலாம். ஆனால் அடிமை ஒருவன் விடுதலையாக மனமில்லாமல், தன் தேசத்திற்கு திரும்பி செல்ல விரும்பாமல், சாக்கு போக்கு ஏதாகிலும் கூறினால், அவன் ஆலயத்தின் கதவு நிலையின் அருகே கொண்டு செல்லப்பட்டு, அவனுடைய காது ஒரு கம்பியினால் குத்தப்பட்டு முத்தரிக்கப்படுகின்றது. அதன் பிறகு எத்தனை யூபிலி வருடங்கள் வந்தாலும், அந்த மனிதன் முழுவதுமாக விற்றுப் போடப்பட்ட காரணத்தால், அவன் இஸ்ரவேலின் குடிமகனாக ஒருக்காலும் திரும்பி வர முடியாது, அவன் என்ன செய்தான்? அவனுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை அவன் புறக்கணித்தான். அதற்கான கிரயத்தை அவன் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அடிமைத் தனத்தின் கடன் செலுத்தப்பட்டுவிட்டது. அவனுடைய குடும்பம் சுயாதீன நிலையையடைந்தது. அவன் தன் சொந்த தேசத்துக்குச் சென்று, தன் உடைமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவன் அப்படிசெய்ய மறுத்தால், அவனுக்கு இஸ்ரவேலில் எவ்வித பங்குமில்லை. அவனுடைய உடைமைகள் வேறொருவனுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த மாம்சத்துக்குரிய சம்பவம் ஆவிக்குரிய சம்பவத்துக்குப் பொருந்தும். நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க வேண்டியவர்களாகிய நாம் சுவிசேஷத்தைக் கேட்டு அது உண்மையென்று அறிந்தும், அதைப் புறக்கணித்து அதை ஏற்க மறுத்தால், நாம் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்கிறோம். 38யாரோ ஒருவர், “மிருகத்தின் முத்திரை ஒன்றுள்ளது, அது இனிமேல்தான் வரப்போகிறது'' என்று கூறினார். இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அது ஏற்கனவே வந்துவிட்டது. பரிசுத்த ஆவி விழுந்த அதே சமயத்தில், மிருகத்தின் முத்திரையும் போடத் தொடங்கப்பட்டுவிட்டது. பாருங்கள்? உங்களுக்கு இரண்டு காரியங்கள் மாத்திரமேயுள்ளன. ஒன்று, அதை ஏற்றுக் கொண்டு தேவனுடைய முத்திரையைத் தரித்துக்கொள்ளுதல், மற்றது அதை புறக்கணித்து மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுதல். தேவனுடைய முத்திரையை புறக்கணித்தல் என்பது மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுதலாம். எல்லோருக்கும் புரிகின்றதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) தேவனுடைய முத்திரையைப் புறக்கணித்தால் மிருகத்தின் முத்திரையைத் தரிக்க வேண்டும். ஏனெனில் தேவனுடைய முத்திரையைப் பெறாதவர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டதாக வேதம் கூறுகின்றது. எக்காளம் முழங்கினபோது, விடுதலையாக விரும்புகிறவர் அனைவரும் விடுதலையாகிச் செல்லலாம். அவர்கள் காதுகள் குத்தப்பட்டு முத்தரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மிருகத்தின் முத்திரை என்பது இனிவரப்போகும் காலத்தில் சம்பவிக்க வேண்டிய ஒன்று என்று நாம் கூறுவோமானால், அது அப்பொழுது முழுவதும் வெளிப்படையாகும். ஆனால் அந்த நேரத்தில், நீங்கள் ஏற்கனவே அதை தரித்து கொண்டுவிட்டீர்கள் என்பதை உணருவீர்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவியும் அதே விதமாகத்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமையில் வரும்போது அது முழுவதும் வெளிப்படையாகும். அப்பொழுது மறுரூபமாக்கும் வல்லமையை நாம் உணர்ந்து, மரித்தோர் கல்லறையை விட்டு உயிரோடெழுவதை நாம் காண்போம். நாமும் கூட ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாகி, அவருடையதைப் போன்ற ஒரு சரீரத்தை பெற்றுக் கொள்வோம். அப்பொழுது அது முழுவதும் வெளிப்படையாகும். அதை புறக்கணித்தவர் அனைவரும் அந்த நேரத்தில் கைவிடப்படுவார்கள். 39கிறிஸ்துவை சந்திக்க கன்னிகைகள் புறப்பட்டு சென்றதாக இயேசு கூறவில்லையா? அவர்களில் சிலர் முதலாம் ஜாமத்திலும், சிலர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமத்திலும் நித்திரையடைந்தனர். ஆனால் ஏழாம் ஜாமத்தில், “இதோ, மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள்” என்னும் சத்தம் உண்டானது. அப்பொழுது நித்திரையடைந்தவர்கள் - பெந்தெகோஸ்தே காலம் முதற்கொண்டு வெவ்வேறு காலங்களில் நித்திரையடைந்தவர்கள் - எழுந்தார்கள். பாருங்கள், ஏழாம் காலம், ஏழாம் சபையின் காலம் தொடங்கி அதற்கு முன்பிருந்த காலங்களில் நித்திரையடைந்தவர்கள் எழுந்தார்கள். இந்த சபை காலத்தில் உயிரோடிருந்தவர்கள் மறுரூபமாயினர். அவர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே செல்லும் அந்த நேரத்தில், உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் வந்து, ''நாங்கள் எண்ணெய் வாங்கிக் கொள்ள விரும்புகிறோம்'' என்றனர். ஆனால் அவர்களோ, “எங்களுக்கு மாத்திரம் தான் போதிய அளவு எண்ணெய் உள்ளது. விற்பவர்களிடம் போய் வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றனர். அவர்கள் இந்த எண்ணெயைப் பெற்றுக் கொள்ள முயன்று கொண்டிருந்த நேரத்தில் மணவாளன் வந்துவிட்டார். எபிஸ்கோபலியர், பாப்டிஸ்டுகள், மொதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் தற்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முயலும் ஒரு தருணத்தைப் போன்று வேறெந்த தருணமும் உலக வரலாற்றிலேயே கிடையாது. செய்தித்தாள்கள் இந்த செய்தியால் நிறைந்துள்ளன. உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முயல்கின்றனர் என்பதைக் குறித்து மத சம்பந்தமான செய்தித்தாள்கள் தேவனைத் துதிக்கின்றன. அது நேரிடாது என்று தேவனுடைய வார்த்தை கூறியுள்ளதென்று ஜனங்கள் உணருவதில்லையா? அவர்கள் திரும்பி வந்தபோது, மணவாளன் ஏற்கனவே மணவாட்டியைக் கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் நியாயத்தீர்ப்புக்கென்று புறம்பான இருளில் தள்ளப்பட்டனர். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தனர். எல்லோருமே விருந்துக்கு வரும்படி அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு காலத்திலும் தேவன் தமது வெளிச்சத்தை அனுப்பி வந்திருக்கிறார், அது புறக்கணிக்கப்பட்டது. 40இன்றைக்கும் மற்ற காலங்களைக் காட்டிலும் வித்தியாசமாக ஒன்றும் ஏற்படவில்லை. தேவன் சந்திக்கும் நாளை புறக்கணித்தல் என்பது... தேவன் சபைக்கும் ஜனங்களிடத்திலும் வரும்போது அதை உடனே ஏற்றுக் கொள்ளுங்கள். அதை அடுத்த ஆண்டு வரைக்கும், அல்லது அடுத்த எழுப்புதல் கூட்டம் வரைக்கும் தள்ளிப் போடாதீர்கள். அதுவே அந்த மணி நேரம். ''இப்பொழுதுதே இரட்சணிய நாள்''. தேவன் தமது செய்தியை எந்த காலத்திலும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தாமல் அனுப்பினதில்லை. இயேசு, “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாமற்போனால், என்னை விசுவாசியாதேயுங்கள். செய்தேனேயாகில், என்னை விசுவாசியாமல் போனாலும், கிரியைகளையாவது விசுவாசியுங்கள்'' என்றார். அது மிகத் தெளிவாக வெளிப்படுவதை நீங்கள் காணும்போது... அவள் அதைப் புறக்கணிக்கும் நேரம் வந்த போது, அவளுடைய காது கம்பியினால் குத்தப்படுகின்றது. அதன் பிறகு அவளால் கேட்கவே முடியாது. அவள் சபைகளின் சங்கத்தில் சேர்ந்து கொள்கிறாள். அவள் மிருகத்தின் முத்திரையைத் தரிக்க, அது அவளைக் கொண்டு செல்கிறது. 41புதிதாக வந்துள்ள போப்பாண்டவரின் மிகப் பெரிய விருப்பம் என்னவெனில், இப்பொழுது தான் இந்த செய்தித்தாளை ஒருவர் என்னிடம் கொடுத்தார், எல்லா சபைகளையும் ஒன்றாக இணைப்பதே என்று அவரே கூறியுள்ளார். இங்கு நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவர்கள் அதைச் செய்வார்கள். பிராடெஸ்டெண்டுகளும் அதில் சேர்ந்து கொள்வார்கள். ஏனெனில் சபையானது... வேதம் கூறுகின்றது; கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய பவுல், ''விசுவாசத் துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது. அவன் தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தி பூமியில் பாவங்களை மன்னிப்பான்'' என்று கூறியுள்ளான். அது எப்படி நேரிட்டது? விசுவாசத் துரோகம் முந்தி நேரிட்டு, சபையானது ஆவிக்குரிய விருந்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளாமல் இது நடக்காது. அப்பொழுது சபையில் வெளிப்பாடு தங்கியிருக்காது. 42இஸ்ரவேல் ஜனங்கள் இரவும் பகலும் அக்கினி ஸ்தம்பத்தை பின்பற்றி நடந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்கினிஸ்தம்பம் சென்றபோது, அவர்களும் அதனுடன் கூட சென்றனர். கவனியுங்கள், அது இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும், பகலில் மேகஸ்தம்பமாகவும் இருந்தது. எனவே அது இரவிலும் பகலிலும் வரலாம். ஆனால் அது எங்கிருந்தாலும், அவர்கள் அதைக் காணத் தவறக் கூடாதபடிக்கு ஒரு பலி செலுத்தப்பட்டிருந்தது. அது இரவில் வெளிச்சமாகவும், பகலில் மேகமாகவும் இருந்தது. அவர்கள் அதை பின் தொடர்ந்தனர். ஆம், ஐயா அதையே மார்டின் லூத்தர் கண்டார். அவர் என்ன செய்தார்? அவர் கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வெளியே வந்தார். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்களைச் சுற்றிலும் ஒரு வேலி அடைத்துக் கொண்டு, “நாங்கள் லூத்தரன்கள். அதுதான் இது'' என்றனர். அங்கிருந்து அது நகர்ந்து சென்றதை வெஸ்லி கண்டார். அவர் போய்விட்ட பிறகு, அவர்கள் என்ன செய்தனர்? அவர்களைச் சுற்றிலும் ஒரு வேலி அடைத்துக் கொண்டு, “இது தான் இது'' என்றனர். அப்பொழுது வெளிச்சம் என்ன செய்தது? தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. பெந்தெகொஸ்தேயினர் அதை கண்டனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் வெஸ்லியர்கள், நசரீன்கள் இவர்களிடமிருந்து வெளியே வந்தனர். ஆனால் அவர்களும் என்ன செய்தனர்? தங்களைச் சுற்றிலும் ஒரு வேலி அடைத்துக் கொண்டு, ''நாங்கள் ஒருத்துவக்காரர்'', ''நாங்கள் திரித்துவக்காரர்'', ''நாங்கள் யுனைடெட் பெந்தேகொஸ்தேயினர்'', என்று பல வகையாக தங்களை அழைத்துக் கொண்டனர். அவர் என்ன செய்தார்? தேவன் அவர்களை விட்டு வெளியே நகர்ந்தார். பாருங்கள், அப்படி நாம் செய்யக் கூடாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் நமது வழியில் அவரைப் பின்பற்ற வேண்டும். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வழி நடத்தப்பட வேண்டும். அப்படி அவரை நாம் பின்பற்றாவிட்டால், நாம் ஸ்தாபன வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறோம். நாள்தோறும் கிறிஸ்துவைப் பின்பற்றாத வாழ்க்கை தகுதியுள்ள வாழ்க்கையே அல்ல. 43ஒரு மனிதன் ஞாயிற்றுக் கிழமை மாத்திரம் கிறிஸ்தவனாயிருந்து, சபைக்குச் சென்று, இதை, அதை, மற்றதை செய்வதனால், அந்த சபையே அவனுக்குச் சொந்தமென்று நினைத்து, திங்கட்கிழமையன்று களவு செய்து பொய்யுரைப்பானானால்... ஸ்திரீ ஒருத்தி ஒழுக்கங்கெட்ட விதத்தில் ஆடைகளையணிந்தும், தெருக்களில் நடந்தும், பொது ஜன கடற்கரைகளுக்கு செல்வாளானால்... நான் நமது தேசத்தின் முதலாம் சீமாட்டியைக் குறித்து (ஜனாதிபதி மனைவியை - தமிழாக்கியோன்) சிந்தித்தேன். அவள் போப்பாண்டவரின் சமுகத்தில் செல்லும்போது, அழகுபடுத்தும் சாதனங்கள் கூட உபயோகிப்பதில்லை. ஆனால் அவள் திரும்பி வந்து 'வாட்டர் ஹெட்' கூந்தல் அலங்காரத்தை தேசத்திலுள்ள பெண்களுக்கு அளிக்கிறாள். ஒரு பெண் கர்ப்பிணியாயிருக்கும் போது உடுக்கும் ஆடைகளை இப்பொழுது எல்லா பெண்களும் உடுக்க விரும்புகின்றனர். அது உண்மை! இவை உதாரணங்களாம். அவர்கள் அவ்வாறு செய்வார்களென்று எனக்குத் தெரியும். அவர்கள் உலகத்தின் ஆவியைப் பெற்றுள்ளனர். அது ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு உரியதல்ல. ஸ்திரீகள் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கின்றனர். நீங்கள் சாராளையும், பழைய ஏற்பாட்டிலுள்ள மற்ற கண்ணியமுள்ள ஸ்திரீகளையும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 44அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு... அன்றொரு இரவு ஓரிடத்தில் நான், ஸ்திரீகள் தங்கள் கணவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். கீழ்ப்படிவதா? ஆம்! அது நீண்ட காலம் முன்பே விவாக ஆராதனை ஒழுங்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் ஒருக்காலும் கீழ்ப்படியப் போவதில்லை. இல்லை, ஐயா அவர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அவர்கள் கீழ்ப்படியப் போவதில்லை. ஆனால் நீங்கள் கீழ்ப்படியாமல் இருந்து கொண்டே, உங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அப்படி செய்யும் நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நீங்கள் எவ்வளவுதான் நடனமாடி, அந்நிய பாஷை பேசினாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் கணவருக்குக் கீழ்ப்படியாத வரைக்கும், தேவனுடைய சித்தத்துக்கு புறம்பாய் இருக்கிறீர்கள். குட்டை கால்சட்டை அணிந்து, இப்பொழுது பெண்கள் வீதிகளில் செய்து வரும் காரியங்களை செய்யும் பெண்ணே, உன்னை கிறிஸ்தவள் என்று அழைத்துக் கொள்ளாதே. உனக்கு உலகமும் வேண்டும், அதே சமயத்தில் உன் சாட்சியையும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று பார்க்கிறாய். தேவனுடைய சமுகத்தில் அப்படி நீ செய்யக் கூடாதென்று உனக்கு நன்றாகத் தெரியும். 45கவனியுங்கள் காது குத்தப்பட்டு, முத்தரிக்கப்பட்ட பின்பு, நீ கேட்கவே முடியாது. அது காதுகள் அடைக்கப்பட்டதற்கு அடையாளமாயுள்ளது. அதை நீ மறுபடியும் கேட்கவே முடியாது. நீ செவி கொடுக்கமாட்டாய். உன்னால் மறுபடியும் அதை கேட்கவே முடியாது. ஓ, அவள் அதை நம்பமாட்டாள். ஓ, என்னே அவள் நம்புகிறாள் என்று நீங்கள் என்னிடம் கூறாதேயுங்கள். அவள் உங்களிடம் நேரடியாகக் கூறுவாள். அவளுக்கு அது தெரியாது. எப்படி ஒரு பெண் (உங்களை நான் கேட்கிறேன்) - எப்படி ஒரு பெண்... சென்ற ஞாயிறு இரவு நான் பிரகாசிக்கும் சிகப்பு விளக்கைக் குறித்து பேசின விதமாக - பெண்கள் இப்பொழுது முன்பை விட மிகவும் அழகாயுள்ளனர். இதை நான் பெண்களுக்கு விரோதமாக கூறவில்லை, இது வெறும்... அவள் எப்படி அதை ஆதிக்கத்தில் கொண்டிருக்கிறாள் என்று பாருங்கள்... ஏவாள் மரத்துக்கு முன்னால் சோதனைக்குட்படுத்தப்பட்டது போல, இவளும் சோதனைக்குட்படுத்தப்பட அப்படியாகியிருக்கிறாள். 46ஒவ்வொரு மனிதனும் - தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு குமாரனும் - அந்த சோதனையின் மணி நேரத்தின் வழியாய் செல்ல வேண்டியவனாயிருக்கிறான். இது ஸ்திரீகளின் காலம். இந்த தேசம் அந்த சோதனையின் வழியாக செல்ல வேண்டும். ஒரு பெண் அழகாயிருந்து, அவள் சகோதரியைப் போல் நடந்து கொண்டால், கர்த்தருடைய ஆசீர்வாதம் அவள் மேல் தங்கியிருக்கும். ஆனால் அவள் அதை அறிந்தும் தன் உடலைக் காண்பித்தால், அவள் மேல் அசுத்த ஆவி தங்கியுள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. அவள் வேண்டுமென்று அப்படி செய்கிறாள் என்று நான் நினைக்கவில்லை அநேகர் வேண்டுமென்று அப்படி செய்வதில்லை, அவர்கள் அதை உணருவதில்லை. ஒழுக்கமுள்ள சிந்தையுடைய எந்த பெண்ணும், வீதிகளில் பெண்கள் உடுத்தி செல்வது போன்ற குறைவான ஆடைகளை உடுத்திக் கொள்வாள் என்று நீங்கள் என்னிடம் கூற முடியுமா? என்னுடைய இரண்டு வாலிபப் பெண்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த பெண்களில் ஏற்படும் விளைவு என்னவென்று எனக்குத் தெரியாது. அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இன்றைய வாலிபப் பிள்ளைகள் - நம்மால் சொல்ல முடியாது. எனக்குத் தெரியாது. அவர்கள் அதற்கு விலக்கு அல்ல. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சமுகத்தில் தங்கள் சொந்த கால்களில் நின்று கொண்டு பதில் கூற வேண்டியவர்களாயிருக்கின்றனர். என் விசுவாசத்தின் அடிப்படையில், அல்லது இவர்களுடைய தாய் என்ன விசுவாசிக்கிறாளோ அதன் பேரில் அவர்கள் சென்று கொண்டிருக்க முடியாது. இந்த பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது இந்த பெண்கள் இந்த ஆடையுடன் தெருவில் சென்று, ஒரு மனிதன் அவர்களைப் பார்த்து கேலி செய்தால், எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், அந்த மனிதனை நான் குற்றப்படுத்த மாட்டேன். அது உண்மை! நான் இந்த பெண்களையே குற்றப்படுத்துவேன். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு உரிமையே கிடையாது. 47கவனியுங்கள். ஒரு மனிதன், தான் மிருகத்தைத் தவிர வேறு எதுவுமில்லையென்றும், அவன் மிருக இனத்திலிருந்து தோன்றியவன் என்றும் அவர்கள் கற்றுக் கொடுப்பதை அனுசரித்து, தன்னை அவ்வாறே எண்ணிக் கொண்டால்... அவனை மிருகத்தைப் போல் அங்கு நிறுத்தினால்... சில நேரங்களில் நீங்கள் ஒரு ஆண் நாயை ஒரு பெண் நாயிடம் வேலிகளினூடாக மற்றும் எல்லாவற்றினூடாகவும் கூட்டிச் செல்கிறீர்கள், ஏனெனில் அந்த பெண் நாய் உடலுறவு கொள்ள வேண்டுமெனும் உணர்ச்சிவசப்பட்ட அந்த நிலைக்கு வந்துள்ளது. பன்றிகள், மாடுகள், எல்லா மிருகங்களும் அப்படித்தான்... நாம் மிருக இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தால் - சரீரப் பிரகாரமாக நாம் அப்படித்தான் இருக்கிறோம். ஒரு ஸ்திரீ தன் உடலை இவ்வாறு காண்பித்து சென்றால், அவளும் அந்த நாயின் நிலையையே அடைந்துள்ளாள் என்பதை அது நிரூபிக்கின்றது. அது முற்றிலும் உண்மை. இல்லையென்றால் அவள் அப்படி செய்யமாட்டாள், ஒரு மனிதன் அவளைப் பார்ப்பான் என்று இயற்கை கற்பித்துள்ளதை அவள் அறிவாள். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று என்று வேதம் கூறுகின்றது. 48அது சோதனையின் நேரமாக அமைந்துவிடுகிறது. பிசாசு பெண்களை அழகாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி, உங்களை சோதிப்பதற்காக அவர்களை அங்கு நிறுத்துகிறான். மனிதர்களே, உங்கள் தலைகளை திருப்பி நடந்து சென்றுவிடுங்கள். நீங்கள் தேவனுடைய குமாரரைப் போல் நடந்து கொள்ளுங்கள். பெண்களே, நீங்கள் தேவனுடைய குமாரத்திகளைப் போல் உடை உடுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் நீங்கள் விபச்சாரத்துக்காக உத்தரவு சொல்ல வேண்டியவர்களாக இருக்க வேண்டாம்... ஒரு ஸ்திரீ எவ்வளவு தான் களங்கமில்லாதவளாக இருந்தாலும்... அவள் ஒரு தவறும் செய்யாமல் இருந்திருக்கலாம். தவறு செய்ய வேண்டுமென்று அவள் மனதில் எண்ணாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு பாவி அந்த பெண்ணின் வசீகரமான உருவத்தைக் காணும் போது - அவன் ஆண் இனத்தை சேர்ந்தவனென்றும், அவள் பெண் இனத்தை சேர்ந்தவளென்றும் அறிந்துள்ளபடியால்; (அவனுக்கு ஆண் சுரப்பிகள் இருக்கின்றன, அவளுக்கு பெண் சுரப்பிகள் இருக்கின்றன) - அந்த பாவி அதற்காக நியாயத்தீர்ப்பு நாளில் பதில் கூற வேண்டியவனாயிருக்கிறான். யார் அதற்கு காரணம்? யார் குற்றவாளி? அவனல்ல, நீங்கள் பார்த்தீர்களா? ஒழுக்கம் கெட்ட நடத்தை! 49இந்த தேசத்தைப் பாருங்கள். பெண்கள் அணியும் முழங்கால் மேலுள்ள ஆடைகளைப் பெற நாம் ஆட்களை பாரிஸ் நகருக்கு அனுப்புவது வழக்கம். இன்று பாரிஸ் இவைகளை வாங்க இங்கே அனுப்புகிறது. அது மிகவும் ஆபாசமாகி, பாரிஸ் அதனுடன் போட்டியிட முடியவில்லை. அது உண்மை. அது முழுவதும்... ஏன்? சுவிசேஷத்தைப் புறக்கணித்தல். பாரிஸ் சுவிசேஷத்தை பெற்றிருக்கவில்லை அது, நூறு சதவிதம் கத்தோலிக்க மார்க்கம். பிராடெஸ்டெண்டுகள் அங்கு செல்லவே முடியாது, பில்லி கிரகாமைப் பாருங்கள். பாரிஸ்ஸிலுள்ள லட்சக்கணக்கானவர்களில், அறுநூறு பேர் மாத்திரமே கிறிஸ்தவர்கள் என்று நினைக்கிறேன் - அறுநூறு கிறிஸ்தவர்கள், பிராடெஸ்டெண்டுகள். அவர்கள் பரிசுத்த ஆவி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் முற்றிலும் பிராடெஸ்டெண்டுகள். லட்சோப லட்சக்கணக்கானவர்களில் அறுநூறு பேர். அதைப் புறக்கணிக்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஜனங்களிடம் சுவிசேஷம் உள்ளது. செய்தியும் சுவிசேஷமும் அற்புதங்களோடும் அடையாளங்களோடும் நிரூபிக்கப்பட்டதை இவர்கள் கண்ட பின்பும், அதை கேலி செய்து, அதை விட்டுவிலகுகின்றனர். ஏனெனில் ஏதோ ஒரு பழைய விபச்சாரக் கோட்பாடு அவர்களை ஒன்றாக இணைத்து, ஏதோ ஒரு போதகர் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, ஜனங்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து கவலை கொள்வதற்கு பதிலாக, டாலரைக் குறித்தும் ஆகார சீட்டைக் குறித்தும் கவலை கொள்கிறார் என்பதனால் அது உண்மை! அது தான் அவர்கள் அப்படி செய்ய காரணமாயுள்ளது. இப்பொழுது அவள் உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கிறாள். 50இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூடாரத்தில், ''அமெரிக்காவின் தேவதையை உங்களுக்குக் காண்பிக்கிறேன்'' என்னும் பொருளின் பேரில் நான் பிரசங்கித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அப்பொழுது இந்த பெண் நம்முடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அது தான் அது, இப்பொழுது அவர்கள்... அவர்கள் கேட்டதை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர். அவ்வளவு தான். இல்லை அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். இல்லை, ஐயா! அவர்கள் அமெரிக்க குடிமக்கள். எந்த விதத்திலும் நடந்து கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு, நான் விரும்புவது... இதை உங்களிடம் இப்பொழுது கூறுகிறேன், இப்பொழுது நான் உங்களிடம் கூறுகிறேன். இல்லை, ஐயா. அரசியல் ஒருபோதும் கிரியை செய்யாது. இல்லை, ஐயா, ஜனநாயகம் ஒரு போதும் கிரியை செய்யாது. ஜனநாயகம் எலும்புகள் வரை அழுகியுள்ளது. அது ஒரு கூட்டம் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்டால் நலமாயிருக்கும். ஆனால் அதை உலகத்தின் கைகளில் கொடுத்தால், அது எல்லாம் பாய்மரங்களாகவும், நங்கூரமில்லாததாகவும் ஆகிவிடுகின்றது. அது முற்றிலும் உண்மை. இன்றைய நிலையைப் பாருங்கள். இன்று என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவர்கள்... அவர்கள் அரசியல் செல்வாக்கை உபயோகித்து, கொலை செய்தும் கூட தப்பித்துக் கொள்வார்கள். 51அன்றொரு இரவு இரண்டு வாலிபர்களின் உயிரைக் காக்க முயன்றது குறித்து நான் பிரசங்கித்தேன். அவர்கள் குற்றவாளிகள். எனக்குப் பின்னால் இருந்த வழக்கறிஞரும், அவர்கள் குற்றவாளிகள் என்று ஆமோதித்தார். ''மக்களின் உயிரை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது'' என்றார். அவர், ''குற்றம் புரிந்தவர்களின் தஸ்தாவேஜுகளை நீங்கள் கவனிப்பீர்களானால், யார் மின்சார நாற்காலியில் கொல்லப்படுவது? பணக்காரர்கள் அல்ல. சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்த அவர்கள் போதிய வசதி படைத்தவர்கள். அவர்கள் இங்கு சில கேவலமான தந்திரங்களைச் செய்து, அங்கு செல்வாக்கை பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து, விடுதலையடைந்துவிடுகின்றனர். ஆனால் இவர்களைப் போன்ற ஏழை பையன்களுக்கு உணவு வாங்கக் கூட போதிய பணமில்லை. இப்படிப்பட்ட ஒன்றுமறியாதவர் தான் மரண தண்டனை பெற்று, மின்சாரம் பாய்ச்சப்பட்டு, கொல்லப்படுகின்றனர்'' என்றார். நான், ''உலகில் நடந்த முதல் கொலை, ஒரு சகோதரன் மற்ற சகோதரனைக் கொலை செய்ததாகும். அதற்காக தேவன் அவனுடைய உயிரை எடுக்கவில்லை. அவன் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டு, யாரும் அவனைக் கொன்று போடக்கூடாது என்றார். அது உண்மை! அவர் தான் மேலான நீதிபதி என்றேன். அந்த பையன்கள் மேல் விதிக்கப்பட்ட தண்டனை நீக்கப்பட்டது என்று கேள்விப்படுகிறேன். இப்பொழுது வேறொரு வழக்கு அவர்கள் மேல் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். அது பதினொறு ஆண்டுகள் சிறை வாசம். அவர்கள் திரும்பி வரும் உத்திரவாதத்தின் மேல் விடுதலை பெறலாம் (Parole). அவர்கள் குற்றவாளிகள். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளே. அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால் அவர்களுடைய உயிர் எடுக்கப்படக் கூடாது. ஒரு மனிதனின் உயிரை எடுக்க வேறொரு மனிதனுக்கு அதிகாரமில்லை. இல்லை, ஐயா எனக்கு அதில் நம்பிக்கையில்லை. நிச்சயமாக இல்லை. 52ஓ, அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் தேவனுடைய சித்தத்துக்கு அப்பாற்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் நம்புவது கிடையாது. ஏனெனில் அவ்வளவுதான் அவர்களுக்கு தெரியும். அவ்வளவு தான் அவர்கள் கேட்க விரும்புகின்றனர். அவர்கள் சத்தியத்துக்கு தங்கள் செவிகளை திருப்பிக் கொண்டனர். அவர்கள்... எகிப்தில் இருந்தவர்களும் கூட, அங்கிருந்த ஒரு கூட்டம் - உருளும் பரிசுத்தர்கள் தேவனுடைய சித்தத்தில் இருந்தனர் என்பதை அறிய விரும்பவில்லை. ஏதோ ஒரு பைத்தியக்காரன் தாடியை நீளமாக வளர்த்துக் கொண்டு வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்து, “பார்வோனே, நான் கர்த்தரின் நாமத்தில் வந்திருக்கிறேன், அவர்களைப் போக விடு'' என்று கூறினவனைக் குறித்து அறிந்துகொள்ள அவர்கள் எப்படி விரும்புவார்கள்? பார்வோன், ''நான் அப்படி செய்வதா?அவனை வெளியே தூக்கி எறியுங்கள்'' என்று சொல்லியிருப்பான். பாருங்கள்? “நான் அப்படி செய்வதா?'' ''அப்படி நீ செய்யவிட்டால், கர்த்தராகிய தேவன் இந்த தேசத்தை வாதிப்பார்.'' “புத்தி சுவாதீனமில்லாத அந்த கிழவனை வெளியே துரத்துங்கள். அவன் எங்காவது போகட்டும் - வெயிலினால் அவனுக்கு புத்திமாறாட்டம் ஏற்பட்டிருக்கும். பாருங்கள்? ஆனால் அது நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தது. ஏனெனில் அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசி. அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதைக் கொண்டிருந்தான். முற்றிலும் உண்மை! அவர்களோ அதை விசுவாசிக்க மறுத்தனர். ரோமாபுரியும் அதை விசுவாசிக்க மறுத்தது. ஆனால் அது நிறைவேறினது. 53அவர் மேசியாவென்று இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசிக்க மறுத்தனர். எப்படி அந்த கலிலேயர் கூட்டத்தினர். இவர்கள் எல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர் எப்படிப்பட்ட கூட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்? ஒன்றாக கூட்ட முடியும் மிக எளியவர்களுடன். அப்படிப்பட்ட கூட்டத்துடன் தான் அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஒன்றும் அறியாத இந்த ஏழை ஜனங்கள் தான் அவர் கூறுவதைக் கேட்க வருகின்றனர். அவர்கள் நம்மைப் போன்ற அறிவாளிகள் அல்ல. அவர்கள் ஏழை ஜனங்கள், என்றெல்லாம் கூறினர். இன்று நடக்கும் எழுப்புதல் கூட்டங்களைக் குறித்தும் அவர்கள் அப்படி தான் கூறுகின்றனர். ''எப்படிப்பட்ட கூட்டம் அவைகளைக் கேட்கின்றது? எப்படிப்பட்டவர்கள் அந்த கூட்டங்களுக்குச் செல்கின்றனர்? அவர்கள் எப்படிப்பட்ட ஜனங்கள்?'' என்றெல்லாம். 54அண்மையில் ஒருவர் இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்... அவர் ஒரு விதமான... அவர் ஹோப்பின் வளர்ப்பு தந்தை. அவரிடம் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன். அவர், ''உன்னிடமுள்ள கூட்டத்தாரைத் தவிர வேறு யார் இதை நம்புவார்? இன்னார் இன்னார் இந்த பட்டினத்திலேயே மிகவும் மோசமான ஒரு வர்த்தகர் தாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக என்னிடம் கூறட்டும், நான் நம்புவேன்'' என்றார். நான், “நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் ஒருக்காலும் அப்படி கூறமாட்டார் என்றேன்”. அவர் தேவனற்றவராய் உடனே மரித்துப் போனார். நீங்கள் செய்வதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் பேசுவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ள வாழ்க்கை அவசியம். அது உண்மை! 55இஸ்ரவேல் ஜனங்கள் அந்த கூட்டத்தாரை நம்பவில்லை, ''நசரேயனாகிய இயேசு என்னும் பெயருடைய அந்த பைத்தியக்காரன்.'' அவர் முறை தவறிப் பிறந்ததாக எண்ணியிருந்தனர்... ஜனங்கள் அதை நம்பினர். ஏனெனில் அவர்கள்... “ஏன், அவர் தந்தை யோசேப்பு, மரியாளுக்கு விவாகம் ஆகும் முன்பே அவள் கர்ப்பந்தரித்தாள். எனவே அவர் முறை தவறி பிறந்தவர். அவர் யார்? வெறும் பைத்தியக்காரன். அவர் கோமாளி பேர்வழி. அவர் பேசுவதைக் கேட்க செல்ல வேண்டாம்'' என்றனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்களுடைய ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இயேசு, “அவர்களை விட்டுவிடுங்கள். குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே'' என்றார். அது உண்மை. அவர்கள் அறியவில்லை. அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. எளிய ஜனங்கள், புறக்கணிக்கப்படும் எளிய செய்தியைக் கொண்டவர்கள், ஒரு பெரிய தேசத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணமாயிருக்கக் கூடும் என்பதை அவர்களால் காணமுடியவில்லை. எளிய, சாதாரண ஜனங்கள்... ''சாதாரண ஜனங்கள் இயேசுவின் உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்'' என்று வேதம் கூறியுள்ளதென்று உங்களுக்குத் தெரியும் (மத். 12:37. ஆங்கில வேதாகமத்தில், “The common people heard him gladly” என்று எழுதப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில், ''அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). 56அண்மையில் மெக்ஸிகோவில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. நான் நடத்தின கூட்டங்களில் ஒன்றில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜெனரல் வால்டினா என்பவரின் பாதையில் வெளிச்சம் பிரகாசித்தது. அந்த சிறந்த கத்தோலிக்க வீரர், மெக்ஸிகோவில் அப்பொழுது உயர்ந்த பதவியில் இருந்த தளபதிகளில் ஒருவர். அவர் தாழ்மையுடன் பீடத்துக்கு வந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் மெக்ஸிகோவுக்குத் திரும்பிச் சென்று, நான் அங்கு வர வேண்டுமென்று என்னை வருந்திக் கேட்டுக் கொண்டார். முடிவில் நான் அங்கு செல்ல தீர்மானித்தேன்; தேவன் என்னை அங்கு வழிநடத்தினார் - எனக்கு அதற்கான தரிசனம் கிடைத்தது. அதைக் குறித்து என் மனைவியிடம் கூறினேன். அங்கு நான் சென்றேன். அவர் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த படியால் - நான்கு நட்சத்திரங்களையுடைய தளபதி - அவர் அனுமதி பெறுவதற்காக தலைமை அலுவலகத்துக்கு - அரசாங்கத்தினரிடம் - சென்றார். அவர்கள் பிராடெஸ்டெண்டுகளுக்கு விரோதிகள் என்று உங்களுக்குத் தெரியும். இது வல்லமையான கூட்டமாயிருக்கும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் அங்கு சென்று பாதுகாப்பிற்காக அதிகாரிகளைப் பெற்றார். கூட்டம் நடத்துவதற்கென ஒரு பெரிய மைதானம் கொடுக்கப்பட்டது. அவர்கள் இந்த விதமாக என்னை அங்கு கொண்டு செல்ல எண்ணினர். அரசாங்க அழைப்பின் பேரில் அவர்கள் என்னை அங்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு பேராயர் - கத்தோலிக்க சபையில் சிறந்து விளங்கிய பேராயர்களில் ஒருவர் - ஆளுநரிடம் சென்று, “ஐயா, கத்தோலிக்கர் அல்லாத ஒருவரை நீங்கள் கொண்டு வர எத்தனித்துள்ளதாக கேள்விப்படுகிறேன்'' என்றார். அவர், “ஆம், அதனால் என்ன?'' என்றார். பேராயர், ''அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் கொண்டு வரக்கூடாது. இதற்கு முன்பு இந்த அரசு அவ்வாறு செய்ததில்லை'' என்றார். 57அவர், ''ஆனால் இந்த முறை செய்துவிட்டோம். அவர் பிரபலமான ஒருவர். அவர் பேசுவதைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வருவதாக கேள்விப்படுகிறேன். ஜெனரல் வால்டினா எனது நெருங்கிய நண்பர்'' என்றார். ஜனாதிபதியே பிராடெஸ்டெண்டு என்று உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு மெதோடிஸ்டு. எனவே அவர், ''எனக்குத் தெரிந்த வரையில் அவர் பிரபலமானவர். இங்குள்ள ஜெனரல் வால்டினா அவருடைய கூட்டத்தில் இரட்சிக்கப்பட்டார். அவர் பேசுவதைக் கேட்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடி வருவார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்'' என்றார். பேராயர், “ஐயா, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் தான் அப்படிப்பட்ட ஒரு மனிதன் பேசுவதைக் கேட்க வருகின்றனர்'' என்றார். ஜனாதிபதி, ''நீங்கள் அவர்களை ஐந்நூறு ஆண்டுகளாக வைத்திருந்தீர்களே. பின்னை ஏன் அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்?'' என்று கேட்டார். அவ்வளவு தான். அத்துடன் அது முடிவு பெற்றது. ஓ, என்னே அது அவரை மடங்கடித்தது. ஆம், ஐயா! ஆம்! 58மரித்து போன அந்த சிறு குழந்தை உயிர் பெற்றபோது, நான் அந்த மனிதனிடம் ஆள் அனுப்பினேன். அந்த பெண் ஸ்பானிய மொழியில், “குழந்தை காலை 9.00 மணிக்கு மரித்து போனது'' என்று கூறிக் கொண்டிருந்தாள். அடை மழை பெய்து கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு, கிறிஸ்துவினிடம் கொண்டு வரப்பட்டனர். அன்று முன்தின இரவு, வயோதிப குருடர் ஒருவர் மேடையின் மேல் பார்வையடைந்தார். இந்த கூடாரத்தின் அளவுக்கு மூன்று அல்லது நான்கு மடங்கு, இவ்வளவு உயரத்தில் பழைய சால்வைகளும், தொப்பிகளும் அங்கு கிடந்தன. அவர்கள் கயிற்றின் வழியாக என்னை உள்ளே இறக்கினார்கள். நான் அங்கு சென்று விசுவாசத்தினால் பிரசங்கிக்கத் தொடங்கினேன். பில்லி என்னிடம் வந்து, “அப்பா, அந்த பெண்ணுக்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும். அங்கு முன்னூறு வாயிற்காப்போர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்படியிருந்தும், நூறு பவுண்டு எடையுள்ள அந்த பெண்ணை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை'' என்றான். அவள் அழகான பெண். இவ்வளவு உயரமுள்ளவள். அது ஒருக்கால் அவளுடைய முதல் குழந்தையாக இருக்கலாம். அவளுக்கு இருபத்து மூன்று அல்லது இருபத்தைந்து வயதிருக்கும். 59அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள், அவளுடைய கூந்தல் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவள் கையில் குழந்தையை வைத்திருந்தாள். அவள் ஜெப வரிசைக்கு விரைந்து ஓடுவாள். அங்கு நின்று கொண்டிருந்தவர் அவளைப் பின்னால் தள்ளுவார். அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, அவர்கள் மேல் ஏறி, அல்லது அவர்களுடைய கால்களின் வழியாக புகுந்து வந்துவிடுவாள். அவர்கள் அவளை மேடையிலிருந்து உதைத்து தள்ளுவார்கள். அவளுக்கு கொடுக்க அவர்களிடம் ஜெப அட்டை இல்லை. பில்லி, ''அப்பா, மழையிலும் வெயிலிலும் இரண்டு மூன்று நாட்களாக மற்றவர்கள் அங்கு நின்று கொண்டிருக்கும் போது, ஜெப அட்டை இல்லாமல், மரித்துப் போன குழந்தையை வைத்திருக்கும் இவளை, அவர்களைக் காட்டிலும் முன்னால் அனுமதித்தால், அது சண்டை விளைவிக்கும்'' என்றான். நான், ''அது உண்மை தான்'' என்றேன். சகோ. மூர் அங்கிருந்தார். அவர் என்னைப் போன்ற வழுக்கை தலையுடையவர். நான், “அனுப்பலாம்...'' என்றேன். சில சகோதரர்கள். நமது கூடாரத்தை சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். அவர் இப்பொழுது மகிமையில் பிரவேசித்திருக்கிறார். அவருடைய பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. அவர் பின்னால் நின்று கொண்டிருந்தார். நான், ”சகோ. மூர், நீங்கள் கீழே சென்று அந்த குழந்தைக்கு ஜெபம் செய்யுங்கள். அது யாரென்று, நீங்களா நானா என்று அவள் அறியமாட்டாள். அவளுக்கு ஆங்கிலமும் பேசத் தெரியாது'' என்றேன். சகோ. மூர், “சரி, சகோ. பிரன்ஹாம்'' என்றார். 60அவர் கீழே செல்லப் புறப்பட்டார். நான் அவரிடம், ''நான் கூறின விதமாக கூறுங்கள்...'' என்றேன். அப்பொழுது ஒரு மெக்ஸிகன் குழந்தை எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சிரிப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். நான் உடனே, “ஒரு நிமிடம் பொறுங்கள், அந்த பெண்ணை உள்ளே விடுங்கள்'' என்றேன். பில்லி, ''அப்பா, என்னால் முடியாது. அவள்...'' என்றான். நான், “பில்லி, நான் தரிசனம் கண்டேன்'' என்றேன். அவன், “ஓ, அப்படியானால் சரி'' என்றான். எனவே நாங்கள் கூட்டத்தை விலக்கி, அவளை உள்ளே கொண்டு வந்தோம். அவள் கையில் ஜெப மாலையைப் பிடித்துக் கொண்டுவந்து முழங்கால்படியிட்டாள். நான், “எழுந்திரு'' என்றேன். நான், “பரலோகப் பிதாவே, நீர் என்ன செய்யப் போகிறீர் என்று தெரியவில்லை. இந்த குழந்தைக்கு ஜெபம் செய்து, அந்த பெண்ணை திருப்திபடுத்த வேண்டுமென்று நினைக்கிறீரோ என்னவோ தெரியாது. என்னவாயிருப்பினும், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த குழந்தையின் மேல் என் கைகளை வைக்கிறேன்'' என்றேன். அன்றொரு நாள் மரித்து தரையில் கிடந்த சகோ. வேவுக்கு நான் செய்தது போல். அப்பொழுது அந்த கம்பளித் துணி உதைப்பினால் அசையத் தொடங்கினது. குழந்தை அலறி அழுதது. அது மீண்டும் உயிர் பெற்றது. 61அந்த குழந்தை காலை 9.00 மணியளவில் மருத்துவமனையில் நிமோனியா ஜுரத்தினால் மரித்துப் போனது என்னும் உறுதிப் பத்திரத்தை வாங்குவதற்காக ஒரு ஆளை - சகோ. எஸ்பியோனாவை - அந்த பெண்ணுடன் மருத்துவரிடம் அனுப்பினேன். அப்பொழுது நேரம் இரவு 10 மணியாக இருந்தது. அவரும் மருத்துவரிடமிருந்து உறுதிப் பத்திரத்தை வாங்கி வந்தார். செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. எனவே அவர்கள் வந்து என்னைப் பேட்டி கண்டனர். நிரூபர்களில் ஒருவர், ''எங்கள் பரிசுத்தவான்களால் இதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார். நான், “அவர்கள் உயிரோடிருந்தால்'' என்று விடையளித்தேன். அவர்கள், “மரிக்காமல் யாரும் பரிசுத்தவானாகிவிட முடியாதே'' என்றனர். பார்த்தீர்களா? ஜனங்கள்... 62அன்றொரு நாள் இந்த கன்னியாஸ்திரீயைக் குறித்து பத்திரிகையில் ஜோடிக்கப்பட்ட செய்தியை படித்தீர்களா? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் மரித்து போனாள். அவர்கள் இப்பொழுது அவளை பரிசுத்தவாட்டியாக்கிவிட்டார்கள். அவள் மரித்தோரிலிருந்து எழுந்து வந்து, இரத்தபுற்று நோய் கொண்டிருந்த ஒரு நோயாளிக்கு ஜெபித்தாளாம். அது ஒரு பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அவர்களுடைய முன்னிலையில் அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கானோர் சுகம் பெறும் போது, அவர்கள் இப்படி ஒன்றை ஜோடிப்பதை சிந்தனை செய்து பாருங்கள். அது எதற்காக? பிராடெஸ்டெண்டு சபை அதை பெரிதாக எண்ணி, உள்ளே இழுக்கப்பட வேண்டும் என்பதற்காக. கர்த்தருடைய உண்மையான கிரியைகள் உறுதிபடுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டிருக்கும் போது, அதை வெளியிட ஒரு பத்திரிக்கைக்கும் தைரியம் வரவில்லை. அவர்கள் அழைப்பை பெற்றனர், ஆனால் அதை புறக்கணித்தனர். ஆம், ஐயா எளியவர்களைக் கொண்டுள்ள ஒரு எளிய செய்தியை அவர்கள் புறக்கணித்தால், அது அவர்கள் அழிவுக்குள் பிரவேசிக்க காரணமாயிருக்கும் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 63செய்தி நிரூபரான ஒரு கத்தோலிக்க பெண், என்னைக் குற்றப்படுத்தி செய்தித் தாளில் எழுத எண்ணி, சில நாட்களுக்கு முன்பு ஓரிகானிலுள்ள கிராண்ட்ஸ் பாஸ் என்னுமிடத்தில் என்னை பேட்டி கண்டாள். அவள் கையில் ஒரு பாக்கெட்டு சிகரெட்டுகள் இருந்தது. அவள், ''உங்களிடம் பேச வேண்டும்'' என்றாள். நான், ''நீ என்ன கேட்கப் போகின்றாய்?'' என்றேன். அவள், “உங்களுடைய மார்க்கத்தைக் குறித்து உங்களை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்'' என்றாள். நான், ''என்ன கேட்கப் போகின்றாய்?“ என்றேன். அவள், “நீங்கள் எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறீர்கள்?'' என்றாள். நான், “தெய்வீக அழைப்பை பெற்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' என்று விடையளித்தேன். அவள் சாமர்த்தியமாக குற்றப்படுத்திக் கொண்டே சென்றாள். நான், ''ஒரு நிமிடம் பொறு” என்றேன். அவள், அறியாமை கொண்ட இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தாரிடம் நான் தொடர்பு கொள்ள வேண்டுமானால், நான் கிறிஸ்தவளாக இருக்க ஒருபோதும் விரும்பமாட்டேன். அவர்கள்... ஒரு நாள் அவர்கள் இந்த உலகத்தை ஆளப் போவதாகக் கூறுகின்றனர். அப்பொழுது அங்கு நான் இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்'' என்றாள். நான், ''கவலைப்பட வேண்டாம், நீ அங்கு இருக்கவே மாட்டாய். அதைக் குறித்து நீ கவலைப்படவே வேண்டாம்'' என்றேன். அவள், “இந்த கூச்சலிடுதல் எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை'' என்றாள். நான், “நீ கத்தோலிக்க மதத்தை சார்ந்தவளென்று உரிமை பாராட்டிக் கொள்கிறாய் அல்லவா?'' என்றேன். அவள், “ஆம்” என்றாள். நான், “ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாளும் கூட, தேவன் அவளை ஏற்றுக் கொள்ளவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியைப் பெற வேண்டியிருந்தது. இவர்களைப் போலவே அவளும் அந்நியபாஷை பேசி, ஆவியில் நடனமாடினாள் என்று உனக்குத் தெரியுமா? நீ அவளைத் தேவனுடைய தாய் என்று அழைக்கிறாயே'' என்றேன். அவள், “அதெல்லாம் பொய்'' என்றாள். நான், “ஒரு நிமிடம் பொறு...'' என்று கூறி வேதாகமத்தைக் கையிலெடுத்தேன். ''நாங்கள் வேதாகமத்தைப் படிக்கக் கூடாது'' என்றாள். “அப்படியானால் எது சத்தியம், எது சத்தியம் அல்ல என்பதை எப்படி அறிந்து கொள்வாய்?'' என்றேன். அவள், ''என் சபையின் வார்த்தைகளை உண்மையென்று ஏற்றுக் கொள்கிறேன்'' என்றாள். நான், ''இது தேவனுடைய வார்த்தை. இது இங்குள்ளது. அதைப் படிக்க உனக்கு சவால் விடுகிறேன். மரியாள் மற்றவர்களுடன் மேலறையில், மற்றவர்களைப் போலவே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டாள். அவளை நீ தேவனுடைய தாய் என்று அழைத்து, இவர்களையோ அறிவீனமுள்ள, ஒன்றுக்கும் உதவாத கூட்டம் என்கிறாய். கவலைப்பட வேண்டாம். நீ அங்கே இருக்கமாட்டாய். அதைக் குறித்து நீ அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை, அதைக் குறித்து மாத்திரம் நீ கவலை கொண்டிருப்பாயானால். பெண்ணே, பாவமுள்ள உன் ஆத்துமாவைக் குறித்து கவலைப்படும்'' என்று கூறி அவளைப் போகவிட்டேன். 64இதையெல்லாம் சற்று யோசித்து பாருங்கள். ஒரு எளிய... தேவன் அதை மிகவும் எளிமையுள்ளதாக்குகிறார். இல்லையென்றால் எப்படி ஆகாப், யேசபேல் முதலானோர் எலியாவை ஒரு மந்திரவாதி என்றும், மரித்து போனவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவன் என்றும் கருத முடியும்? ஆகாபும் கூட, ''இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் இவன் தான்'' என்றான். அவன், “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா?'' என்றான். கோமாளியைப் போன்ற முகம் கொண்டு, ஆசாரியனுடைய அங்கி எதுவும் அணிந்திராத ஒரு மனிதனுடைய செய்தியை புறக்கணிப்பது அதை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும் என்று எப்படி ஒரு தேசம் நினைக்க முடியும்? மேன்மையும் கனமும் பொருந்திய பார்வோன்களைக் கொண்டு உலகத்தை அரசாண்ட எகிப்து (விஞ்ஞானம் போன்றவைகளில் உலகம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை), எண்பது வயதான, நீண்ட தாடியுடைய, தலை நரைத்த ,உயிருக்கு தப்பியோடின ஒரு மனிதன் புறப்பட்டு, ''அவர்களைப் போகவிடு, இல்லையேல் தேவன் இந்த தேசத்தை அழித்துப் போடுவார்'' என்னும் செய்தியுடன் வந்து, அவர்கள் அதைப் புறக்கணித்தால் அவர்களுக்கு கேடு விளையும் என்று எப்படி நினைத்துப் பார்த்திருக்க முடியும்? எப்படி பார்வோன்...? ''பார்வோனே, நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்''. 65பார்வோன், ''உனக்குக் கீழ்ப்படிவதா?'' என்றான். “ஒரு கிழவனை, விபரீத நடத்தையுடைய ஒருவனை, புறக்கணிப்பதால் தேசமே அழிந்துவிடுமா என்ன?” என்று அவன் நினைத்தான். ஆனால் அப்படியே நடந்தது. ஓ, என்னே! நாம் சற்று நேரம் நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் மெளனமாயிருந்து, ஜெபம் செய்து, சிந்தனை செய்வோம். நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கிருக்கிறோம்? மற்றொரு விஞ்ஞான காலத்தில் நாம் சிந்தித்து பார்ப்பது நல்லது. ஒருக்கால் நீங்கள் நிறுத்திவிட்டு ஜனங்கள் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் ஜெபம் செய்து, சற்று சிந்தனை செய்த பிறகு, அவர்களுக்கு நல்லுணர்வு ஏற்படுகின்றது. அது உண்மை. ஒரு கிறிஸ்தவன், ஒரு பெரிய மத சம்பந்தமான ஆதிக்கத்தை உருவாக்கும் ஆயுதமோ, அல்லது திருகு குறடோ அல்ல. மத சம்பந்தமான ஸ்தாபனத்தை நகர வைக்கும் ஒரு ஆயுதமல்ல கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என்னப்படுபவன்... அப்படிப்பட்டவன் கிறிஸ்தவன் அல்ல. கிறிஸ்தவன் கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டியவன். கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் வந்து, கிறிஸ்துவின் ஜீவன் அவனுக்குள் இல்லாமல், அவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது, கிறிஸ்துவின் ஜீவன் அவனுக்குள் வரும் போது, அது கிறிஸ்து வாழ்ந்த அதே வாழ்க்கையை அவனுக்குள் உருவாக்குகிறது, கிறிஸ்து செய்தவைகளையே அவனும் செய்கிறான். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்? கிறிஸ்துவுடன் கூட தனிப்பட்ட விதத்தில் கொண்டுள்ள தொடர்பைக் குறித்து. அது என்ன? உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா? பிரபலமான ஆண்களும் பெண்களும் எப்படி நடந்து கொண்டனர் என்பதை உங்களுக்குக் காண்பிக்க கருதி, இதை முன்னுரையாக கூறுகிறேன். 66மனிதன்... வேதம் கூறுகின்றது. கடந்த ஞாயிறு இரவன்று ஆதியாகமம் 6-ம் அதிகாரம் 4-ம் வசனத்தைக் குறித்த ஒன்றைக் கூற மறந்துவிட்டேன் என்பதை கவனித்தீர்களா? ஸ்திரீகளை மனைவிகளாகக் கொண்ட பிரபலம் வாய்ந்த மனிதர்கள் மறுபடியும் தோன்றுவார்கள் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும், பிரபலம் வாய்ந்த மனிதர்கள் ஸ்திரீகளைக் கொள்ளுதல் - மனைவிகளை அல்ல. அந்நிய மாமிசத்திற்குப் பின்னால் செல்லுதல். இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்ததைப் பாருங்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் பாருங்கள். எல்லாவிடங்களிலும் பாருங்கள். அது வேசித்தனத்தினால் நிறைந்துள்ளது. பெரிய மனிதர்கள், உயர்ந்த பதவியிலுள்ளவர்கள் பெண்களின் பின்னால் சென்று தேசத்துக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உயர் பதவியிலுள்ள அந்த மனிதனுக்கு, இராணுவத் தலைவர் போன்ற அவருக்கு அழகான மனைவி இருக்கிறாள். அவளுடைய புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த ரஷிய நாட்டு வேசியைப் பாருங்கள். அவள் பாலுணர்ச்சியைத் தூண்டும் ஆடைகளை அணிந்து, அவளுடைய பெண் மாமிசத்தை வெளியே காண்பித்தாள். அந்த மனிதன் அதில் விழுந்து போனார். இன்று நமக்குத் தேவை தேவனுடைய குமாரர்களே. அரசாங்கத்தில் தேவனுடைய குமாரர்கள் இருக்க வேண்டியது அவசியம். அது உண்மை! நல்ல தேவ பக்தியுள்ள ஒரு ராஜா இத்தகைய மோசமான செயல்களையெல்லாம் நிறுத்திவிடுவான். அங்கு செல்வாக்கை உபயோகிக்க வேண்டிய அவசியமிராது. தாவீது செய்தது போல. அவன் இப்படிப்பட்டவைகளை நிறுத்தினான். அவன் நிச்சயம் அப்படி செய்தான். அவன் ஒரு ராஜாவாயிருந்தான். 67தேவன் ராஜாவாயிருப்பதே சரியான முறை. தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு ராஜாவைப் பெறுவதற்கு முன்பே, சாமுவேல், ''தேவன் உங்களுடைய ராஜா. கர்த்தருடைய நாமத்தில் நான் உரைத்த ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா?'' என்று அவர்களைக் கேட்கவில்லையா? அவர்கள், ''நிறைவேறாமல் இருந்ததில்லை. நீர் கூறுவது உண்மை'' என்றனர். “என் ஜீவனத்துக்காக உங்களிடம் பிச்சைக் கேட்டிருக்கிறேனா?'' “இல்லை, நீர் அப்படி செய்ததேயில்லை''. ''நான் கர்த்தருடைய சமுகத்தில் உங்களிடம் உண்மையைத் தவிர வேறொன்றும் கூறவில்லை. தேவன் உங்கள் ராஜாவாயிருக்கிறார்'' என்றான். “ஓ, அதை நாங்கள் உணருகிறோம். சாமுவேலே, நீர் நல்லவரென்று அறிவோம். கர்த்தருடைய வார்த்தை உம்மிடத்திற்கு வருகிறது என்று விசுவாசிக்கிறோம். ஆயினும் எங்களுக்கு ஒரு ராஜா அவசியம்''. பாருங்கள்? அதை அவர்கள் பெற்றுக் கொண்டனர். பெந்தெகொஸ்தேக்கு எப்படியாயினும் ஒரு ஸ்தாபனம் தேவையாயிருந்தது. அதை அது பெற்றுக் கொண்டது. அது உண்மை! அது மற்ற சபைகளைப் போல் இருக்க விரும்பினது. நீங்கள் அதை தான் விரும்பினீர்கள் சரி, போய்க் கொண்டிருங்கள். அது தான் உங்களுக்குக் கிடைத்தது, ஆனால் தேவன் எங்கள் ராஜா. தேவன் எங்கள் ராஜா! ஆம், ஐயா! 68அது என்ன? கிறிஸ்துவின் காலத்திலிருந்த ஜனங்களைப் போலவே ஒவ்வொரு காலத்திலுமுள்ள ஜனங்கள் சாக்கு போக்கு கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர். இப்பொழுது ஒருக்கால் நீங்கள், “நான் மாடு வாங்கினேன். அது நல்ல ரகமா அல்லது நன்றாய் பால் கொடுக்கின்றதா என்று பார்க்க வேண்டும்'' என்று கூறமாட்டீர்கள். அப்படிப்பட்ட சாக்கு போக்கை ஒருக்கால் கூறமாட்டீர்கள். ஆனால், “நான் பிரஸ்பிடேரியன், நாங்கள் அதை நம்புவது கிடையாது, நான் பாப்டிஸ்டு, இத்தகைய காரியங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நான் ஒரு லுத்தரன்'' என்பது போன்ற சாக்கு போக்கை மக்கள் கூறலாம். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அப்படியானால் நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கூட்டம் ஜனங்கள் என்றே அர்த்தம். நீங்கள் லூத்தரன் விடுதி, பாப்டிஸ்டு விடுதி, பெந்தெகொஸ்தே விடுதி போன்ற ஒரு விடுதியைச் சேர்ந்தவர்கள். பெந்தெகொஸ்தே சபை என்று ஒன்று கிடையாது. பாப்டிஸ்டு சபை என்று ஒன்று கிடையாது. அது பாப்டிஸ்டு விடுதி, பெந்தெகொஸ்தே விடுதி, பிரஸ்பிடேரியன் விடுதி. சபை ஒன்று மாத்திரமே உண்டு. அதற்குள் நீங்கள் வர வேண்டுமானால், ஒரே ஒரு வழி உண்டு. அது பிறப்பின் மூலமாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சபைக்குள் பிறந்து, அவருடைய சரீரத்தின் அங்கத்தினராகவும், பரலோகத்தின் ஆவிக்குரிய பிரதிநிதியாகவும் ஆகிவிடுகின்றீர்கள். அப்பொழுது கிறிஸ்து உங்களுடன் இருந்து உங்கள் மூலம் ஜீவிக்கிறார் என்பதற்கு அதுவே அடையாளம். 69கிறிஸ்தவர்களே, ஓ, நீங்கள் தனிப்பட்ட விதத்தில் தேவனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய குமாரனாக ஆவதற்கு, நீங்கள் தேவனுடைய உறவினனாக இருக்க வேண்டும். நீங்கள் குமாரனாக இருக்க, அவர் உங்கள் பிதாவாக இருக்க வேண்டும். அவருடைய குமாரரும் குமாரத்திகளும் மாத்திரமே இரட்சிக்கப்படுகின்றனரேயன்றி, சபை அங்கத்தினர்கள் அல்ல. ஒன்று மாத்திரமே அதை உருவாக்க முடியும். அதுதான் மறுபிறப்பு. மறுபிறப்பு ஒன்று மாத்திரமே தேவனுடன் உறவையளிக்கும். அது சரியா? (சபையார் ஆமென் என்கின்றனர் - ஆசி) குமாரரும் குமாரத்திகளுமாக்கும். அது நிகழும் போது, மனிதர் இந்த கேள்விக்குப் பதில் கூற விரும்புகிறேன், “நாங்கள் மறுபடியும் பிறந்த பின்பு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கின்றனர். அநேகர் இக்கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். ”சகோ. பிரன்ஹாமே, அதன் பிறகு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று. நீங்கள் மறுபடியும் பிறந்தால், உங்கள் சுபாவம் முழுவதுமே மாறிவிடுகின்றது. ஒரு காலத்தில் நீங்கள் கவனம் செலுத்தின உலகத்தின் காரியங்களுக்கு நீங்கள் மரித்துவிடுகின்றீர்கள். 70“சகோ. பிரன்ஹாமே, நான் சபையைச் சேர்ந்த போதே அதை பெற்றுக் கொண்டேன்'' என்று நீங்கள் கூறலாம். சரி. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று தேவன் கூறியுள்ளார். ஆகவே அவர் இன்னமும் பிணியாளிகளை சுகப்படுத்துகிறார், அவர் இன்னமும் தரிசனங்களைக் காண்பித்து வருகிறார்... ''ஆனால், சகோ. பிரன்ஹாமே, என் சபை அதை விசுவாசிப்பதில்லை. அப்படியானால் நீ மறுபடியும் பிறக்கவில்லை. பாருங்கள்?நீங்கள் மறுபடியும் பிறந்திருக்க முடியாது. ஏனெனில் அந்த தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் இருக்குமானால்... நீங்கள் பிதாவின் ஜீவனைப் பெறுகின்றீர்கள். அந்த தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் இருக்குமானால், கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி உங்களுக்குள் இருக்குமானால், இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவன் இதை எழுதிவிட்டு, பின்பு உங்களுக்குள் வந்து அதை எப்படி மறுதலிக்க முடியும்? பாருங்கள்? அப்படி செய்ய முடியாது. அது ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று ஆமோதிக்கும். நீங்கள், ''நான் சபையில் நல்ல ஒரு அங்கத்தினன்'' என்று கூறுவீர்களானால், அதற்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. நான் அஞ்ஞானிகளைக் கண்டிருக்கிறேன்... ஆப்பிரிக்காவிலுள்ள என் கறுப்பு சகோதரர்களின் மத்தியில் உள்ள ஒழுக்கம், தொண்ணூறு சதவீதிகம் அமெரிக்க பெண்களிடையே காணப்படும் ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்றது. அங்குள்ள சில பழங்குடியினரிடையே, ஒரு வாலிப பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் விவாகம் ஆகவில்லையென்றால், அவள் ஓரளவு வளர்ந்த பிறகு யாரும் அவளை விவாகம் செய்து கொள்ளவில்லையென்றால், ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்று அவர்கள் அறிந்து கொள்கின்றனர். அவளை அவர்கள் புறம்பாக்குகின்றனர். அவள் பழங்குடியினரின் வர்ணத்தைக் கலைத்து விட்டு, பட்டினத்துக்குள் செல்கிறாள். அவள் துரோகியெனக் கருதப்படுகிறாள். ஒரு பெண்ணுக்கு விவாகமாகும் போது அவளுடைய கன்னித்தன்மை பரிசோதிக்கப்படும். அந்த சிறு கன்னித்திரை உடைந்திருந்தால், அதை செய்தது யாரென்று அவள் கூற வேண்டும். அவர்களிருவரையும் அவர்கள் கொன்றுவிடுகின்றனர். அந்த வழக்கம் அமெரிக்காவில் நிலவினால், அநேக கொலைகள் இங்கு நடந்திருக்கும் அல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அவர்களை நீங்கள் அஞ்ஞானிகள் என்று அழைக்கின்றீர்கள். ஓ, என்னே! சபை அங்கத்தினர்கள் என்று இங்கு தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு, சுத்தமாக வாழ்வது எப்படி என்று அவர்கள் கற்றுத்தர முடியும். அது உண்மை! தென் ஆப்பிரிக்காவில் நான் மேற்கொண்ட பயணங்கள் அனைத்திலும், ஒருவராவது பால்வினை நோயினால் அவதியுறுவதை நான் காணவில்லை. அவர்களிடையே அப்படிப்பட்ட ஒன்றில்லை. பார்த்தீர்களா? அது வெள்ளையர்களாகிய நம்மிடையே காணப்படும் அசுத்தமான வழிகளின் விளைவே. அது உண்மை! தேவனை விட்டு விலகி சென்றுவிட்டனர். 71நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, அதன் மூலம் உங்களுக்குள் வரும் ஆவியின் உதவியைக் கொண்டு, தேவன் என்ன செய்ய வேண்டுமென்று தமது வார்த்தையில் கூறியுள்ளாரோ, அதை நீங்கள் அப்படியே விசுவாசித்து அதன்படி எல்லாவற்றையும் செய்வீர்கள். நீங்கள் செய்ய வேண்டுமென்று வேதம் கூறியுள்ள ஒவ்வொன்றிற்கும், நீங்கள் “ஆமென்” என்று ஆணித்தரமாகக் கூறி ஆமோதிப்பீர்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் நீங்கள் இரவும் பகலும் சும்மாயிருக்க மாட்டீர்கள். அது உண்மை! அது உண்மை. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எப்பொழுதுமே ஆவியின் கனியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள், ''நான் அந்நிய பாஷை பேசுவேனா?'' என்று கேட்கலாம். நீங்கள் பேசலாம். அல்லது பேசாமல் இருக்கலாம். ''நான் கூச்சலிடுவேனா, நீங்கள் கூச்சலிடலாம்“, அல்லது கூச்சலிடாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றை மாத்திரம் நீங்கள் நிச்சயம் செய்வீர்கள். நீங்கள் ஆவியின் கனியைப் பெற்றிருப்பீர்கள். ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை. நீங்கள், “ஏய்ய்ய்!'' என்று சத்தமிடுகின்ற கோபத்தன்மை கொண்டிருக்க மாட்டீர்கள். அது உங்களுக்குள் இருக்குமானால், அது பரிசுத்த ஆவியை விஷமாக்கி, உங்களை அதனின்று விலகச் செய்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சண்டையிடுவீர்களானால், உங்களில் ஏதோ தவறுள்ளது. ஒரு குறிப்பிட்ட செயல் புரிவது தவறு என்று போதகர் உங்களுக்கு வேதத்திலிருந்து படித்துக் காண்பிக்கும் போது, நீங்கள் கோபங்கொள்ளும் நிலையையடைந்தால் அங்கு கிறிஸ்தவ மார்க்கம் இல்லவே இல்லையென்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது... அப்படியானால்... ''அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்'' என்று இயேசு கூறினார். பாருங்கள்? 72அது தேவனுடைய வார்த்தையாயிருந்து, தேவன் அவ்வாறு கூறியிருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆவி ஒவ்வொரு முறையும் அதனுடன் இணங்கும். உண்மையான பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகும். ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. “என் வசனங்கள் ஜீவனாய் இருக்கிறது'' என்று இயேசு கூறியுள்ளார். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்து, அவர் வார்த்தையாயிருப்பாரானால், வார்த்தை எப்படி வார்த்தையை மறுதலிக்க முடியும்? பாருங்கள்? அப்படியானால், நீங்கள் தேவனை எப்படிப்பட்டவராக செய்துவிடுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து உங்கள் சத்துருக்களை சிநேகிக்கும் போது மாத்திரமே, நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். நீ ஒரு கிறிஸ்தவன் என்று அறிந்து கொள்வதற்கு ஒரு காரியம் மாத்திரமே உள்ளது, அது தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நீ முழுவதுமாக இணங்கி நடக்க முடியும் போதுதான். “நீங்கள் உங்கள் விரோதியை நேசிக்கிறவர்களாக காணப்படுங்கள். யாரோ ஒருவர், அவர் உருளும் பரிசுத்தரரேயன்றி வேறொன்றுமல்ல'' என்று கூறினார். நீங்கள் அப்படிப்பட்டவர்களை கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள். அப்படி கூறினவரை நீங்கள் நேசிப்பீர்களானால், அவர்கள் என்ன செய்தபோதிலும், அவர்களை நீங்கள் நேசிப்பீர்களானால் (பாருங்கள்), அப்பொழுது நீங்கள்... 73உங்கள் பொறுமை அதிகமாகிக் கொண்டே வந்து, அதற்கு முடிவே இல்லாத அளவுக்கு ஆகிவிடுகின்றது. உங்களைப் பற்றி யாராகிலும் அவதூறாகப் பேசினால், “நீங்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை...'' என்று நினையுங்கள். அதற்காக கோபப்படாதீர்கள். உங்களுக்கு கோப உணர்ச்சி ஏற்பட்டால், அவர்களிடம் சண்டையிடுவதற்கு முன்பு, முதலில் போய் ஜெபம் பண்ணுங்கள். பாருங்கள்? ஆம்! அப்படிப்பட்ட சண்டைகளில் ஈடுபடாதீர்கள். அப்படி சண்டையிடுவதை விரும்பாதீர்கள். யாராகிலும் சபையில் எழுந்து நின்று, ''உங்களுக்குத் தெரியுமா? இன்னார், இன்னார் இதை செய்தார்'' என்று கூறுவாரானால். “சகோதரனே, அதை கூற உனக்கு வெட்கமாயில்லை'' என்று சொல்லி, அவரை நிறுத்திவிடுங்கள். அப்படி செய்வதற்கு பதிலாக, “ஓ, அப்படியா?'' என்று அந்த அவதூறை உன்னிப்பாக கேட்பீர்களானால் கவனியுங்கள், பரிசுத்த ஆவி ஒரு சாக்கடை குழியல்ல. பாருங்கள்? இல்லை, இல்லை, இல்லை! பரிசுத்த ஆவி தங்கியுள்ள இருதயம், பரிசுத்தம், தூய்மை முதலானவைகளால் நிறைந்துள்ளது. “அது தீங்கு நினையாது, தீங்கு செய்யாது, அது சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் சகிக்கும். பாருங்கள்? 74கோபப்படாதீர்கள். குடும்பத்தில் சண்டை எழுந்தால், அவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் சண்டையிடாதீர்கள். உங்கள் தாய், “நீ இனிமேல் அந்த சபைக்கு செல்ல அனுமதிக்கமாட்டேன். நீ என்ன... உன் கூந்தலை வளர்த்துக் கொண்டு, பாட்டியைப் போல் காணப்படுகிறாய்'' என்று பெண்களாகிய உங்களிடம் கூறுவார்களானால், அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ''சரி, அம்மா. பரவாயில்லை. நான் இப்பொழுதும் உங்களை நேசிக்கிறேன். நான் உயிருள்ள மட்டும் உங்களுக்காக ஜெபித்து வருவேன்'' என்று கூறுங்கள். பாருங்கள்? கோபப்படாதீர்கள். பாருங்கள்? கோபம் கோபத்தைப் பிறப்பிக்கும். முதலாவதாக, நீங்கள் கோபப்பட்டால், நீங்கள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தி, அதை உங்களை விட்டு விரட்டுகின்றீர்கள். பரிசுத்தஆவி உங்களை விட்டு சென்றுவிடுகின்றார். கோபம் கோபத்தைப் பிறப்பிக்கும். அன்பு அன்பைப் பிறப்பிக்கும். பாருங்கள்? அன்பினால் நிறைந்திருங்கள். இயேசு, ''நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்,'' என்றார். அன்பு பரிசுத்த ஆவியின் கனியாகும். 75நீங்கள் ஒரு சிறு சிருஷ்டிகர் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக. ஒரு சிலர் மத்தியில் நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள், ஏன் என்று உங்களுக்கே தெரிவதில்லை, அவர்கள் அன்புள்ளவர்கள். நீங்கள் அதை கண்டிருக்கிறீர்கள் அல்லவா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) மிகவும் தயவுள்ளவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள். அது அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும், உரையாடலின் மூலமாகவும் அவ்விதமான சூழ்நிலையை தங்களைச் சுற்றிலும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர். அதே சமயத்தில், நீங்கள் பழக விரும்பாதவர்களையும் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் எப்பொழுதுமே தீமை பேசுகின்றவர்கள். அவர்களுக்கு யாரைக் குறித்தாகிலும் பேசிக் கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் வருவதை நீங்கள் காணும் போது, ''அதோ அவர் வருகிறார், அவர் யாரைக் குறித்தாவது குற்றம் சொல்லப் போகின்றார். இதோ, அவர் வந்துவிட்டார். இந்த மனிதனைக் குறித்து அவர் குற்றம் சொல்வார்'' என்று நினைக்கிறீர்கள். அவர்களுக்கு ஆபாசமான நகைச்சுவை துணுக்குகளையும், பெண்களைக் குறித்தும், வேறெதாவதைக் குறித்தும் பேசுவதைத் தவிர வேறு வேலை எதுவும் கிடையாது. அப்படிப்பட்டவர் மத்தியில் நீங்கள் இருக்க விரும்புவதில்லை. பாருங்கள்? அவர்கள் இத்தகைய சூழ்நிலையை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காண்பதற்கு நல்லவர்கள் போல் இருக்கின்றனர். ஆயினும் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கின்றனர். நீங்கள் நினைப்பவை, செய்பவை, பேசுபவை அனைத்தும் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன. 76இந்த நகரத்திலுள்ள ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அவர் ஒரு அருமையான சபையின் தர்மகர்த்தாவாக அல்லது மூப்பராக இருக்கிறார். ஒரு விஷயமாக அவரைக் காண சென்றிருந்தேன். அங்கு ரேடியோ 'ராக் அண்டு ரோல் அல்லது டிவிஸ்ட்' இசையை உரக்கப் பாடிக் கொண்டிருந்தது. அங்கு நாற்பது நிர்வாணப் பெண்களின் படங்கள் இருந்ததென்று நினைக்கிறேன். அவர் மூப்பராக சிறந்த பணியாற்றுகின்றார் என்று நீங்கள் என்னிடம் கூற முடியாது. நீங்கள் என்ன காண்கிறீர்கள், என்ன படிக்கின்றீர்கள், எந்த விதமான இசையைக் கேட்கின்றீர்கள், எப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள் என்று நான் அறிந்தால், உங்களுக்குள் எந்த விதமான ஆவி உள்ளதென்று என்னால் சொல்ல முடியும், பாருங்கள்? ஆம்! ''நான் இன்னின்ன காரியங்களைச் செய்கிறேனா? அந்த கூட்ட ஜனங்கள்...“ என்று ஒருவன் கூறுவதை நீங்கள் கேட்கலாம். அவன் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அவனுடைய செய்கைகள் அவனுடைய பேச்சைக் காட்டிலும் உரக்க பேசுகின்றன. அவன் கிறிஸ்தவனென்று சாட்சி கூறலாம் (நிச்சயமாக!). அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவன் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறான் என்பதை சற்று கவனியுங்கள். அவன் யாரென்பதை அது புலப்படுத்தும்: 77நித்திய ஜீவனைப் பெற்றுள்ள மனிதன், “தெய்வீக சுகம் பெறுதல் என்பது பறவைகளுக்கேயுரியது. அது அநேக வருடங்களுக்கு முன்பாக இருந்தது. இன்று அப்படியொன்றுமில்லை” என்று கூறுவான் என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்து நமது மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்னும் சுவிசேஷத்திற்கு அது தகுதியுள்ள வாழ்க்கையா? நீங்கள், ''நான் ஒரு மூப்பன்'' எனலாம். நீங்கள் பேராயராகவும் இருக்கலாம். அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு பேராயர் ஷீன் இவ்வாறு கூறுவதை நான் கேட்டேன். அவர், “வேதத்தை விசுவாசித்து அதன்படி நடக்க முயலும் எவனும் சேற்றில் நடந்து கடக்க முயலும் மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்'' என்றார் பேராயர் ஷன். அவர் தொடர்ந்து, நான் பரலோகத்துக்குச் செல்லும்போது என்ன நடக்கும் தெரியுமா? நான் இயேசுவை சந்தித்து, ”நான் தான் பேராயர் ஷன்“ என்பேன். அவர், ”ஓ, ஆமாம். என் தாய் உன்னைக் குறித்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன், என்பார்'' என்றார். அஞ்ஞானம்! வார்த்தைக்கு விரோதமாய் தேவதூஷணம் சொல்லுகிறவன் மேல் தேவன் இரக்கமாயிருப்பாராக! நான் நியாயதிபதி அல்ல. பாருங்கள்? ஆனால் அந்த வார்த்தை சத்தியமாயுள்ளது. அது உண்மை. தேவனுடைய ஆவியானவர் தாம் எழுதியதை அடையாளம் கண்டுகொள்வார். அவர் தாம் எழுதியதன் மூலம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார். அது அவரைக் குறித்து பேசுகின்றது. நீங்கள் அதை விசுவாசிப்பதன் மூலம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றீர்கள். அது உங்கள் அடையாளச் சீட்டாகத் திகழ்கின்றது. மற்றவர்களுடன் சண்டையிட வேண்டாம். குடும்பத்தில் சண்டைகள் வேண்டாம். நான் கூறினது போல், அன்பு அன்பைப் பிறப்பிக்கும், கோபம் கோபத்தைப் பிறப்பிக்கும். 78இப்பொழுது, நாம் கவனிப்போம். இயேசுவை ஒரு நிமிடம் கவனியுங்கள். அவரே உங்களுக்கு மாதிரியாயிருக்கிறார். (நீங்கள் அதிக களைப்படையவில்லையென்று நம்புகிறேன்). கவனியுங்கள்! ஒரு நிமிடம் நாம் இயேசுவைப் பார்ப்போம். அவர் நமக்கு மாதிரியாயிருக்கிறார் என்று அவரே கூறியுள்ளார்: “நான் உங்களுக்குச் செய்தது போல, நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்''. இப்பொழுது கவனியுங்கள்! அவர் உலகத்திற்கு வந்த போது, அது வரைக்கும் இராத அவிசுவாசம் அப்பொழுது உலகத்தில் காணப்பட்டது. அதன் காரணமாக அவர் மெல்ல செயல்படவில்லை. அவர் வழக்கம் போல் பிரசங்கம் செய்து, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி வந்தார். அது அவரைத் தொல்லைப்படுத்தவில்லை. அவரைக் குற்றப்படுத்தினவர்கள் இருந்தனர். அவர் குழந்தையாயிருந்த முதற்கொண்டு சிலுவையில் மரிக்கும் வரைக்கும் குற்றப்படுத்தப்பட்டார். அது அவரை நிறுத்தினதா? இல்லை ஐயா! அவருடைய குறிக்கோள் என்ன? “பிதாவானவர் எழுதினவைகளை பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்வதே”. 79இயேசுவைப் பாருங்கள் நம்மை தாழ்த்த வேண்டுமென்று நாம் கூறுகிறோமே, தேவனே குழந்தை வடிவில் தோன்றி, ஒரு உசிதமான (decent) வீட்டில் பிறப்பதற்கு பதிலாக, சத்தமிடும் கன்றுக் குட்டிகள் இருக்கும் தொழுவத்திலுள்ள சாணக்குவியலின் மேல் பிறந்தார். அவர்கள் ஒரு காளையின் நுகத்தில் கட்டியிருந்த துணியை எடுத்து அவரைச் சுற்றினார்கள். ஏழைகளிலும் பரம் ஏழை, ஆயினும் வானத்தையும் பூமியையும் படைத்தவர். குளிரான, மழை பெய்து கொண்டிருந்த, ஒரு இரவில் அவர்கள், “எஜமானே, நாங்கள் உம்முடன் வீட்டுக்கு வருகிறோம்'' என்றனர். அவரோ, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; எனக்கோ தலை சாய்க்க இடமில்லை'' என்றார். யேகோவா தேவன் தம்மைத் தாமே தாழ்த்தி மனிதனாகி, உங்களையும் என்னையும் மீட்க பாவமுள்ள சரீரத்தில் தோன்றினார். அப்படியானால் நாம் எம்மாத்திரம்? அவரே நமக்கு மாதிரி. நான் எம்மாத்திரம்? நான் ஒன்றுமில்லை. 80ஒரு சிறு கூட்டத்தில் ஒருவரிடம் நான் இவ்வாறு கூறினேன். ''தேவனால் பிறந்த ஒவ்வொரு குமாரனும் முதலில் சோதிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட வேண்டும்'', என் சோதனையின் நேரத்தை நான் நினைவு கூறுகிறேன். அதுவே என் மகத்தான நேரம்... ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கும் போது, அவனுடைய நகம் அளவுள்ள குறிப்பிட்ட ஒரு சிறு இடத்தை தேவன் அவனுக்குள் நுழைக்கிறார். அது அவனுடைய இருதயத்துக்கு சென்று அங்கு தங்கிவிடுகின்றது. பிறகு சாத்தான் அவனை நிரூபிக்க முற்படுகிறான். அது அங்கில்லையென்றால் நீங்கள் முடிந்துவிடுவீர்கள். ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று வயதிருக்கும்; நான் ஒரு வாலிபன். என் தந்தை என் கரங்களில் மரித்துக் கொண்டிருந்தார். நானோ தேவன் சுகமளிப்பவர் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் தலை என் கையில் மேல் இருந்தது. நான் அவருக்கு ஜெபம் செய்து கொண்டிருந்தேன். அவர் கண்களைத் திருப்பி என்னைப் பார்த்துவிட்டு, தேவனை சந்திக்கச் சென்றுவிட்டதை நான் கண்டேன். அவரை நான் கொண்டு போய், என் சகோதரனின் பக்கத்தில் அடக்கம் செய்தேன். அப்பொழுது என் சகோதரனின் கல்லறையின் மேலிருந்த மலர்கள் வாடாமல் புதிதாக இருந்தன, நானோ தேவன் பிணியாளிகளை சுகப்படுத்துகிறவர் என்று பிரசங்கித்து வந்தேன். நான் பொது ஜன ஊழிய நிர்வாகத்தில் மணியொன்றுக்கு இருபது சென்டு ஊதியத்துக்கு பணிபுரிந்து வந்தேன். என் மனைவி ஷர்ட் தைக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாள். எங்களுக்கு இருந்த பதினெட்டு மாதம் குழந்தை பில்லிபாலுக்காகவும், எட்டு மாதங்களாக அவள் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த குழந்தைக்காகவும், எங்கள் குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவள் வேலை செய்து உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. சகோதரி வில்ஸன் தலையை அசைப்பதைக் காண்கிறேன். அது அவர்களுக்கு ஞாபகமிருக்கிறது; ராய் ஸ்லாட்டருக்கும் மற்றும் சில பழைய காலத்தவருக்கும். 81நான் என்ன செய்தேன்? கையில் ஒரு 'சான்ட்விச்சை' எடுத்துக் கொண்டு தெருவில் நடந்து, மின்சாரக் கம்பத்தை விட்டு கீழே இறங்கி, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சாட்சி கூறி வந்தேன். நான் மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடத்துக்குச் சென்று, நிர்வாகத்தாரின் அனுமதி பெற்று, அங்கிருந்த தொழிலாளிகளிடம், ''மனிதர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா? என் இருதயத்தில் ஒன்றை நான் கண்டு கொண்டேன்'' என்பேன். இரவில் பலசரக்கு அங்காடிக்கு செல்வேன். இரவில் வியாதியஸ்தர்களை சந்தித்து ஜெபம் செய்து, விடியற்காலை 2.00 அல்லது 3.00 மணிக்கு வீடு திரும்புவேன். சற்று நேரம் உட்கார்ந்து விட்டு, பணி உடைகளை அணிந்து கொண்டு, நாற்காலியில் அமர்ந்து கொண்டே காலை நேரம் வரைக்கும் இளைப்பாறிவிட்டு, எழுந்து சென்றுவிடுவேன். உபவாசித்து ஜெபித்ததின் விளைவாக நான் மிகவும் இளைத்துப் போய், முடிவில் என் காலணிகளைப் போட்டுக் கொண்டு மின்சாரக் கம்பத்தில் ஏற போதிய பெலன் கிடைக்கவேண்டுமென்று நான் ஜெபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தேவன் பெரியவர், தேவன் இரக்கமுள்ளவர், தேவன் அன்புள்ளவர் என்று ஜனங்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டேயிருந்தேன். ஆனால் இங்கோ என் தந்தை என் கரங்களில் மரித்து கொண்டிருந்தார். என் சகோதரன் ஏற்கனவே மரித்து போனான். நான் இந்த கறுப்பு நிறத்தோரின் சிறு பெந்தெகொஸ்தே சபையில் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, அவன் விபத்தில் கொல்லப்பட்டான், அவர்கள் என்னிடம் வந்து, “உம் சகோதரன் நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்தில் கொல்லப்பட்டார். ஒரு கார் அவர் மேல் மோதி அவரைக் கொன்றது'' என்றனர். என் சொந்த சகோதரனின் உடலிலிருந்து இரத்தம் வடிந்து, அவனுடைய ஷர்ட்டிலிருந்து இரத்தம் ஊற்றிக் கொண்டிருந்தது. அந்நிலையில் அவனுடைய உடலை நெடுஞ்சாலையிலிருந்து கொண்டு சென்று அடக்கம் செய்தேன். சில நாட்களுக்குள் என் தந்தை மரித்துப் போனார். என் மனைவியும் அங்கு படுத்துகிடந்தாள். 82இந்த கூடாரத்துக்கு வருவதற்காக நான் புறப்பட்டேன். இந்த மேடை இருக்குமிடத்தில் நான் நின்று கொண்டு, வெள்ளம் வரப் போகின்றது என்று, அது சம்பவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்தேன். கர்த்தருடைய தூதன் ஒரு அளவு கோலை எடுத்து, ஸ்பிரிங் தெருவில் இருபத்திரண்டு அடி உயரம் அளப்பதைக் கண்டேன். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் சான்டி டேவிஸ்ஸம் மற்றவர்களும் அதை கேட்ட போது, சிரித்தனர். அவர்கள், “1884-ம் ஆண்டில் அது எட்டு அல்லது பத்து அங்குலம் மாத்திரமே இருந்தது. பையனே, உன்னுடன் பேசுவது எது என்று கேட்டனர்”. நான், ''அது அப்படியே சம்பவிக்கும். ஏனெனில் நான் தரிசனம் கண்டேன். அது என்னிடம் அவ்வாறு கூறினது. எனவே அது சம்பவித்தே தீரும் என்றேன். இன்றைக்கு ஸ்பிரிங் தெருவில் இருபத்திரெண்டு அடி உயரம் தண்ணீர் இருந்ததன் அடையாளமாக ஒரு கோடு வரையப்பட்டுள்ளது. இந்த கூடாரத்தின் மேல் நான் படகு ஓட்டி சென்றதாக தரிசனம் கண்டேன்'' என்றேன். நான் அப்படியே செய்தேன். அச்சமயத்தில் என் மனைவி நோய்வாய்ப்பட்டாள். அவளுக்கு நான் ஜெபம் செய்தேன். நான் கூடாரத்துக்கு வந்தபோது ஜனங்கள் எனக்காக காத்துக் கொண்டிருந்தனர். நான், “அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்றேன். “ஓ, உங்கள் மனைவியா...'' நான், “அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்”, என்றேன். நான் அங்கு சென்று ஜெபித்தேன், ஜெபித்தேன், ஜெபித்தேன். என் கையை நீட்டினேன். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, “பில்லி, அன்று காலையில் அக்கரையில் நின்று கொண்டு உங்களை சந்திப்பேன், குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்து, வாசலில் என்னைச் சந்தியுங்கள்'' என்றாள். நான் அலறத் தொடங்கினேன். அவள், “பில், நான் அங்கிருப்பேன்” என்றாள். பாருங்கள். அவள் சென்றுவிட்டாள். அவளைச் சவக் கிடங்கில் கிடத்தி விட்டு, வீடு சென்று படுத்தேன். அப்பொழுது... சிறுவனான பில்லி பால் திருமதி ப்ராய் அவர்களுடன் தங்கிக் கொண்டிருந்தான். சகோ. ஃபிராங்க் என்னிடம் வந்து, “உங்கள் சிறு பெண் மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்றார். 83நான் ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன். டாக்டர் அடேயர் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். ''அவளுக்கு மூளை வியாதி கண்டிருக்கிறது. நீங்கள் அதை பில்லி பாலுக்கு கொண்டு செல்லும் கருவியாக அமைந்துவிடுவீர்கள்“ என்றார். என்னை அமைதிபடுத்த, அவர் நர்ஸிடம் சிகப்பு மருந்து ஒன்றைக் கொடுத்தனுப்பினார். அவர்களை நான் வெளியே அனுப்பிவிட்டு, அந்த மாத்திரையை ஜன்னலின் வழியாய் எறிந்துவிட்டு, பின் பக்கத்திலிருந்த கதவின் வழியாய் மெல்ல வெளியே சென்று, அடித்தளத்தை அடைந்தேன். அங்கு குழந்தை படுத்துக் கொண்டிருந்தாள், அது ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரி அறை. அவளுடைய சிறு கண்களின் மேல் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவைகளை விரட்டிவிட்டு, கொசுவலையை அவள் மேல் வைத்தேன், நான் முழங்கால்படியிட்டு, “தேவனே, என் தந்தையும் சகோதரனும் கல்லறையில் படுத்துக் கொண்டிருக்கின்றனர், அதன் மேலுள்ள பூக்கள் இன்னும் வாடிப் போகவில்லை, அதற்குள் இங்கு என் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறாள். கர்த்தாவே, அவளை எடுத்துக் கொள்ளாதேயும்'' என்று மன்றாடினேன். அவர், ''வாயை மூடு. உன் முறையீட்டைக் கேட்க மாட்டேன்'' என்பது போல் திரையை கீழே இறக்கிவிட்டார். அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார். அவர் என்னுடன் பேசாமலிருந்ததால், அது சாத்தானின் தருணமாகிவிட்டது. அவன், ''அவர் நல்ல தேவன் என்றாயே. அப்படியானால், நீ எதைக் குறித்து கூச்சலிடுகின்றாய்? நீ ஒரு வாலிபன். நகரத்தை சுற்றும் முற்றும் பார். நீ அறிந்துள்ள ஒவ்வொரு பையனும் பெண்ணும், உனக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். உனக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டுள்ளது'' என்றான். தேவன் இல்லையென்று அவனால் என்னிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அதை நான் கண்டிருக்கிறேன். எனவே, அவர் எனக்காக கவலை கொள்ளவில்லை என்று மாத்திரம் சொன்னான். 84நான் இரவு பகலாக தேவனிடம் இவ்வாறு கூறினேன்; ''நான் என்ன தவறு செய்தேன்? ஆண்டவரே, எனக்குக் காண்பியும். என் தவறுக்காக இந்த பேதை பெண்ணை கஷ்டப்படுத்த வேண்டாம்“. அவர் என்னை சோதிக்கிறார் என்று நான் அறியவில்லை. தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு புத்திரனும் சோதிக்கப்பட வேண்டும். நான், ''நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரியப்படுத்தும். நான் சரிபடுத்திக் கொள்கிறேன். நாள் முழுவதும், இரவு முழுவதும் பிரசங்கித்து, என் வாழ்க்கையை எப்பொழுதும் உமக்கென்று அர்ப்பணித்ததைத் தவிர வேறென்ன செய்தேன்?'' என்றேன். சாத்தான், “நீ கூறுவது உண்மை. அவர்கள் எல்லோரிடமும் அவர் சுகமளிப்பவர் என்று சொன்னாயே, ஆனால் உன் விஷயத்தில், உன் குழந்தை மரணத் தருவாயில் இருக்கும் போது, உன் முறையீட்டைக் கேட்கவும் கூட அவர் மறுக்கிறார். உன் மனைவி, காச நோயால் விளைந்த நிமோனியா ஜுரத்தால் மரித்துப் போனாள். அவர் புற்று நோயையும் கூட சுகமாக்க வல்லவர் என்றாயே, அவர் என்ன செய்தார்? அவர் நல்லவர் என்றும், அவர் மக்களுக்கு எவ்வளவு நல்லவராக இருந்து வந்திருக்கிறார் என்றும் கூறினாயே, உன் விஷயத்தில் என்னவாயிற்று?'' என்றான். அவன் கூறுவதற்கு செவி கொடுக்கத் தொடங்கினேன். அது புத்தியை உபயோகித்தல். ''அது உண்மை'' என்று நினைத்தேன். அவன், ''அவர் பேச வேண்டிய அவசியம் கூட இல்லை. அவர் உன் குழந்தையை பார்த்தால் மாத்திரம் போதும். அது உயிர் வாழும்'' என்றான். நான், ''உண்மை'' என்றேன். அவன், “நீ அவருக்கு எவ்வளவோ செய்தும் கூட, இதை தான் அவர் உனக்குச் செய்கிறார்'' என்றான். “அது உண்மை'' என்றேன். நான் யோசிக்கத் தொடங்கினேன். பாருங்கள், புத்தியை உபயோகித்து யோசனை செய்யும் போது, எல்லாமே உடையத் தொடங்குகிறது. அந்நிலையை நான் அடைந்த போது, ”நான் ஊழியத்தை விட்டுசென்று விடுகிறேன்'' என்று கூற ஆயத்தமானேன். ஆனால் யோசனை சக்திகள் அனைத்தும் உடையும் நிலையை அடையும் போது, அது நித்திய ஜீவனுக்கு வருகிறது, மறுபிறப்புக்கு. அது மாத்திரம் இல்லாமலிருந்தால், என்னவாயிருக்கும்? இப்பொழுது நாம் ஒருவரையொருவர் அறிந்து கொண்டுள்ள விதமாக, நாம் அறிந்து கொண்டிருக்க மாட்டோம். இந்த சபை இங்கு இருந்திருக்காது. உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான ஜனங்கள்... தேவனுக்கு, நன்றி, அது இருக்கிறது. 85அதன் பிறகு நான், ''நான் எம்மாத்திரம்? அவருடைய மகத்துவத்தைக் குறித்து கேள்வி கேட்க நான் யார்? இவ்வுலகில் எனக்கு ஜீவனை அளித்துள்ள அந்த சிருஷ்டிகரையே கேள்வி கேட்க நான் எம்மாத்திரம்?இக்குழந்தையை நான் யாரிடமிருந்து பெற்றேன்? யார் எனக்கு இதை கொடுத்தது? அது என்னுடையதல்ல. சிறிது காலம் அவர் அவளை எனக்கு கடனாக அளித்தார்'' என்று எண்ணினேன். நான், ''சாத்தானே, அப்பாலே போ“ என்று கூறிவிட்டு, சென்று என் குழந்தையின் மேல் கை வைத்து, ”இனியவளே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இன்னும் சிறிது நேரத்தில் அப்பா உன்னைக் கொண்டு போய் அம்மாவின் கரங்களில் சேர்ப்பார், தேவ தூதர்கள் உன் சிறு ஆத்துமாவை கொண்டு செல்வார்கள். அந்த காலையில் உன்னை நான் சந்திப்பேன்“, என்றேன். நான், “கர்த்தாவே, அவளை நீர் எனக்குத் தந்தீர், நீர் அவளைக் கொண்டு செல்கின்றீர். யோபு கூறினது போன்று, நீர் என்னைக் கொன்று போட்டாலும், நான் உம்மை நேசித்து, உம்மை விசுவாசிப்பேன். நீர் என்னை நரகத்துக்கு அனுப்பினாலும், உம்மை நான் நேசிப்பேன். அதை விட்டு நான் பிரிந்து சென்று விட முடியாது'' என்றேன். பார்த்தீர்களா? அது ஒரு அறிவு பூர்வமான யோசனை, அது சிதறி சென்றது. ஆனால் நீங்கள் தனிப்பட்ட ஒரு உறவைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். 86அதன் காரணமாகத்தான் போதகர்கள், சென்றுவிடுகின்றனர், பெரிய குற்றங்கள் மற்றும் காரியங்கள். அவர்கள், “தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இப்படிப்பட்ட ஒரு காரியங்கள் இல்லவே இல்லை என்று கூறுகின்றனர். இன்று காலை நான் கூறியது போல்”, அவர்கள் பரிசுத்த பூமியில் இருக்கவேயில்லை. அதைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியார்கள். அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை எப்படி மறுதலிக்க முடியும்? நீங்கள் எப்படி உங்களை கிரயத்துக்குக் கொண்ட பரிசுத்த ஆவியை மறுதலிக்க முடியும்? ஓ, ஞாபகம் கொள்ளுங்கள். இயேசு உங்களுக்காக தம்மை மரணபரியந்தம் தாழ்த்தினார். அவர் கோபங் கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய முகத்தில் துப்பின போது, அவர் மறுபடியும் துப்பவில்லை. அவர்கள் அவருடைய தாடியைப் பிடித்து இழுத்த போது, அவர்களுடைய தாடிகளை அவர் பிடித்து இழுக்கவில்லை. அவர்கள் அவருடைய கன்னத்தில் ஒரு பக்கம் அறைந்த போது, அவர்களுடைய கன்னங்களில் மறுபக்கத்தை அவர் அறையவில்லை. அவர் அவர்களுக்காக ஜெபம் செய்தார். அவர் தாழ்மையோடு நடந்தார். அவர் தாழ்மைக்கு உதாரணமாய் திகழ்ந்தார். அவர் விசுவாசத்தால் நிறைந்திருந்தார். ஏன்? அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறாது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் வார்த்தையைக் கொண்டு வாழ்ந்து, அவரே வார்த்தையாகிவிட்டார். ஓ தேவனே, இந்த சபையோரின் முன்னால் என் இரு கரங்களையும் கூப்புகிறேன். அது போல் நான் வாழட்டும். நானும் வார்த்தையும் ஒன்றாக ஆகட்டும். என்னுடைய வார்த்தைகள் இந்த வார்த்தையாக இருக்கட்டும். என் இருதயத்தின் தியானம்... அவர் என் இருதயத்திலும் சிந்தையிலும் தங்கியிருக்கட்டும். அவருடைய கற்பனைகளை என் அறிவாகிய கம்பத்தில் கட்டுவீராக, என் இருதயமாகிய கம்பத்தில் கட்டுவீராக, அவரை நான் காணட்டும். காரியங்கள் தவறாகும் போது, நான் அவரைக் காணட்டும். நான் ஆயத்தமாகி, சத்துரு எனக்கு கோபமூட்டும் போது, நான் இயேசுவைக் காணட்டும். அவர் என்ன செய்வார்? 87அவர் வார்த்தையில் அதிகமாக நிலைத்திருந்தபடியால், அவரும் வார்த்தையும் ஒன்றாகிவிட்டனர். கவனியுங்கள். அவர் கோபப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவரும் வார்த்தையும் ஒன்றே என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை என்றும், தேவனுடைய கட்டளை முடிவாக உலகத்தை வெல்லும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவருடைய வார்த்தை, அதை அவர் அறிந்திருந்தார். அவருக்கு விசுவாசம் இருந்தது. அவருடைய ஸ்தானத்தை அவர் அறிந்திருந்தார். அவர் விவாதித்து, ''நீங்கள் இங்கு வரலாம்'' என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பிசாசு அவரிடம், ''கவனியும், உம்மால் அற்புதங்களைச் செய்ய முடிகிறது. உமக்கு மகத்தான விசுவாசம் உள்ளது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். உம்மால் அற்புதங்களைச் செய்ய முடியும். நான் ஓரல் ராபர்ட்ஸ் பெற்றுள்ள கட்டிடத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய கட்டிடத்தை உமக்கு கட்டித் தருகிறேன். ஏனெனில் ஜனங்கள் உதாரத்துவமாய் கொடுப்பார்கள். நீர் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவெனில்... அவர்களுக்கு காண்பியும், இந்த கட்டிடத்தின் உப்பரிகையிலிருந்து தாழ குதியும். “உம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு, தூதர்கள் உம்மைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்” என்று எழுதியிருக்கிறதே என்றான். பாருங்கள்? அவருக்கு வல்லமை இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அவரால் அப்படி செய்ய முடியுமென்று அவருக்குத் தெரியும். அது அவருக்குள் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் தேவன் அவரிடம் கூறும் வரைக்கும், அவர் அதை உபயோகிக்க விரும்பவில்லை. பாருங்கள், அவர் தேவனாயிருக்கவும் வார்த்தையாயிருக்கவும் விரும்பினார். அவர் எதையாகிலும் பேசினால், அது தேவனுடைய வார்த்தையாயிருக்குமென்றும், வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அந்த வார்த்தை ஒரு நாளில் ஜெயங் கொள்ளுமென்றும் அவர் அறிந்திருந்தார். 88அவர் கோபப்படவோ மனந்தளரவோ இல்லை. அவர் தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் பேசினார். அவருடைய உதடுகளிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தது. நாமும் அவ்வாறு கூற முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ''என் வார்த்தையும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றே. அவர் அதை கெளரவப்படுத்துகிறார். ஏனெனில் அவர் முதலில் ஒன்றைக் கூறாமல், நான் எதையும் செய்வதில்லை?'' ஓ, அதுவே உங்களுக்கு மாதிரி. அதுவே சுவிசேஷத்திற்கு தகுதியுள்ள வாழ்க்கை. கல்வியறிவு பெற்று மெருகேற்றப்பட்டு, எல்லாவித மேன்மைகளையும் பெற்றிருந்து, சந்தை வெளியில் நின்றுகொண்டு நீண்ட ஜெபம் செய்து, விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, உயர்ந்தவர்களுக்கு சபைகளில் இடங்களை ஒதுக்கி, இப்படிப்பட்டவைகளைச் செய்த ஆசாரியர்களின் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாய் அமைந்திருக்கவில்லை. ஆனால் இயேசுவின் வாழ்க்கையோ சுவிசேஷத்திற்கு மிகவும் தகுதியுள்ளதாய் அமைந்திருந்த காரணத்தால், தேவன், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவி கொடுங்கள் என் வார்த்தை அவரே; அவர் என் வார்த்தையாயிருக்கிறார். அவரும் நானும் ஒன்றாயிருக்கிறாம்'' என்றார். 89இதை இப்பொழுது கவனியுங்கள். அவருடைய வார்த்தை முடிவில் உலகத்தை ஜெயிக்கும் என்று அவர் அறிந்திருந்தார். அவருடைய வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது ஒரு போதும் தவறாது என்றும் அவர் அறிந்திருந்தார். ஆகவே தான் அவர், ''வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தையோ ஒருக்காலும் தவறுவதில்லை“ என்றார். பாருங்கள்? அவரால் அவ்வாறு சொல்ல முடிந்தது. அவரும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றாக ஆன மனிதன் அவரே. அவர்களிடம் ''நீர் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும்“ என்று அவர்கள் அவரிடம் கூறினர். அவர், ''என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?'', பாவம் என்பது “அவிசுவாசம்”. நான், “தேவனுடைய விரலினால், பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை எதனால் துரத்துகிறார்கள்?'' என்றார். பாருங்கள், அது அதுவல்ல. அது வேறேதாகிலும் ஒன்றாக இருக்கவேண்டும். பாருங்கள்? அவர்கள், “நாங்களும் பிசாசுகளைத் துரத்துகிறோம்'' என்றனர். அவர், “நான் தேவனுடைய விரலினால் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையினால் அதை செய்தால், உங்கள் பிள்ளைகள் அதை எதனால் துரத்துகிறார்கள்? நீங்களே நியாயந் தீருங்கள்'' என்றார். அவருடைய காலத்திலிருந்த ஜனங்கள் அவரைப் பரியாசம் பண்ணி அவதூறாகப் பேசி, அவர்களால் முடிந்தவரை, எல்லா வகையிலும் அவரை நிந்தித்து, அவருக்கு விரோதமாக பொல்லாப்பான அனைத்தையும் கூறினர். ஆனால் அவரோ தொடர்ந்து சென்றார். இதை கூறி இன்னும் சிறிது நேரத்தில் முடிக்க விரும்புகிறேன். 90இந்நாட்களிலுள்ள ஜனங்கள் ஒருவகை நரம்பு வியாதி கொண்ட பயங்காளிகள் (neurotics). அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகின்றனர். அவர்களுடைய நவீன நிலையும், அவர்கள் பிரசங்கிக்கும் சமுதாய சுவிசேஷமும், இந்த மணி நேரத்துக்கான சவாலை சந்திக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர், சிம்சோன் தான் இருந்த நிலையில் சந்திக்க முடியாமலிருந்தது போல். அதற்கு தேவன் அவசியம். அதை வாக்குத்தத்தம் செய்தது இங்குள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு வருகிறேன். அந்த வார்த்தையில் சற்று நேரம் நிலைத்திருக்க விரும்புகிறேன். அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்ட போதிலும், அவர்கள் தேவனுடைய வார்த்தையின் ஸ்தானத்தில், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனக் கோட்பாடுகளை நுழைத்துவிட்டனர். அது மனிதனால் ஏற்படுத்தப்பட்டதால், அவர்களால் அந்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நேசிப்பதாக உரிமை கோரும் அந்த தேவனின் பேரில் அவர்களுடைய விசுவாசத்தை வைக்க அவர்கள் பயப்படுகின்றார். அது உண்மை. அப்படியிருந்தும், உங்கள் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதாகக் கூறிக் கொள்கின்றீர்கள்! அது இருக்கவே முடியாது. அவர்கள் ஸ்தாபன சபைகளின் அங்கத்தினராயுள்ளனர். அது சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதல்ல. அல்லவே அல்ல. 91சுவிசேஷம்... இயேசு, ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்றார். அவை விசுவாசிக்கிறவர்களைத் தொடருமென்பதை நீ மறுப்பாயானால், உன் வாழ்க்கை எப்படி? நீ ஒரு கெட்ட வார்த்தை ஒன்றும் பேசாமலிருக்கலாம், பத்து கற்பனைகளையும் கைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அது இன்னமும் சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாய் அமைந்திருக்கவில்லை. பாருங்கள், அது இருக்க முடியாது. ஆசாரியர்கள் இவைகளைக் கைக் கொண்டனர், ஆயினும் அது சுவிசேஷத்திற்கு தகுதியாயிருக்கவில்லை. அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்றார். அந்த ஆசாரியர்கள் குற்றம் புரிந்ததாக யார் சுட்டிக் காட்ட முடியும்? அவர்கள் ஒரு குற்றம் புரிந்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கப்படாமல் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். அவர்கள் பரிசுத்த மனிதர்கள் ஆயினும் இயேசு அவர்களை நோக்கி, ”நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்றார். சுவிசேஷம் வந்த போது... அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்ட போதிலும் அவர்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளில் நிலைத்திருக்க விரும்புகின்றனர். ஓ, அவர்களுடைய கோட்பாடுகள்... இந்த கோட்பாடுகள் இக்காலத்து நவீன மனிதர்களின் கருத்துக்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. இந்நாளில் ஒரு மனிதன் வெற்றி காண வேண்டுமானால், அவன் நவீன கருத்துக்களின் போக்கை பின்பற்ற வேண்டும். அதை மறுபடியும் நன்றாக, தெளிவாக கூற விரும்புகிறேன். மனிதனே, இந்நாளில் நீ வெற்றி காண வேண்டுமானால் இக்காலத்தில் காணப்படும் நவீன கருத்துக்களின் போக்கில் நீ செல்லவேண்டும். அது அவர்கள், “ஓ, அவர் இனியவர் அல்லவா? அவர் அருமையானவர் அல்லவா? அவர் நேரடியாக பிரசங்கம் செய்து எங்களை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. எங்கள் போதகர் இந்த விஷயங்களைக் குறித்து கூச்சலிட்டு எங்களைக் கண்டனம் செய்வதில்லை'' என்கின்றர். அந்த போதகருக்கு ஐயோ! இந்த பிரசங்க பீடத்தின் மேல் நின்று கொண்டு, இந்த நாளின் பாவத்தைக் கண்டும் அதற்கு விரோதமாக கூக்குரலிடாத மனிதனிடம் ஏதோ தவறுள்ளது. அவர் பிரசங்கிப்பதாக உரிமை கோரும் அந்த சுவிசேஷத்துக்கு அவர் தகுதியுடையவர் அல்ல, அது உண்மை! அவர்கள் இப்படி செய்து, சாக்குபோக்கு சொல்லி, “பாருங்கள், என் சபையோர்...'' என்கின்றனர். 92அண்மையில் ஒரு பெரிய ஸ்தாபன சபையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் வந்திருந்தார். அவர் ஒரு ஆய்வு புத்தகம் (thesis) எழுதிக் கொண்டிருந்தார். அவர், “நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என்றார். அவர், ”சகோ. பிரன்ஹாமே, எங்கள் ஸ்தாபனத்திலுள்ள நாங்கள் உம்மை நேசிக்கிறோம்'' என்றார். அது தேசத்திலுள்ள மிகப் பெரிய ஸ்தானங்களில் ஒன்று. உலகிலுள்ள மிகப் பெரிய ஸ்தாபனங்களில் ஒன்று எனலாம். அவர், “எங்கள் ஸ்தாபனத்திலுள்ள நாங்கள் உம்மை நேசிக்கிறோம்'' என்றார். அவர் ஜெபர்ஸன்வில்லுக்கே வந்திருந்தார். அவர், ”தெய்வீக சுகமளித்தலைக் குறித்து அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்'' என்றார். அவர் தொடர்ந்து, ''என் சபை உங்களிடம் ஒரே ஒரு தவறைத்தான் கண்டுள்ளது. நீங்கள் பெந்தெகொஸ்தேயினரிடம் அதிகம் தொடர்பு கொண்டுள்ளீர்கள்'' என்றார். பாருங்கள்? நான், “நல்லது, அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும், அவர்களை விட்டு விலக ஒரு தருணத்தை நான் எப்பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பட்டினத்திற்கு நான் வந்தால், உங்கள் சபை எனக்கு கூட்டங்களை ஒழுங்கு செய்ய நீர் உதவ முடியுமா?'' என்றேன். அவர், ''ஓ, அவர்கள் செய்யமாட்டார்கள்'' என்றார். நான், ''அப்படித்தான் நான் நினைத்தேன், அப்படித்தான் நான் நினைத்தேன்“ என்றேன். அவர், ''என் ஸ்தாபனம் அதை ஆதரிக்காது“ என்றார். அது, ''நான் மனைவியை விவாகம் செய்தேன், ஏர்மாடு வாங்கினேன்'' என்பது போன்று வேறொரு சாக்கு போக்கு. நீங்கள் எவ்வளவு டாக்டர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், உங்கள் ஸ்தாபனம் உங்களை எவ்வளவு உயர்வாக நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. அப்படிப்பட்ட ஒரு ஊழியம், இந்த வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாக இல்லை. அது உண்மை! 93அப்படிப்பட்ட ஒன்றின் சார்பில் இருந்து கொண்டு தன்னைக் கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ளும் எந்த ஒருஸ்தாபன அங்கத்தினனும், அவன் வாழும் வாழ்க்கை... ஸ்திரீகள் தலை மயிரைக் குட்டையாக வெட்டிக் கொண்டு, அவர்கள் அணியக் கூடாது என்று வேதம் கூறியுள்ள உடைகளை அணிகின்றனர். மனிதர் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக் கொண்டு, இப்பொழுது வாழ்ந்து வருவது போல் வாழ்ந்து, மது அருந்தி, சுருட்டு புகைத்து, அநேக முறை விவாகம் செய்து, சபையில் மூப்பர்களாகவும் போதகர்களாகவும் இருக்கின்றனர். ஜனங்கள் இப்படிப்பட்ட செயல்களை பொறுத்துக் கொண்டு, அவைகளை அனுமதிக்கின்றனர். அத்தகைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாக இல்லை. தொலைபேசியில் பேசி, சபையில் சண்டைகளை உண்டாக்குவது போன்ற செயலைப் புரியும் ஒரு ஸ்திரீயின் வாழ்க்கை, நாம் நடைமுறையில் காண்பிக்க வேண்டிய சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளதாக இல்லை. சபையில் பிரிவினை உண்டாக்கி, ஜனங்களிடையே சண்டை மூட்டும் எவருமே, நாம் பிரசங்கிக்கும் சுவிசேஷத்திற்கு தகுதியுள்ளவராக இருப்பதில்லை. அது முற்றிலும் உண்மை. அது தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு, உங்களை இத்தகைய செயல்களினின்று பாதுகாக்கும் வல்லமையை மறுதலிப்பதாகும். 94கவனியுங்கள். அவர்கள் அதை செய்வதில்லை. அவர்கள் அதை செய்யமாட்டார்கள். அவர்களுடைய சபைக்கு அதில் நம்பிக்கையில்லை என்னும் சாக்கு போக்கு அவர்களிடமுள்ளது. அவர்கள்... ஏன்... இயேசு இன்றிரவு ஒரு மனிதனின் இருதயத்தில் பேசி, “நீ சென்று முழு சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்பாரானால். ''என் சபை அதை ஆதரிப்பதில்லை, ஆண்டவரே, என்னை மன்னியும். எனக்கு ஒரு சிறந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் இந்த நகரத்திலுள்ள பெரிய சபைகளின் ஒன்றுக்கு போதகராக இருக்கிறேன், ஆண்டவரே. அங்கு உமது நாமத்தை நாங்கள் துதிக்கிறோம். ஆம், ஐயா. நாங்கள் நிச்சயம் செய்கிறாம். ஆனால் முழு சுவிஷேத்தை என்னால் பிரசங்கிக்க முடியாது'' என்பார். அதே சாக்குபோக்கு, அதே காரியம். எனவே அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையின் ஆவிக்குரிய விருந்துக்கு வருவதில்லை. ''பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்'' என்று இயேசு கூறவில்லையா? கழுகுகள், பருந்துகள் அல்ல, கழுகுகள். செத்து அழுகிப்போன மாமிசம் எங்குள்ளதோ, அங்கு பருந்துகள் கூடும். ஆனால் புதிதான், சுத்தமான மாமிசம் உள்ள இடத்தில் கழுகுகள் கூடும். பாருங்கள்? நிச்சயமாக. வார்த்தை - கழுகின் ஆகாரம் - எங்குள்ளதோ, அங்கு அவை கூடும். எனவே அழைக்கப்பட்ட ஆவிக்குரிய விருந்துக்கு அவர்கள் வருவதில்லை. ஒரு பெரிய எழுப்புதலுக்கு - ஆவிக்குரிய விருந்துக்கு - வரும்படியாக தேவன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அவர்கள் வந்தார்களா? இல்லை, ஐயா! இல்லை, ஐயா! அந்த அழைப்பை புறக்கணிப்பதா சுவிசேஷத்திற்கு தகுதியுள்ள வாழ்க்கை? அவர்கள் அவ்வாறு கூறிக் கொண்ட போதிலும். 95ஒரு மனிதன் அண்மையில் என்னிடம் வந்து மேசையில் அமர்ந்தார். அவர், ''சகோ. பிரன்ஹாமே, நான் கை நீட்டி (அவர் ஒரு பெரிய மனிதர்) உங்கள் கையை குலுக்க விரும்புகிறேன். உங்களை நான் நேசிக்கிறேன் (நான் ஒரு சபைக்கு சென்றிருந்த போது, அவருடைய பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்). உங்களை நான் நேசிக்கிறேன். நீர் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை விசுவாசிக்கிறேன்'' என்றார். நான், “நன்றி, டாக்டர், நானும் உங்களை நேசிக்கிறேன்'' என்றேன். அவர், ''சகோதரன் என்னும் முறையில் உங்களை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன். இங்கு அமர்ந்துள்ள என் சிறு ராணியை - என் மனைவியை - பார்த்தீர்களா? அவளை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?'' என்றார். நான், “ஆம்'' என்றேன். அவர், “புற்று நோய் கொண்டிருந்த அவளுக்கு மருத்துவர்கள் இரண்டு வாரங்கள் மாத்திரமே தவணை கொடுத்திருந்தனர். நீங்கள் நகரத்துக்கு வந்திருந்த போது அவளுக்காக ஜெபம் செய்தீர்கள், நீங்கள் மேலே நோக்கி ஒரு தரிசனத்தைக் கண்டு என்னிடம், 'கர்த்தர் உரைக்கிறதாவது', அவள் சுகமடைவாள்'' என்றீர்கள். ”அவளுடைய முதுகில் ஒரு பெரிய பாகம் குழி விழுந்திருந்தது. ஒரு பெண்ணின் மார்பத்தின் ஒரு பகுதி உள்ளுக்கு இழுக்கப்பட்டிருப்பது போல, அவளுடைய முதுகில், முதுகெலும்பு பகுதியில் இருந்தது. இன்று அதில் ஒரு சிறு புள்ளி கூட காணப்படவில்லை'' என்றார். அவர் தொடர்ந்து, “இதோ என் ராணி உயிருள்ளவளாய் இன்று உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நீர் விசுவாச ஜெபத்தை ஜெபித்ததற்காக, உம்மை நேசிப்பதைத் தவிர வேறென்ன நான் செய்ய முடியும்? நீர் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பதைத் தவிர வேறென்ன நான் செய்ய முடியும்? நீர் என்னிடம் என்ன நடக்குமென்று அப்படியே கூறினீரே. சகோ. பிரன்ஹாமே, உங்களுக்கு ஒரு திட்டத்தை நான் வைத்திருக்கிறேன். நான் மிகப் பெரிய பெந்தெகொஸ்தே சங்கத்தை சேர்ந்தவன்” என்றார். நான், “ஆம், ஐயா! எனக்குத் தெரியும்'' என்றேன். அவர், “சகோதரரிடம் அண்மையில் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், நான் உம்முடன் தொடர்பு கொண்டு, தேவனால் அளிக்கப்பட்ட இந்த ஊழியத்தை நீர் ஆற்றங்கரையிலுள்ள ஜனங்களிடம் கொண்டு சென்றது பெருத்த அவமானம்” என்று உம்மிடம் கூற வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். நான், ''அப்படியா?“ என்றேன். அவர், ''ஆம்! இந்த ஊழியம் முக்கியமான இடத்தை, பெரிய இடத்தை உயர்ந்த இடத்தை அடைய வேண்டுமென்றே தேவன் அதை அனுப்பினார்'' என்றார். 96அப்பொழுது பிசாசு பேசுவதை நான் கண்டேன், நான், “இந்த மலையிலிருந்து தாழக் குதியும். நீர் யாரென்பதை இந்த கட்டிடத்திலுள்ளவர்களுக்கு காண்பியும்'' என்று சாத்தான் கூறுவது என் நினைவுக்கு வந்தது பாருங்கள்?, பாருங்கள்? நான் இன்னும் சற்று நேரம் அவருடன் உரையாடலாம் என்று எண்ணினேன். பசுவுக்கு வேண்டிய அளவு கயிறு கொடுத்தால், “அது தன்னையே தூக்கிலிட்டுக் கொள்ளும்'' என்று என் தாயார் கூறுவதுண்டு. நான், “அப்படியா?'' என்று கேட்டேன். அவர், ''ஆம்! அது பெருத்த அவமானம். இன்று உம்முடைய நிலையென்ன? உமக்கு ஆகாரம் வாங்கிக் கொள்ளக் கூட முடியாத நிலையில் இருக்கிறீர். ஓரல் ராபர்ட்ஸ் போன்றவர்களைப் பாருங்கள். உமது ஊழியத்தில் நூறில் ஒரு பங்கை கூட அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அடைந்துள்ள உயர்ந்த நிலையை எண்ணிப் பாருங்கள்'' என்றார். நான், ''ஆம், அது உண்மை'' என்றேன். பாருங்கள்? அவர், ''என் குழு உம்மை ஏற்றுக் கொள்ளும். எங்கள் சகோதரரில் ஒருவராக உம்மை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அவர்கள் ஐக்கியத்துக்கு அடையாளமாக வலது கரத்தை உமக்குக் கொடுப்பார்கள். நாங்கள் ஒரு ஆகாய விமானத்தை உமக்காகவே வாடகைக்கு எடுத்து, உமக்கு வாரம் ஐந்நூறு டாலர்கள் சம்பளம் தருவோம். நீர் விரும்பினால் அதைக் காட்டிலும் அதிகமாகவே தருவோம். உம்மை தேசத்திலுள்ள முக்கியமான நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் அனுப்புவோம்'' என்றார். இது அரிசோனாவிலுள்ள பீனிக்ஸில் மேசையில் நடந்த உரையாடல். அவர், ''உமக்கு சம்பளம் தருவோம். வெளி உலகிலுள்ள மதிப்புள்ளவர்கள், உயர்ந்தவர்கள், பிரமுகர்கள் அப்பொழுது அறிந்து கொள்வார்கள். நீர் எப்பொழுதும் தாழ்ந்தவர்களைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறீர். எங்களிடம் உயர்ந்தோர் உள்ளனர். அவர்கள் கர்த்தருடைய கரத்தைக் காணட்டும். என் மனைவியை அவர்கள் கூட்டிச் செல்ல அனுமதிப்பேன். நீர் கூறும் காரியங்கள் நிறைவேறுகின்றன என்பது நிரூபிக்கப்படும்'' என்றார். 97நான், “ஆம், ஐயா. அது மிகவும் நன்றாயிருக்கும்'' என்றேன். பாருங்கள், டாக்டர் பட்டம் பெற்று, அநேக புத்தகங்களை எழுதியவர் அவர், இலக்கியத்தில் டாக்டர், சிறந்த எழுத்தாளர், அருமையானவர், ஆனால் அவருக்கு வேதம் தெரியவில்லை. அப்படிப்பட்ட கிரியைகளைச் செய்த தூதன் சோதோமுக்குள் செல்லவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் வெளியே அழைக்கப்பட்ட குழுவுடன் - ஆபிரகாமுடன் - தங்கியிருந்தார். இவருக்கு அது தெரியவில்லை. நான் சற்று நேரம் அங்கு அமைதியாயிருந்து, அவரைப் பேசவிட்டேன். அதில் என்ன கண்ணியுள்ளது என்பதை அறிய விரும்பினேன். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அவர், “நல்லது, சகோ. பிரன்ஹாமே. நாங்கள் இதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் கூறின ஒன்றே ஒன்று, நீங்கள் போதிக்கும் சில சிறு உபதேசங்களை தள்ளி வைத்து விட வேண்டும் என்பதே'' என்றார். நான், “சகோதரனே, உதாரணமாக'' என்றேன். அவர், “ஓ, நீங்கள் கொடுக்கும் ஞானஸ்நானம் போன்றவைகளை. நீங்கள் ஒருத்துவக்காரர் கொடுப்பது போன்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறீர்கள். அதைப் போன்ற சில சிறு காரியங்களை'' என்றார். அதற்கு நான், “ஓ, நான் கொஞ்சம் அதிகமாக போகிறேனாம்.” அவர் தொடர்ந்து, “நீங்கள் கூறும் அடிப்படையான அத்தாட்சி, பெண் பிரசங்கிகள், அதுபோன்று சிறு சிறு காரியங்கள்”. 98நான், ''ஆ, ஆ! ஒரு தேவனுடைய ஊழியக்காரன் மற்றொரு தேவனுடைய ஊழியக்காரனிடம் இவ்வாறு கேட்பதைக் குறித்து வியப்புறுகிறேன். நீர் என்னைப் புகழ்ந்து என்னை தீர்க்கதரிசியென்று அழைத்தீர். தேவனுடைய வார்த்தை - வார்த்தையின் வெளிப்பாடு - தீர்க்கதரிசியினிடத்திற்கு வருகிறது என்று தெரிந்தும் இவ்வாறு கேட்பதென்பது, டாக்டர் போப் அவர்களே, நீங்கள் பெற்றுள்ள ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக அமையவில்லை. தேவனுடைய ஊழியக்காரனாகிய நீர் மற்றொரு தேவனுடைய ஊழியக்காரனிடம், தன் உயிரினும் மேலாகக் கருதும் காரியங்களில் ஒப்புரவாக வேண்டுமென்று கேட்கிறீரே. அப்படி செய்யமாட்டேன். இல்லை, ஐயா“ என்றேன். அது என்ன? வாழ்ந்தாலும் இறந்தாலும், நித்திய ஜீவனின் விதையொன்றுண்டு - நீங்கள் பெரியவாயிருந்தாலும் இல்லாமற் போனாலும். 99அன்றொரு நாள் நான் ஓக்லோஹாமாலிலுள்ள டல்லரவின் வழியாக சென்றேன். இந்த இருவரையும் நான் அவமதிக்கவில்லை. நான் பார்த்தபோது, அங்கு ஒரு பெரிய படத்தை கண்டேன். அங்கு ஓரல்ராபர்ட்ஸ் கட்டும் புதிய கட்டிடம் எழும்பிக் கொண்டிருக்கிறது - போதகர்களுக்கு பயிற்சி அளிக்க வேதசாஸ்திரக் கல்லூரி. தர்மகர்த்தாக்களின் குழுவில் டீமாஸ் ஷிகரியான், சகோ. கார்ல் வில்லியம்ஸ், மற்றும் சிலர் இருக்கின்றனர். அது 5 கோடி டாலர்கள் மதிப்புள்ளது. கட்டிடத்தின் மதிப்பு மாத்திரம் 30 லட்சம் டாலர்கள் - பெந்தெகொஸ்தேவைச் சேர்ந்தவர். தேவன் அதிகமாக செய்திருக்கிறார். “நான் ஒரு வேதசாஸ்திரக் கல்லூரியை நிறுவுவதா? முதலாவதாக நான் அதற்கு விரோதமான கருத்துடையவன்'' என்று எண்ணினேன். 100நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது, வேறொரு பிரம்மாண்டமான நவீன கட்டிடத்தைக் கண்டேன். ஓரல் ராபர்ட்ஸ் கான்சாஸ் நகரத்தில் கிழிந்த ஒரு சிறு கூடாரத்தில் என் கூட்டத்திற்கு வந்ததை நான் நினைவு கூர்ந்தேன். அங்கு “டாமி ஆஸ்பார்னின் எதிர்கால வீடு'' என்று எழுதப்பட்டிருந்தது. முப்பது அல்லது நாற்பது லட்சம் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடம் அங்கு எழும்பிக் கொண்டிருந்தது. டாமி ஆஸ்பார்ன் மிகச் சிறந்த கிறிஸ்தவர்களில் ஒருவர், உண்மையானவர், தேவனால் அனுப்பப்பட்ட மனிதன். அவர் அந்த தெருவில் பயங்காளியான ஒரு சிறு பையனாக நின்று கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது. காரிலிருந்த அந்த சிறு பையனும் பெண்ணும்... அவர் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, பிசாசு பிடித்தவன் ஓடினபோது, நான் அங்கு நின்று கொண்டிருந்து அதைக் கண்டேன். நீர் அவனுடைய முகத்துக்கு நேராக உமது விரலை நீட்டி, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனை விட்டு வெளியே வா” என்று கூறுவதைக் கேட்டேன். அவன் உமது கால்களில் விழுவதைக் கண்டேன். அவன், “இன்று ஆறாயிரத்து ஐந்நூறு பேர்களின் முன்னிலையில் உன்னைக் குத்தி கீழே தள்ளுவேன்” என்று சப்தமிட்டான். நீர் குரலையும் கூட உயர்த்தாமல், “நீ தேவனுடைய ஆவிக்கு இன்றிரவு சவால் விட்டதால், என் கால்களில் விழும்படி கர்த்தரின் நாமத்தில் கட்டளையிடுகிறேன்” என்று கூறுவதைக் கேட்டேன். அவனோ, “யார் காலில் நான் விழுவேன் என்று உனக்குக் காண்பிக்கிறேன் என்றான்'', என்றார். நான், “சாத்தானே, அவனை விட்டு வெளியே வா'' என்று கட்டளையிட்டேன். அவன் குப்புற தரையில் விழுந்து என் பாதங்களைப் பிடித்துக் கொண்டான். டாமி ஆஸ்பார்ன், “சகோ. பிரன்ஹாமே, தேவன் தேவனாயிருக்கிறார். அவ்வளவு தான். நான் இரண்டு மூன்று நாட்களாக வீட்டிலேயே தங்கியிருந்தேன்” என்றார். அவர் அதை மறைப்பதில்லை. அதைக் கூற அவர் வெட்கப்படுவதில்லை, அவர், “எனக்கு சுகமாக்கும் வரம் உள்ளதென்று நினைக்கின்றீர்களா?'' என்று கேட்டார். நான், “டாமி, அதைக் குறித்து யோசனை செய்யாதே. நீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பப்பட்டாய். போய் பிரசங்கி, சகோ. பாஸ்வர்த்துடன் அங்கு செல்'' என்றேன். 101நான் அங்கு பார்த்தேன்... அவர்களிருவரும் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் நான் தொடங்கினேன். “ஓரல் ராபர்ட்ஸின் அலுவலகத்தில் ஐந்நூறு இயந்திரங்கள் இயங்குகின்றன. கடிதங்களை மனிதர் யாருமே தங்கள் கைகளில் தொடுவதில்லை. சென்ற ஆண்டு 40 லட்சம் டாலர்கள் அஞ்சல் வழியாய் அவருக்கு வந்தது'' என்று எண்ணினேன். உலகம் முழுவதிலும் கிறிஸ்தவ மார்க்கம் செலவு செய்யும் தொகையில் நாலில் ஒரு பங்கு தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு கிடைக்கிறது. என்ன ஒரு இடம்! அதைக் காண அங்கு சென்றேன். ஓரல் என் சகோதரன். அவரை நான் நேசிக்கிறேன். அவர் நல்லவர், அவரை நான் நேசிக்கிறேன். அவர் என்னை மேன்மையாக நினைக்கிறார், நானும் அவரை அவ்வாறே நினைக்கிறேன். ஆனால் வேத உபதேசங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் இணங்குவதில்லை. டாமி ஆஸ்பார்னும் சிறந்தவர். அவரை நான் மேன்மையாக நினைக்கிறேன். அவர் நான் சந்தித்த சிறந்தவர்களில் ஒருவர் டாமிஆஸ்பர்ன். இவ்விருவரும்... நான் அவர்கள் அலுவலகங்களுக்கு சென்று அவர்கள் பெற்றுள்ளதைக் கண்டபோது, அவர்கள் என் அலுவலகத்தை காண நேர்ந்தால் எனக்கு அவமானமாயிருக்கும் என்று எண்ணினேன். ஒரு சிறு தட்டெழுத்து இயந்திரத்தை உபயோகித்து, நாங்கள் கடிதங்களை அனுப்ப முயல்கின்றோம். காரில் இணைக்கப்பட்ட வண்டியில் (trailer) அப்பொழுது உட்கார்ந்து கொண்டு, ''எவ்வளவு பிரம்மாண்டமானது'' என்று மனதில் எண்ணினேன். நான் வெளியே நடந்து வந்து, “ஓரல் ராபர்ட்ஸின் எதிர்கால வீடு, டாமி ஆஸ்பார்னின் எதிர்கால வீடு, ஆனால் ஒருவர் மற்றவருடன் பேசுவதில்லை'', என்று எண்ணினேன். நான் காரில் சென்று கொண்டு, “என்னைக் குறித்து என்ன?'' என்று நினைத்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று, “மேலே நோக்கிப் பார்'' என்றது. நான், ''ஆம், ஆண்டவரே என் பொக்கிஷங்களை நான் பரலோகத்தில் சேர்த்து வைப்பேனாக. ஏனெனில் அங்கு தான் என் இருதயம் இருக்கிறது'' என்று எண்ணினேன். நான் அனுதாபத்தினால் அதை கூறவில்லை. அது நடந்தது என்பதனால் அதை கூறுகிறேன். அது உண்மையென்று தேவனறிவார். பாருங்கள்? உங்கள் பொக்கிஷங்கள் எங்கே உள்ளது? நீங்கள் பிரபலம் வாய்ந்த ஒருவராக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒன்று மற்றவர்கள். நீங்கள் பிரபலமாக இருக்க வேண்டாம் என்னும் நிலையை அடையுங்கள். கிறிஸ்துவுக்குள் எளிமையுள்ள சிறு ஊழியக்காரனாக இருக்க விரும்புங்கள். அதுதான் சரியான வழி. அவ்வளவு தான். 102சகோ. போஸ்ம் மற்றவர்களும் சிக்காகோவில் ஒரு சபையை அமைத்து வருகின்றனர். அந்த பிலதெல்பியன் சபையை அவர்கள் ஸ்தாபனத்திற்கு கொடுத்துவிட வேண்டியதாயிற்று. அவர்கள் கோட்டை பின்புறம் அணிந்து, டாக்டர் பட்டம் பெற்ற ஒருவரை போதகராக அமர்த்த வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தனர். நான் அவர்களிடம், “நீங்கள் பாதையை விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அந்த சபைக்கு உண்மையான போதகரை நீங்கள் அமர்த்த விரும்பினால், தன் பெயரையும் கூட சரியாக படிக்க முடியாத தாழ்மையுள்ள ஒருவரை, தேவனுக்காக தன் இருதயத்தில் அனல் கொண்ட ஒருவரை தெரிந்து கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருவரைத் தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் - உங்கள் மேல் அதிகாரம் செலுத்தி, உங்களை விரட்டி, உங்களை கடனுக்குள் ஆழ்த்தாமல் தேவனுடைய வார்த்தையினால் உங்களை போஷிக்கும் ஒருவரை'' என்றேன். எனவே, அவர்கள் ஆவிக்குரிய விருந்துக்கு வர மறுக்கின்றனர். நான் முடிக்க வேண்டும், நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் ஆறே நிமிடங்களில் நாங்கள் கூட்டத்தை முடித்துவிடுவோம். 103சிலர், “சகோ. பிரன்ஹாமே, ஜனங்கள் ஒருவகை நரம்பு வியாதியினால் அவதியுறும் பயங்காளிகள் (neurotics) என்று நீங்கள் கூறினதற்கு ஆதாரம் தாருங்கள். ஜனங்கள் பயங்காளிகள் அல்ல, அவர்கள் படித்தவர்கள்'' என்று கூறுவதைக் கேட்கிறேன். அவர்கள் படித்த பயங்காளிகள். அது உண்மை. ஆம்! ''அவர்கள் பயங்காளிகள் அல்ல, அவர்கள் படித்தவர்கள்'' உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பாருங்கள், உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் பயங்காளிகள் அல்லவென்றால், இன்று அவர்கள் புரியும் செயல்களுக்கு விளக்கம் தாருங்கள். அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுவது எதுவென்று கூறுங்கள் - அவர்கள் பயங்காளிகள் அல்லவென்றால் பாருங்கள்? ஒவ்வொருவனும் தன் ஸ்தாபனத்தை ஆதரித்து, பேராசை கொண்டவனாயிருக்கிறான். இயேசு அப்படி இருக்கவில்லை. அவர் எதைக் குறித்தும் அவசரப்படவில்லை. பாருங்கள் அவருக்கு பேராசை இருக்கவில்லை. அவர் நமக்கு மாதிரி. 104தேசத்தில் சட்ட விரோதமான குற்றங்கள். இந்த தேசத்தில் இதுவரை காணப்படாத குற்றங்கள் இப்பொழுது காணப்படுகின்றன. என்ன நேர்ந்தது? வாலிபர்கள், சபை அங்கத்தினர்கள் போதை மருந்து உட்கொண்டு ஏற்பட்ட விளைவினால் மற்றவர்களைக் கொல்கின்றார். மனிதர்கள் தங்கள் மனைவிகளையும் குடும்பத்தினரையும் கொன்று, குழந்தைகளை எரித்துப் போடுகின்றனர். இந்த குற்ற அலையை (crime wave) பாருங்கள். அவர்கள் போதை மருந்து உட்கொள்ளும் நரம்பு வியாதி கொண்டவர்கள் இல்லையா? அப்படியில்லையென்றால் வேறென்ன? அவர்களுடைய செயல்களைக் கவனியுங்கள். அதிகாரப் பைத்தியம் கொண்ட நாடுகள். ஒரு நாடு மற்ற நாடுகளைக் கைப்பற்றி, அவைகளை ஒரே கொடியின் கீழே கொண்டு வந்து ஒரே நாடாக்க முனைகிறது. அதிகாரப் பைத்தியம். கெட்ட நடத்தை. உலகமானது இதுவரை இல்லாத அளவுக்கு கெட்ட நடத்தை கொண்டுள்ளது. பெண்கள் நிர்வாணிகளாக தெருக்களில் நடந்து செல்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு புத்தி மாறாட்டம் எதுவுமில்லையென்று கூறிக் கொள்கின்றனர். அது ஒருக்காலும் அப்படி இருக்க முடியாது!ஒருக்காலும் இருக்க முடியாது. 105கவனியுங்கள். நிர்வாணியாயிருந்த ஒரு மனிதனைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் லேகியோன். இயேசு அவனைக் கண்டு அவனுக்கு சரியான புத்தியைக் கொடுத்தபோது, அவன் உடைகளை அணிந்துகொண்டான். அது உண்மை. உங்கள் உடைகளைக் களையச் செய்வது எது? பிசாசு. அது உண்மை! நீங்கள் நரம்பு வியாதி கொண்டவர்கள் அல்லவென்றீர்களே! இந்த தெருவிலிருந்து புறப்பட்டு, நான்கு பிளாக்குகள் வரைக்கும் காரோட்டி சென்று, அதற்குள் நிர்வாணியான ஒரு பெண்ணையும் நீங்கள் காணவில்லையென்றால், திரும்பி வந்து என்னிடம் கூறுங்கள். பாருங்கள்? சரி, நீங்கள் பாருங்கள். அப்படியிருந்தும் கூட, அவர்கள் நரம்பு நடுக்கம் கொண்டவர்கள் அல்லவென்று நீங்கள் எப்படி கூறலாம்? அப்படியானால் என்ன கோளாறு? அவர்களுக்கு புத்தி சுவாதீனம் இல்லை. புத்திமாறாட்டமில்லாத ஒரு பெண் அப்படி செய்யமாட்டாள். அவளுக்கு புத்தி சுவாதீனம் இருக்கும். அவள் தன்னை எதற்கு ஒப்புக் கொடுக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும். தெருக்களில் ஒரு கூட்டம் இச்சைக் கொண்ட பிசாசுகள் - அசுத்தமான, குடித்து வெறித்த மனிதர்கள், கொலைகாரர்கள், எல்லோரும, அப்படியிருந்தும் நீங்கள்... உலகம் இப்பொழுது அதிக மதுவை உபயோகிக்கிறது. அமெரிக்காவில் மளிகை பொருட்களுக்கு செலவிடுவதைக் காட்டிலும் மதுவுக்கு அதிக பணம் செலவிடுகின்றனர். நான் நினைக்கிறேன் அது... ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் மது கடன் எத்தனை மடங்கு அதிகரிக்கிறது என்பது எனக்கு மறந்துவிட்டது. மது அருந்துதல் என்ன செய்கிறது? உங்களைப் பைத்தியக்கார விடுதிக்கு அழைத்து செல்கின்றது. 106புற்று நோய். உலகம் முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் பத்திரிகைகளில், ''வண்டி வண்டியாக புற்று நோய்'' என்று எழுதி உங்களுக்கு அறிவித்த போதிலும் - சிகரெட்டுகள். அவர்கள் எலிகளின் மேல் பரிசோதனை நடத்தி, புகை பிடிப்பதால் நுரையீரல் புற்று நோய் உண்டாகின்றது என்று நிரூபித்துள்ளனர். நுரையீரல் புற்று நோய் கொண்டவர்களில் எழுபது சதவிகிதம் பேர், புகை பிடித்த காரணத்தால் அதை கொண்டுள்ளனர். இருப்பினும் பெண்களும் ஆண்களும் புகையை உங்கள் முகத்தில் ஊதுகின்றனர். இது ஒருவகை நரம்பு நடுக்கம் அல்லவென்றால் வேறென்ன? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, பரலோகத்தின் தேவன் அக்கினி ஸ்தம்ப வடிவில் ஜனங்களின் மேல் அசைவாடி, இயேசு கிறிஸ்து தமது வருகையின் கடைசி கட்டத்தை அடைந்திருக்கிறார் என்பதைக் காண்பித்து, அவர்களுக்கு கடைசி அடையாளத்தை அளிக்கும்போது, அவர்கள் அதை பார்த்து சிரித்து பரியாசம் செய்து அவர்களை சபை அங்கத்தினர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அப்படியிருந்தும் அவர்கள் நரம்பு நடுக்கம் கொண்டவர்கள் அல்ல என்று கூறிக் கொள்கின்றனர். இதற்கு எனக்கு விளக்கம் தாருங்கள். என் நேரம் கடந்து கொண்டே போகின்றது. அவர்கள் நரம்பு நடுக்கம் கொண்டவர்கள் இல்லையா என்று கூறுங்கள். அவர்கள் படித்த நரம்பு நடுக்கம் கொண்டவர்கள். அது முற்றிலும் உண்மை. அவர்களுடைய நிலைக்கு விளக்கம் தாருங்கள். உங்களால் முடியாது. 107அவர்கள் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டு, உலகப் பிரகாரமான உடைகளை உடுத்திக் கொண்டு, அந்நிலையில் தெருக்களில் நடந்து செல்கின்றனர். தேவனுடைய வேதாகமம் அதற்கு விரோதமாய் எச்சரிக்கிறது. கூந்தல் கத்தரிக்கப்பட்ட ஒரு பெண் ஜெபம் செய்யக் கூடாது என்று அது தடை விதிக்கிறது. ஒரு மனிதன்... அவள் அப்படி செய்தால், தன் கணவனுக்கு நடத்தை கெட்டவளாகிவிடுவாள். அவளை விவாகரத்து செய்து அனுப்பி விட அவனுக்கு பூரண உரிமையுண்டு. அது முற்றிலும் உண்மை. தேவனுடைய வார்த்தை அவ்வாறு கூறுகின்றது. ஒருபெண் அதை அறிந்திருந்தும், குட்டை மயிர் வைத்துக் கொண்டு தன்னை கிறிஸ்தவள் என்று அழைத்துக் கொள்கிறாள். இது நரம்பு நடுக்கம் அல்லவென்றால் வேறென்ன? நரம்பு நடுக்கம் என்றால் என்னவென்று யாராகிலும் என்னிடம் கூற விரும்புகிறேன். ஆம், அவர்கள் நரம்பு நடுக்கம் கொண்டவர்கள். அதிகம் படித்து கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், நாம் பிள்ளைகளுக்கு வேதத்தையும் இயேசு கிறிஸ்துவையும் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும், கணிதம், அறிவியல் போன்றவைகளைக் கற்பிக்க அதிக நேரம் செலவிடுகிறோம். டேவிட் கிராக்கெட் யாரென்று அறியாத ஒரு பிள்ளை நாட்டில் கிடையாது. ஆனால் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகள் கூட இயேசு கிறிஸ்து யாரென்பதை அறியாமலிருக்கின்றனர், இது நரம்பு நடுக்கம் தான், இப்படியாக அவர்கள் புரியும் செயல்களை கூறிக் கொண்டே செல்லலாம். இதை கவனத்தில் கொள்ளுங்கள்... வேதம் ஒன்றைக் கண்டனம் செய்யும்போது, சபை ஸ்தாபனங்கள் அதை ஆதரிக்கின்றன. அப்படியானால் ஊழியமே நரம்பு நடுக்கமுள்ளவர்களைக் கொண்டுள்ளது அல்லவா? கல்வி கற்ற நரம்பு நடுக்கமுள்ளவர்கள். அது முற்றிலும் உண்மை. சபை ஸ்தாபனங்கள் அதை ஆதரிக்கின்றன. 108லோத்தை நினைவு கூறுங்கள். அவன் மிகவும் சாமர்த்தியமுள்ளவன். அவனை ஒரு நிமிடம் கவனியுங்கள். சில நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்வதற்காக என்னை மன்னியுங்கள். இது மிகவும் முக்கியமானது. இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றது. நான் ஒலி நாடாவில் பதிவு செய்வதைக் கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். பாருங்கள், பாருங்கள் ஒரு நிமிடம் நாம் நிறுத்திக் கொண்டு, “ஆண்டவரே, இதை நான் புரிந்து கொள்ளச் செய்யும்” என்று சிறிது நேரம் நம்முடைய இருதயத்தில் ஜெபம் செய்வோம். தேவன் தாமே உங்கள் புரிந்து கொள்ளும் தன்மையைத் திறப்பாராக! இந்த தேசத்தை மாத்திரம் இப்பொழுது நாம் எடுத்துக் கொண்டு பார்ப்போம். தேவன் என்ன கூறினார் என்பதை கவனிப்போம். சோதோமின் பாவங்கள் நீதிமானாகிய லோத்தின் ஆத்துமாவை நாள் தோறும் வாதித்தது என்று வேதம் கூறுகின்றது. ஆனால் அதை எதிர்த்து நிற்க அவனுக்குப் போதிய தைரியமில்லை, அது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி ) அவனால் அப்படி செய்ய முடியவில்லை. அவன் நகராண்மை தலைவராயிருந்தான். அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆயினும் சோதோமியரின் பாவங்கள் அவனுடைய ஆத்துமாவை வாதித்தன என்று வேதம் கூறுகின்றது. அது தவறென்று அவன் அறிந்திருந்தான். ஆயினும் அதை எதிர்க்க அவனுக்குப் போதிய தைரியமில்லை. 109இப்பொழுது கவனியுங்கள். இன்று அளிக்க வேண்டிய செய்தியை ஆயத்தப்படுத்துவதற்கென நேற்று தங்கள் வேதாகமத்தை படிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை அதில் கண்ட எத்தனை லோத்துக்கள் அமெரிக்காவில் உள்ளனர்? அவர்கள் எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்பதையும், மாற்கு 16-ல் கூறப்பட்டுள்ள விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்பதையும், யோவான்: 14: 12-ல் கூறப்பட்டுள்ள ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் என்பதையும், நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும் என்பதையும் தங்கள் வேதாகமத்தில் கண்டிருப்பார்கள்? ஆயினும் தாங்கள் சேர்ந்துள்ள சபை ஸ்தாபனம் காரணமாக சாக்குபோக்கு சொல்கின்றனர். நீங்கள் வேதத்தில் இவைகளைக் காணலாம். ஆனால் அவர்களுடைய சபையோரைப் பாருங்கள். அவர்கள் கூந்தல் கத்தரிக்கப்பட்ட பெண்களைக் கொண்டுள்ளனர். வேதம் அதை கண்டிக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய சபை அங்கத்தினர்கள் குட்டை கால் சட்டை அணிந்து தெருக்களில் நடந்து செல்வதைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை அதற்கு விரோதமாயுள்ளது என்று அவர்களுக்குத் தெரியும். இருப்பினும், அதற்கு விரோதமாய் பிரசங்கிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ளும் மனிதனுடைய ஆத்துமா அதற்கு விரோதமாய் கூக்குரலிடுகிறது. ஆயினும் அவனுக்குத் தைரியமில்லை. இது நவீன சோதோம் இல்லையென்றால், அது வேறொங்குள்ளது? அதற்கு விரோதமாக கூக்குரலிடும் வேறு யாரையாகிலும் தேவன் நமக்குத் தருவாராக! அது உண்மை. யோவான் ஸ்நானன், “இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது'' என்று கூறினது போல் தைரியமாய் கூறும் யாராகிலும் இன்று நமக்கு அவசியம். 110கவனியுங்கள். இவர்கள் நவீன சோதோமியர்கள். பாருங்கள், நமது தேசம் முழுவதுமே நவீன சோதோம் கொமோராவாகிவிட்டது. லோத்து மீண்டும் உயிர் வாழ்கிறான், நோவா மீண்டும் உயிர் வாழ்கிறான். அவன் தவறு செய்கிறான் என்று தேவனுடைய வார்த்தை அவனை உண்மையாக குற்றப்படுத்துகிறது. இல்லை, எல்லா இடங்களிலும் உயிர் வாழ்கின்றான், ஏனெனில் அவனுடைய உத்தமமான உள்ளெண்ணம், வார்த்தையைக் கொண்டு, அவன் தவறாக இருக்கின்றான் என்று அவனிடம் கூறுகின்றது. சிக்காகோவில் - பெரிய சிக்காகோவில் - என்ன நடந்ததென்று பாருங்கள். மூன்று போதகர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள்... அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்று கர்த்தர் அன்றிரவே என்னிடம் முன்னறிவித்தார். அவர்கள் எனக்கு கண்ணி வைத்திருந்தனர். நான் அங்கு சென்றேன். நான் சகோ. கார்ல்ஸனிடம், “நீங்கள் இந்த கூட்டத்தை இந்த ஓட்டலில் நடத்தப்போவதில்லை. நீங்கள் வேறொரு இடத்திற்கு அதை அமைக்க வேண்டியிருக்கும், அது பச்சை நிறம் கொண்ட அறையாயிருக்கும். அவர்கள் எனக்கு ஒரு கண்ணி வைத்திருக்கின்றனர். இல்லையா, சகோ. கார்ல்ஸன்?'' என்றேன். அவர் வெட்கி தலைகுனிந்து கொண்டார். என்னை சிக்காகோ கூட்டத்திற்கு அழைக்க சில நாட்களுக்கு முன்பு அவர் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார், அவர், ''சகோ. பிரன்ஹாமே, அதை என்னால் மறக்கவே முடியாது'' என்றார். நான், “அவர்கள் எனக்கு ஒரு கண்ணி வைத்திருக்கின்றனர். சகோ. கார்ல்ஸனே, நீங்களும் டாமி ஹிக்ஸ்ம் அதை என்னிடம் கூற ஏன் பயப்பட்டீர்கள்?” என்றேன். அவர்கள் இருவரும் வெட்கி தலைகுனிந்து கொண்டனர். நான், “டாமி , ஏன் பேசமாட்டேன் என்கிறீர்?'' என்றேன். அவர், ''என்னால் பேச முடியவில்லை'' என்றார். நான், “நீங்கள் எனக்கு உதவி செய்யப் போவதாக கூறினதாக நினைத்தேன்'' கடந்த இரவு கர்த்தர் என்னிடம், இன்று நீ அங்கு செல்லும் போது, “அந்த கட்டிடம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை காண்பாய். நீ வேறொரு கட்டிடத்தில் இருப்பாய். டாக்டர் மீட் இந்த பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பார். பாடல்களைப் பாடும் அந்த கறுப்பு மனிதனும் அவருடைய மனைவியும் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்” என்று இப்படியாக ஒவ்வொருவரும் எங்கே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார். அவர், “புத்த மதத் தலைவர் ஒருவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பார் என்றார்” என்றேன். நான் அவர்களிடம், ''இது உண்மையாவென்று பாருங்கள்! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கிப்பதால் அவர்கள் எனக்கு விரோதமாயிருக்கின்றனர். நான் சர்ப்பத்தின் வித்தை பிரசங்கிப்பதால் அந்நிய பாஷையில் பேசும் ஒவ்வொரு மனிதனும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறான் என்பதற்கு எதிரான அத்தாட்சியை நான் காண்பிப்பதால் மற்றும் அநேக காரியங்களின் பேரில் அவர்கள் எனக்கு விரோதமாக இருக்கின்றனர். நீங்கள் அங்கு வந்து, “தேவன் செய்வதைப் பாருங்கள்'' என்றேன். 111நாங்கள் அங்கு சென்றோம்... அவர்கள் அங்கு சென்ற போது... அதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, அல்லது இன்னும் சற்று முன்பு, அந்த பிற்பகலில் ஓட்டல் நிர்வாகிகள் சகோ. கார்ல்ஸனை வரும்படியாகக் கூறினர். வாடகைக்கான முன் தொகையை வாங்கினவர் அவரிடம், “இதை நாங்கள் ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் எங்கள் மேலாளர் இந்த இடத்தை இன்றிரவு - இல்லை, அன்று காலை - ஒரு இசைக்குழுவுக்கு அளிப்பதாக வாக்களித்துவிட்டார்” என்றார். ஆகவே நாங்கள் அந்த டெளன் அண்ட் கண்ட்ரீ உணவகத்திற்கு சென்றோம். அக்காலையில் நாங்கள் உள்ளே சென்று அங்கே நின்ற போது. அப்பொழுது சகோ. கார்ல்சன் ஒரு காரியம் உண்டு. சகோதராகிய நீங்கள் சகோதரன் பிரன்ஹாமுடன் ஒத்துப் போகாமல் இருக்கலாம், ஆனால், “ஒன்று தான் விசுவாசிப்பதை கூறுவதற்கு அவருக்கு பயமே கிடையாது'' என்றார். மேலும் அவர், ”இவை இப்படியாக நடக்கும் என்று அவர் கூறின விதமாகவே சரியாக அப்படியே தான் இருக்கின்றது. இப்பொழுது இதோ இவரே இருக்கின்றார். இவரே பேசட்டும்“ என்றார். 112''நான் அந்த பரம தரிசனத்துக்கு கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை'' என்று பவுல் கூறின் அந்த வேத வசனத்தை எடுத்துக் கொண்டேன். நான், “இங்குள்ள முன்னூறு பேருக்கும் அதிகமானவர்கள் உங்களை டாக்டர் இன்னார், இன்னார், என்று அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள். எனக்கு ஆரம்பப் பள்ளி கல்வியும் கூட கிடையாது. ஆயினும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் நான் சவால்விடுகின்றேன். உங்கள் வேதாகமத்துடன் இங்கு வந்து என் பக்கத்தில் நின்று கொண்டு, நான் கூறினவைகளில் ஒன்றையாகிலும் மறுதலியுங்கள் பார்க்கலாம்'' என்றேன். நீங்கள் அதை கேட்க விரும்பினால், அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் கண்டதிலேயே அது மிகவும் அமைதலான கூட்டமாகிவிட்டது. நான், “என்ன நேர்ந்தது?'' என்று கேட்டேன். அன்றைய காலை கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் யாராகிலும் இங்குள்ளனரா? கையுயர்த்துங்கள் பார்க்கலாம்! ஆம், பாருங்கள். சுற்றிலும் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. நான், ''உங்களால் இந்த உபதேசங்களை ஆதரிக்க முடியாமற் போனால் விலகி நில்லுங்கள்'' என்றேன். அவர்கள் வெளியே இதைக் குறித்து அதிக சத்தமிடுகின்றனர். ஆனால் இந்த பிரச்சினையை முகமுகமாய் சந்திக்க வேண்டிய தருணம் வரும் போது, அது வித்தியாசமாகிவிடுகின்றது. அது உண்மை. 113அவர்கள் சென்ற பின்பு, டாமி ஹிக்ஸ், “இதன் முன்னூறு ஒலி நாடாக்களை வாங்கி, எனக்குத் தெரிந்த பாவனை செய்கின்ற திரித்துவ பிரசங்கி போதகர் ஒவ்வொரு போதகருக்கும் அனுப்ப விரும்புகிறேன்'' என்றார். அங்கு வந்திருந்த மக்கள் என்னுடன் கைகுலுக்கி, ''நாங்கள் உம்முடைய கூடாரத்துக்கு வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வோம்'' என்றனர். அவர்கள் எங்கே? “சாக்கு போக்குகள், என்னால் முடியாது. என் ஸ்தாபனம் என்னை அனுமதிக்காது'', ''நான் ஒரு மனைவியைக் கொண்டேன்'', ''நான் ஏர்மாடு வாங்கினேன்”, ''நான் நிலம் வாங்கியிருக்கிறேன். அதைபோய் பார்க்க வேண்டும்'' போன்றவை. பாருங்கள்? சாக்கு போக்குகள், அது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) அந்த வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா? “இல்லை'' சுவிசேஷம் சரியானால் நமக்குள்ள எல்லாவற்றையும் விட்டு விட்டு அதற்காக வாழுவோம். கிறிஸ்தவராயிருங்கள். ஆம், ஐயா. ஆமென், நாம் முடிக்கப்போகும் நேரத்தில் இதை கவனியுங்கள். 114அவர்களுடைய சாக்கு போக்குகள், அவர்களுடைய கோட்பாடுகளும் ஸ்தாபனங்களுமே. அது ஒரு மரத்தைப் போன்றது. சகோ. பாங்க்ஸின் மரத்தை அன்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நான் வசித்த போது, ஒரு ஊசி இலை மரத்தை நட்டேன். அந்த மரத்தில் கிளைகள் வளர விட்டுவிட்டேன். அதன் கீழ் ஒரு சிறு புல்லும் கூட வளரவில்லை, நாங்கள் புல் வெட்டும் இயந்திரத்தை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. அதன் பின்பு நான் ஒரு ரம்பத்தை எடுத்து மரக்கிளைகளை வெட்டினேன், ஊசி இலை மரமும் உயரமாக வளர்ந்தது. நாங்களும் புல் வெட்டும் இயந்திரத்துடன் அதன் கீழ் நடந்து செல்லமுடிந்தது. இப்பொழுது அதனடியில் மிகவும் அழகான புல் வளர்ந்துள்ளது. அது என்ன? அந்த வித்து ஏற்கனவே அங்கிருந்தது. அது வெளிச்சம் பெற வேண்டியதாயிருந்தது. 115உங்கள் ஸ்தாபனங்கள், உங்கள் சாக்கு போக்குகள், அங்குள்ள அந்த வித்தின் மேல் வெளிச்சம் படாதபடிக்கு அதை நிழலிடுமானால், நீங்கள் லோத்தின் பங்கை வகிக்கின்றீர்கள். அவைகளைத் தூர எறிந்துவிடுங்கள். சுவிசேஷ வெளிச்சம் - இயேசு கிறிஸ்துவின் வல்லமை - அதன் மேல் பிரகாசிக்கட்டும். ஆம்! அதன் மேல் வெளிச்சம் படாமல் தடுத்தால், அது வாழ்வதை அது தடை செய்யும். வெளிச்சம் அங்கு சென்றால், அது ஜீவன் பெற்று வளரும். “அதனால் தான் ஜனங்கள் அப்படிப்பட்ட கூட்டங்களுக்கு செல்லாதீர்கள்” என்கின்றனர். அவர்களுடைய அங்கத்தினர் ஒருவர் மேல் இந்த வெளிச்சம் பட்டுவிடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர். 116கிணற்றண்டை இருந்த சமாரியா ஸ்திரீயை நினைவு கூருங்கள். அவள் ஒரு விபச்சாரி. அக்காலத்திலிருந்த ஆசாரியர்கள், இயேசு நாத்தான்வேலிடம், “நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போதே உன்னைக் கண்டேன்'' என்று கூறக் கேட்டனர். உடனே அவர்கள், “அவன் பெயல்செபூல், அவன் குறிசொல்பவன். அது பிசாசு'' என்றனர். ஆனால் இந்த ஸ்திரீயோ நடத்தைகெட்ட நிலையில் அங்கு சென்றபோது - அவள் ஆறு பேர்களுடன் வாழ்க்கை நடத்தினாள் அவள் அந்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அங்கே நடந்து சென்றாள், அவள் அந்த நடத்தைகெட்ட நிலையில் இருந்தாள். இயேசு, ''தாகத்துக்குத் தா'' என்றார். அப்பொழுது உரையாடல் ஆரம்பமானது. அவர் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா'' என்றார். அவள் “எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர், “நீ சொன்னது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது உனக்கிருப்பவன் உனக்குப் புருஷனல்ல'' என்றார். அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இதை செய்வார் என்று அறிவேன்'' என்றாள். இயேசு, “நானே அவர்'' என்றார். அத்துடன் அது முடிவு பெற்றது. இந்த வேசிக்குள் மறைந்திருந்த அந்த வித்தின் மேல் வெளிச்சம் பட்டவுடனே, அவளுடைய வேசி நாட்கள் முடிவுற்றன. அவள் தெருவில் தேவனை மகிமைப்படுத்திக் கொண்டு சென்று, ''நான் செய்த எல்லாவற்றையும் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மேசியா அல்லவா?'' என்றாள். அது என்ன? விபச்சார நிழலின் கீழ் மறைந்திருந்த அந்த வித்தின் மேல் வெளிச்சம் பட்டது. ஆம், ஐயா! முடிக்கும் தருணத்தில் இதைக் கூற விரும்புகிறேன். எழுதி வைத்த குறிப்புகள் இன்னும் எத்தனை பக்கங்கள் உள்ளன என்று தெரியவில்லை, ஆனால் அவையனைத்தையும் இப்பொழுது நான் நிச்சயமாக எடுக்கப் போவதில்லை. ஏறக்குறைய பத்து பக்கங்கள் உள்ளன. அப்படியானால், பாதியை தான் நான் முடித்திருக்கிறேன், இதை கூறிவிட்டு முடித்து விடுகிறேன். 117முன்னாளில் இருந்த தகுதியான வாழ்க்கையை நாம் ஒப்பிடலாம். பரி. பவுலின் வாழ்க்கையை ஐசுவரியவனாகிய வாலிபத் தலைவனின் வாழ்க்கையுடன் நாம் ஒப்பிடுவோம். ஒரே வெளிச்சம் தான் இருவர் மேலும் பட்டது. இருவரும் இயேசு கிறிஸ்துவினிடமிருந்து ஒரே விதமான அழைப்பையே பெற்றனர். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவர்களிருவருமே வேதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். இருவரும் வேத சாஸ்திரிகள். இயேசு ஐசுவரியவனாகிய அந்த வாலிபனிடம், ”கற்பனைகளைக் கைக்கொள்'' என்று கூறினது நினைவிருக்கிறது அல்லவா? அவன், “இதை என் சிறுவயது முதல் நான் கைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினான். அவன் பயிற்சி பெற்ற ஒரு மனிதனாக இருந்தான். பரிசுத்த பவுலும் அவ்விதமாகத் தான். அந்த இருவரும் வேத வாக்கியங்களில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், இருவரும் வார்த்தையைக் கொண்டவர்களாக இருந்தனர். ஒருவன் அதை அறிவினால் பெற்றிருந்தான்; மற்றொருவனோ ஜீவனின் மரபணுவை கொண்டவனாக இருந்தான். அந்த ஒளி பவுலுக்கு முன்பாக மின்னி பிரகாசித்த போது அவன், ''ஆண்டவரே, நீர் யார்?'' என்றான். அவர், “நான் இயேசு'' என்றார். ''அப்படியானால் இதோ வருகிறேன்'', அவன் ஆயத்தமாயிருந்தான். 118இருவர் மேலும் வெளிச்சம் பட்டது. ஒருவனில் வித்து உயிர்ப்பிக்கப்பட்டது. மற்றவனில் ஒன்றும் நேரிடவில்லை. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. ஆவிக்குரிய சபை, மாமிசத்துக்குரிய சபை. ஐசுவரியவான் சாக்கு போக்கு சொன்னான். அவனால் இயேசு கூறினதைச் செய்ய முடியவில்லை. உலகத்தில் அவனுக்கிருந்த அநேக நண்பர்களால் அவன் கீழே இழுக்கப்பட்டான். அவர்களுடன் கொண்டிருந்த தொடர்பை அவன் விட்டுவிட விரும்பவில்லை. இன்றைக்கும் அநேகருக்குள்ள பிரச்சினை இதுவே. நீங்கள் ஒரு விடுதியைச் சேர்ந்திருப்பதால், அவர்களுடைய சகோதரத்துவத்தை விட்டுவிட உங்களால் முடியவில்லை. அவர்கள் மது அருந்துதல் போன்ற அநேக செயல்களைப் புரிகின்றனர். நல்லது, அப்படியே சென்று கொண்டிருங்கள். விடுதிக்கு விரோதமாக, அந்த ஸ்தாபன சபைக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. நான் உங்களைக் குறித்து பேசுகிறேன், பாருங்கள்? அதற்கு விரோதமாக இல்லை. ஒன்றின் ஆறு, மற்றொன்றின் அரை டஜன். ஸ்தாபன சபைகள் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதால், அவை விடுதிகளேயன்றி வேறொன்றுமில்லை என்று இப்பொழுது நான் உங்களிடம் கூறினேன். 119கவனியுங்கள், ஐசுவரியவானுக்கு சாக்கு போக்குகள் இருந்தன. ஆயினும் அவன் தமது சாட்சியை புறக்கணிக்கவில்லை. அவன் பெரிய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் என்று நாம் காண்கிறோம். அவனுக்கு புத்தி இருந்தது, அவன் அதிகமாக விருத்தியடைந்து, முடிவில் அவனுடைய பொருட்களைச் சேமித்து வைக்க புதிய களஞ்சியங்களை கட்ட வேண்டிய நிலைமை அவனுக்கு உண்டானது. அவன் மரித்தபோது... கழுத்து பட்டையை திருப்பி உடுக்கும் பட்டதாரி போதகர் ஒருவர் அவனுடைய சவ அடக்கத்தின் போது பிரசங்கித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஒருக்கால் இப்படி கூறியிருக்கலாம்... அவர்கள் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு, “இந்த நகரின் நகராண்மைத் தலைவராக பணியாற்றிய எங்கள் அருமை சகோதரன் இப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரங்களை அடைந்துவிட்டார். ஏனெனில் அவர் சபையின் ஒரு சிறந்த அங்கத்தினராக விளங்கினார். அவர் இன்னின்னவைகளைச் செய்தார்'' என்று கூறியிருப்பார்கள். ஆனால் வேதமோ, “அவன் நரகத்தில் வேதனை அனுபவித்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்” என்கின்றது. 120அவன் நரகத்திலும் தான் விசுவாசித்ததை கடைபிடிக்க விரும்பினான். அவன் லாசருவை ஆபிரகாமின் மடியில் கண்டபோது, “என் தகப்பனாகிய ஆபிரகாமே, லாசருவை அனுப்பும்'' என்றான். அப்பொழுதும் ஆபிரகாமை அவனுடைய தகப்பன் என்றழைத்தான். பாருங்கள்? அவன் அறிவைப் பெற்றிருந்து, புத்தி கூர்மையுள்ள சபைக்கு சென்றான். வெளிச்சம் அவன் மேல் பட்டபோது, அவன் அதை புறக்கணித்தான். அதுவே இன்றைய நவீன சபையின் போக்காயிராவிட்டால், அது வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை. தேவன் பாதையில் எதை பிரகாசிக்கச் செய்தபோதிலும் - அக்கினி ஸ்தம்பத்தையோ அல்லது வேறெதையோ - அவர்கள் தங்கள் அறிவைக் கொண்டு அதற்கு விளக்கம் தந்து அதை நிராகரித்து, அவர்கள் சமுதாயத்தில் கொண்டுள்ள உயர்ந்த நிலைக்கேற்ப அறிவாளிகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்கின்றனர். பவுல் ஏற்கனவே சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தான். அவன் சிறந்த அறிவாளி. அவன் கமாலியேலிடம் பயின்றவன், பிரதான ஆசாரியனுக்கு வலது கையாக இருந்தவன். ஆகையால் தான் அவன் பிரதான ஆசாரியனிடம் சென்று, உருளும் பரிசுத்தர்களை சிறைப்படுத்த அதிகாரத்தைப் பெற முடிந்தது. ஆனால் அவனுடைய பாதையில் வெளிச்சம் பிரகாசித்து, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பத்தை அவன் கண்டு அது இயேசு கிறிஸ்து என்று அறிந்து கொண்ட போது, அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு ஜீவனைப் பெற்றுக் கொண்டான். 121அந்த ஐசுவரியவானின் வாழ்க்கை, அவன் கேட்ட சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்திருந்ததாக உங்களால் கூற முடியுமா? அவன் விசுவாசியாயிருந்த போதிலும், அறிவாளிகளின் மத்தியிலும், கேளிக்கைகளின் மத்தியிலும் அவன் வாழ்ந்த அந்த வாழ்க்கையை நீங்கள் அவ்வாறு கூற முடியுமா? அன்றிரவு சூரியன் மறைந்த பிறகு, அவன் விருந்து பண்ணினான். போதகர் ஒருவர் ஜெபம் செய்து அதை ஆரம்பித்து வைத்திருப்பார். அங்கு கேளிக்கை இருந்தது. அப்பொழுது ஒரு தரித்திரன் அவனுடைய வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் விருந்து பண்ணி, அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைக் குறித்து பேசினான். ஆனால் அடுத்த நாள் விடியும் முன்பு - சூரியன் உதயமாகும் முன்பு - அவன் நரகத்தில் இருந்தான். அது உண்மை. அதுதான் உங்கள் அறிவாளிகள். 122ஆனால் பவுலோ, ஒளி அவனைத் தாக்கினபோது; அவனுடைய வாழ்கையை நாம் ஒப்பிட்டு, அது தகுதியாயிருந்ததா என்று பார்ப்போம். என்ன நேர்ந்தது? ஒளி பவுலின் மேல் பட்டபோது, அவன் தனக்கிருந்த அறிவு அனைத்தும் புறக்கணித்து விட்டு, அறிவாளிகளின் கூட்டத்தை விட்டு விலகி, இயேசு கிறிஸ்துவின் ஆவியில் நடந்தான். தேவனுக்கு மகிமை! அவன் அறிவாளியாக இருந்த போதிலும், அவன் பெரிய சொற்களை உபயோகிக்கவில்லை. அவன் கொரிந்தியரிடம் சென்ற போது, ''நான் மனித ஞானத்தைக் கொண்டு உங்களிடம் வரவில்லை. நான் பெரிய சொற்களைக் கொண்டவனாய் உங்களிடம் வரவில்லை. ஏனெனில் நீங்கள் உங்கள் விசுவாசத்தை அதில் வைத்துவிடுவீர்கள். உங்கள் விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் இருக்கும் பொருட்டு, நான் எளிய விதத்தில் உங்களிடம் வருகிறேன்'' என்றான். அங்குதான் ஜீவன் உள்ளது. அதை கவனியுங்கள். அவன் தனது கல்வியறிவை பயன்படுத்தவில்லை. அவன் அறிவாளிகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்ளவில்லை. அவன் தாழ்மையுள்ளவனாய், தேவனுடைய வார்த்தை அவர்களுடைய கோட்பாடுகளுக்கு எதிராக இருந்த போதிலும், அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கிறிஸ்துவின் ஆவியில் நடந்தான். பவுல் அந்த வெளிச்சத்தைக் கண்டு அதில் நடந்து (அது சரியா?), அவன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு, அவன் மூலம் கிறிஸ்துவின் ஜீவன் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும்படி அனுமதித்து, அவனுக்குள் இருந்த தேவனுடைய ஆவியை அவர்கள் காணும்படி செய்தான். தாழ்மையுள்ளவர்கள் அதை முற்றிலும் விசுவாசித்ததால், அவர்களுடைய உறுமால்களை அவன் சரீரத்தின் மேல் போட்டு அதை எடுத்தனர். அவர்கள் அதை அவ்வளவாக விசுவாசித்தனர்... அவன் இயேசு கிறிஸ்துவுக்கு அவ்வளவாக பிரதிநிதியாயிருந்ததால், அவன் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அவர்கள் விசுவாசித்தனர். ஆம்! அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருந்திருப்பான் அவன் தனது ஜீவனையும், தனது ஐசுவரியத்தையும் தனக்கிருந்த எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, தனது கல்வியனைத்தையும் மறந்து, மீன் பிடிப்பவர்களுடனும், தரித்திரர்களுடனும், தெருக்களிலுள்ள ஏழைகளுடனும் நடந்து சென்று, அவனுடைய வெளிச்சம் இயேசு கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும்படி செய்தான். அவன், “நான் வாரினால் நாற்பத்தொன்பது தரம் அடிக்கப்பட்டேன். அதனால் ஒன்றுமில்லை. ஏனெனில் என் சரீரத்தில் நான் இயேசு கிறிஸ்துவின் அடையாளங்களைக் கொண்டிருக்கிறேன்'' என்றான். போதகர்கள் சூழ்ந்து கொண்டிருந்த அந்த பிரபலமானவனைக் காட்டிலும் இவன் எவ்வளவு வித்தியாசப்பட்டவன். 123அவன் ரோமாபுரியில், யாருமே அவனுடன் கூட இல்லாமல் தனிமையாயிருந்த நேரத்தில், அவனைச் சிரச்சேதம் செய்வதற்காக அவர்கள் ஒரு இடத்தைக் கட்டினர். அங்கு தான் அவன் இவ்வாறு கூறினான். ஓ, என்னே! அவன், ''நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்'' என்றான். அதுவே சுவிசேஷத்திற்கு தகுதியுள்ள வாழ்க்கை. எப்படிப்பட்ட ஒரு குமாரனாக அவன் இருந்தான். அவன் கிறிஸ்துவுக்காக நின்றான். சுவிசேஷம் அவன் மூலம் பிரதிபலிக்க அவன் அனுமதித்தான். அதற்கு முன்பு, அவன் சென்று சுவிசேஷத்தைக் கற்றுக் கொண்டான். அவன் அரேபியாவுக்கு சென்று, மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து, பழைய ஏற்பாட்டின் மூலம் அவர் இயேசு கிறிஸ்து என்று காண்பித்தான். அது அவன் மூலம் எளியோருக்கு பிரதிபலிக்கும்படி அனுமதித்தான். அவன், ''வயிறு நிறைந்து இருப்பது எப்படியென்றும், பசியாயிருப்பது எப்படியென்றும் எனக்குத் தெரியும்'' என்றான்... கல்வியறிவு பெற்று, அறிவில் சிறந்தவனாகத் திகழ்ந்த அப்படிப்பட்ட ஒரு மனிதன் அவனுடைய காலத்தில் மிகச் சிறந்து விளங்கிய கமாலியேலிடம் கல்வி பயின்றவன், பிரதான ஆசாரியனிடம் நெருங்கிப் பழகினவன்... சகோதரனே, அவனுக்கு விருப்பமிருந்தால், அவன் கோடிக்கணக்கான டாலர்கள் சம்பாதித்து, அவனுக்கு பிரம்மாண்டமான கட்டிடங்கள் இருந்திருக்கக் கூடும். அது உண்மை. ஆனால் அவன் என்ன சொன்னான்? ''நான்...'' அவனுக்கு போட்டுக் கொள்ள ஒரு மேலங்கி மாத்திரமேயிருந்தது. தேமா அதைக் கண்டான். அப்படிப்பட்ட ஊழியத்தைக் கொண்டிருந்த அந்த மனிதன், 2தீமோத்தேயு: 3-ம் அதிகாரத்தில், ''தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டான். மற்றவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள்'' என்கிறான். அவன், “நீ வரும்போது நான் வைத்து வந்த மேலங்கியை எடுத்துக் கொண்டு வா. இங்கு அதிக குளிராயுள்ளது'' என்றான். அப்படிப்பட்ட ஊழியத்தைக் கொண்டிருந்த அந்த மனிதனுக்கு ஒரே ஒரு மேலங்கி மாத்திரமே இருந்தது. தேவனுக்கு மகிமை! 124அது சுவிசேஷத்திற்காக நின்ற பரி. மார்டினை எனக்கு நினைவூட்டுகிறது - அவர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு. நிசாயா ஆலோசனை சங்கத்தில், “நிசாயா பிதாக்கள்” என்னும் வரலாற்றுப் புத்தகத்தில்... ஒரு நாள் அவர் வாசலின் வழியாக சென்று கொண்டிருந்தார். அவர் பிரான்சு தேசத்திலுள்ள டோராஸ் என்னும் நகரத்தைப் சேர்ந்தவர். அங்கு ஜனங்கள் இருந்தனர். வயோதிப பிச்சைக்காரன் ஒருவன் ஆடை எதுவுமின்றி மரணத் தருவாயில் இருந்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் அவனுக்கு உடைகளை கொடுத்திருக்கலாம், ஆனால் அவர்களோ கொடுக்கவில்லை. அவர்கள் அவனை அசட்டை செய்து கடந்து சென்றனர். பரி. மார்டின் அவனைக் கண்டபோது, அங்கு நின்று அவனை உற்று நோக்கினார். ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் அவனுடைய காலணிகளைப் பளபளப்பாக ஒரு வேலையாள் கொடுக்கப்பட்டிருந்தான். இவரோ தன்னுடைய வேலைக்காரனின் காலணிகளை பளபளப்பாக்குவார். பரி. மார்டின் தன்னுடைய “கோட்டை கழற்றி, பட்டயத்தையெடுத்து அதை இரு தூண்டுகளாக வெட்டி, ஒரு துண்டினால் அந்த பிச்சைக்காரனைப் போர்த்திவிட்டு, ''நாம் இருவரும் உயிர் வாழலாம்'' என்றார். அவர் வீட்டையடைந்து படுக்கைக்குச் சென்ற போது, அந்த வயோதிபனை நினைத்து அழுதார். அப்பொழுது ஏதோ ஒன்று அவரைத் தட்டி எழுப்பினது. அவர் பார்த்த போது, அவருடைய அறையில், அவர் அந்த பிச்சைக்காரனைப் போர்த்தின அதே துண்டு உடையினால் சுற்றப்பட்டவராய் இயேசு கிறிஸ்து நின்று கொண்டிருந்தார். அவர், ''இந்த சிறியரில் ஒருவருக்கு நீ எதைச் செய்தாயோ, அதை எனக்கே செய்தாய் என்றார். அதுதான் சுவிசேஷத்திற்கு தகுதியான வாழ்க்கை. அவருடைய ஜீவனை அவர் எப்படி முத்தரித்தார் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? 125பாலிகார்ப்பை பாருங்கள். அவர் ரோமன் கத்தோலிக்க சபைக்கு விரோதமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்கு உறுதியாக நின்றார். அவர்கள் அவரை தொழுமரத்தில் கட்டி சுட்டெரித்தார்கள். அவர்கள் குளியல் அறை ஒன்றை இடித்து, அவரை அந்த இடத்தில் சுட்டெரித்தார்கள். இந்த நோக்கத்திற்காக துன்புறுத்துப்பட்ட ஐரேனியசையும் மற்றவர்களையும் பாருங்கள். அவை சுவிசேஷத்திற்கு தகுதியான வாழ்க்கை. எபிரேயர்: 11-ம் அதிகாரத்தில் பவுல் என்ன கூறுகிறான் என்பதை பாருங்கள். அவர்கள் வாளால் அறுப்புண்டார்கள், இழுப்புண்டார்கள். செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு அலைந்து திரிந்தார்கள்... சிதறுண்டு அலைந்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. பார்த்தீர்களா? அதுவே சுவிசேஷத்திற்கு தகுதியான வாழ்க்கை. அப்படிப்பட்டவர்களுடன் நியாயத்தீர்ப்பின் நாளில் நிற்கப் போகும் என் வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கையும் எவ்வாறுள்ளது? 126பவுலைப் பாருங்கள். அவன் சுவிசேஷத்திற்காக நின்று, யார் என்ன நினைத்த போதிலும், இயேசு அவன் மூலமாக பாயவிட்டுக் கொடுத்தான். பிரதான ஆசாரியன் என்ன நினைத்த போதிலும் அவன் அதற்காக சிரச்சேதம் பண்ணப்பட்டான். அவன் சுவிசேஷத்திற்கு தகுதியான ஒரு பிரதிநிதியாக இருந்தான். ஜனங்கள் என்ன நினைத்த போதும், நித்திய ஜீவன் என்னும் மின்சாரம் அவன் மூலம் பாய்வதற்கு அவன் அனுமதித்து, ''என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புகிறேன்“ என்றான். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டால் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கேள்விக்கு அதுவே பதில். நீங்கள் அறிவாளிகளின் பக்கம் சேர்ந்து கொள்ளலாம், அல்லது இந்த பக்கம் சேர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு உண்மையாகவே நித்திய ஜீவன் இருக்குமானால், அது தான் நேரிடும். அதுதான் நேரிட்டது - சுவிசேஷத்திற்கு செவி கொடுக்க மறுத்த குருடரான அறியாமையுள்ள ஜனங்களின் நிமித்தம் பவுல் கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக இருக்க ஆயத்தமாயிருந்தான்... அதைக் காணும்போது எனக்கு அவமானம் தோன்றுகிறது. அவர்கள் கேட்க மறுத்ததால், என் முயற்சியைக் கை விட்டுவிட வேண்டுமென்றிருந்தேன். நான் மனந்திரும்ப வேண்டுமென்று உணருகிறேன். நான் மனந்திரும்பிவிட்டேன். பாருங்கள்? 127கவனியுங்கள், யார் என்ன நினைத்த போதிலும் அத்தகைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியானது. நான் முடிக்கிறேன். ஐசுவரியவான், இன்றுள்ள நம்மில் அநேகரைப் போன்று, வார்த்தையை புறம்பாக்கி, அதை நிராகரித்து, சபை அங்கத்தினனாகி, அவன் ஏற்றுக் கொள்ள வேண்டிய சுவிசேஷத்திற்கு தகுதியற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்தான் என்று வேதத்தால் நிரூபிக்கப்பட்டான். அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) தேவனுடைய வல்லமையை மறுதலிக்கும் அத்தகைய அந்தகாரப்பட்ட வெளிச்சத்தின் மூலம் சுவிசேஷம் எப்படி பிரகாசிக்க முடியும். 128தகுதியான வாழ்க்கை வாழ ஒரேவழி, கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் - அவரே வார்த்தை - உங்களில் பரிபூரணமாக பிரதிபலிக்க அனுமதிப்பதேயாம். அப்பொழுது தேவன் தமது வார்த்தையில் கூறியுள்ளதை உறுதிப்படுத்துவார். கிறிஸ்து தம்மை பூரண பலியாக தேவனுக்கு முன்பாக ஒப்புக் கொடுக்கும்படியாக மரித்தார். தமது ஜனங்களின் மூலம் தம்மை பிரதிபலித்து, தமது வேலையை தொடர்ந்து செய்ய; வரவேண்டியதாக இருந்த இந்த நாட்களில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை நிறைவேற்றும்படியாக, தம்முடைய ஜனங்களின் மூலமாக தம்மைத் தாமே பிரதிபலித்துக் காட்ட, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் அது திரும்ப வந்துள்ளது. யோவான் ஸ்நானன் கிறிஸ்து வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டான். கிறிஸ்து தண்ணீரில் நடந்து அவனிடம் சென்றபோது, அவன், ''இதோ தேவாட்டுக்குட்டி“ என்றான். பரலோகத்திலிருந்து ஒளி புறாவைப் போல் இறங்கி வந்ததை வேறு எவருமே காணவில்லை. அவன் மாத்திரமே அதை கண்டான், ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்று ஒரு சத்தம் கூறினது. அது வருவதை அவன் கண்டான். இயேசு தண்ணீரில் நடந்து சென்றார். தீவிரவாதி என்று கருதப்பட்ட பிரசங்கியிடம் இம்மானுவேல் தண்ணீரில் நடந்து சென்று, ஜனங்களின் முன்னிலையில், ''நான் உன்னிடம் ஞானஸ்நானம் பெற வேண்டும்'' என்றார். யோவான், “ஆண்டவரே, நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?'' என்று கேட்டான். இருவருடைய கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன - தீர்க்கதரிசியும் அவனுடைய தேவனும். ஆமென். யோவானின் கண்டிப்பான, ஆழமான கண்கள் மாமிசத்தில் தனக்கு ஒன்றுவிட்ட சகோதரனான இயேசுவின் கண்டிப்பான, ஆழமான கண்களுக்குள் ஊடுருவிச் சென்றதை அங்கு நின்று கண்டிருக்க எனக்கு எவ்வளவு ஆவல்? இயேசு, “யோவானே, இப்பொழுது இடங்கொடு. நாம் இம் மணிநேரத்தின் செய்தியாயிருக்கிறோம். இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது'' என்றார். யோவான், ''ஆம், அவர்தான் பலி. அது செலுத்தப்படும் முன்பு கழுவப்பட வேண்டும்“ என்று எண்ணினான். பிறகு ”வாருங்கள்'', என்று அழைத்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஆமென் வேறு விதமாகக் கூறினால், “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.'' யோவான் உண்மையுள்ளவன் என்று இயேசு அறிந்திருந்தார். அவர், ''ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை. அவன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் பெரியவன். நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், அவன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் பெரியவன்'' என்றார். இயேசு அவனுடைய இருதயத்தைப் பார்த்து, அதை அறிந்து கொண்டார். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன் அவரை முகமுகமாய் அங்கு சந்தித்தான். யோவான், ''ஆண்டவரே, நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, “யோவானே, இப்பொழுது இடங்கொடு. தேவன் வாக்களித்துள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நானே பலி. என்னை பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு முன்பு நான் கழுவப்பட வேண்டும்'' என்றார். ஓ, என்னே, என்னே! 129இன்று சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போது, புத்தி சுவாதீனமுள்ள எந்த மனிதனும் இது கடைசி நாள் என்று அறிந்திருக்கும் போது... எந்த வேத பண்டிதனும் இது கடைசி நாளென்று வேதத்தின் வாயிலாக அறிந்திருக்கிறான். அப்படியானால், இந்த கடைசி நாளில், நாம் இந்த பெரிய தடுப்பு சுவர்களை விட்டு விலகி, இயேசு கிறிஸ்துவின் நீதிக்குள் பிரவேசித்து, பிசாசு மிருகத்தின் முத்திரையை நமக்குத் தருவதற்கு முன்பு, தேவனுடைய முத்திரையைத் தரித்துக் கொள்ளுதல் நமக்கு ஏற்றதாயிருக்கிறது. ஓ, என்னே! ஆம்! இந்நாளுக்கான வெளிச்சம் உங்களை தேவனுக்குக் கீழ்ப்படியும் ஊழியக்காரராகச் செய்து, ஆவியின் கனிகள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் காணப்பட வேண்டுமென்று தேவனிடம் ஜெபியுங்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையே சுவிசேஷத்திற்கு தகுதியான வாழ்க்கை. 130முடிக்கப் போகும் நேரத்தில் இதை கூற விரும்புகிறேன். சுவிசேஷத்திற்கு தகுதியான வாழ்க்கை வாழ ஒரே வழி, சுவிசேஷம் - சுவிசேஷத்தின் ஒவ்வொரு சிறு காரியமும் - உங்களுக்குள் வந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை அது பிரதிபலித்து அவைகளை உறுதிப்படுத்த அனுமதித்தலேயாம். இந்நாளுக்குரிய வாக்குத்தத்தங்களை ஊறுதிப்படுத்த தேவன் உங்களுக்குள் வாசமாயிக்கவிடுங்கள். இயேசு யோவானிடம் கூறினது போல்; “யோவானே, அதற்கு இடங்கொடு. நாம் இந்நாளின் செய்தியாளர்களாக இருக்கிறோம். நாம் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் இந்நாளின் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், இயேசு கிறிஸ்துவை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக் கொள்வோம். அவரே வார்த்தை. வார்த்தையில் ஒன்றையும் மறுதலிக்க வேண்டாம். அது ''சத்தியம்'' என்று கூறுங்கள். அதை உங்கள் இருதயத்தில் வைத்து, நீங்கள் ஆவியின் கனியைப் பெற்றிருப்பதையும், அவர் வேதத்தில் கூறியுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றுவதையும் காணுங்கள். தேவன் தமது வார்த்தையை நிறைவேற்ற விரும்புகிறார். அவருக்கு என்னுடைய கைகளும் உங்களுடைய கைகளும் தவிர வேறு கைகள் கிடையாது. அவருக்கு என்னுடைய கண்களும் உங்களுடைய கண்களும் தவிர வேறு கண்கள் கிடையாது. அவருக்கு என்னுடைய நாவும் உங்களுடைய நாவும் தவிர வேறு நாவு கிடையாது. ''நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்“. கொடிகளே கனிகளைத் தருகின்றன. திராட்சைச் செடி கொடிக்கு சத்தையளிக்கிறது. அதுவே தகுதியுள்ள வாழ்க்கை. 131வானொலியில் இதை கேட்பவர்களுக்கும், அநேக நாடுகளில் ஒலி நாடாக்களில் இதை கேட்பவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: “எல்லா கிருபையும் கொண்ட பரலோகத்தின் தேவன் தாமே, ஆசீர்வாதமான தமது பரிசுத்த ஆவியை நம்மெல்லோர் மேலும் பிரகாசிக்கச் செய்து, நாம் இன்று முதல் தகுதியுள்ள வாழ்க்கை வாழும்படி செய்து, தேவன் தாமே நம்மை பார்த்து, ”எனக்கு அதிக திருப்தி. உலகத்தோற்ற முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய சந்தோஷத்துக்குள் பிரவேசியுங்கள்“ என்பாராக! பரலோகத்தின் தேவன் தாமே தமது ஆசீர்வாதங்களை உங்கள் எல்லோர் மேலும் அனுப்புவாராக! குட்டை தலை மயிர் உள்ள ஸ்திரீகளை இன்றிரவு கர்த்தர் தாமே ஆசீர்வதித்து, இந்நாளின் நவீன போக்கை விட்டு நீங்கள் விலகி, அப்படி செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் உணர வேண்டுமென்று தேவனிடம் ஜெபிக்கிறேன். நீங்கள் ஒழுக்கம் கெட்ட ஆடைகளை அணிந்திருப்பீர்களானால், நீங்கள் அவ்வாறு செய்யாதபடிக்கு பரலோகத்தின் தேவன் தாமே தமது கிருபையை உங்கள் இருதயத்தில் பொழிவாராக! பரிசுத்த ஆவியானவர் தாமே அதை திறந்து உங்களுக்குக் காண்பிப்பாராக! உங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாதவர்கள்... 132உங்கள் மனைவிகள் வீட்டின் தலைவிகளாக இருந்து, அதிகாரம் செலுத்த அனுமதிக்கும் மனிதரே, பரலோகத்தின் தேவன் தாமே நீங்கள் உறுதியான நிலையை மேற்கொள்ள உங்களுக்கு கிருபையருளிப்பாராக, அவள் புத்தி சுவாதீனம் அடையச் செய்து, கிறிஸ்துவுக்குள் உங்கள் ஸ்தானத்தை நீங்கள் உணரும்படி செய்வாராக! அவள் உங்கள் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது, நீங்களே குடும்பத்தின் தலைவர்கள். அவள் மூல சிருஷ்டிப்பிலும் கூட இல்லை. அவள் உங்கள் உபபொருளாக (by-product) மாத்திரமே இருக்கிறாள். உங்களைக் கவனித்து, உங்கள் துணிகளை துவைத்து, உங்கள் உணவை சமைப்பது போன்ற பணிகளைச் செய்ய அவள் தேவனால் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உங்கள் சர்வாதிகாரி அல்ல. அமெரிக்க பெண்களாகிய நீங்கள் உங்கள் முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு, உங்கள் முகத்தை வானத்துக்கு நேராக தூக்கிக் கொண்டு நடக்கின்றீர்கள் (மழை வந்தால் தண்ணீர் உங்கள் மூக்கிற்குள் சென்றுவிடும்) நீங்கள் சர்வாதிகாரி என்று உங்களை நினைத்துக் கொள்கிறீர்கள். பெண்மைத்தனம் கொண்டவனுக்கு நீங்கள் அப்படியிருக்கலாம், ஆனால் உண்மையான தேவனுடைய குமாரனுக்கு அல்ல. 133தேவன் தாமே, தேவனுடைய குமாரர்கள் என்னும் நிலையில் உங்களுக்கு கிருபையளித்து, இப்படிப்பட்ட அர்த்தமற்ற காரியங்களை நிறுத்தும்படி செய்வாராக. அது உண்மை! நீங்கள் சிகரெட்டை கீழே போடுவதற்கும், ஆபாசமான நகைச்சுவை துணுக்குகள் கேட்பதை நிறுத்துவதற்கும், அப்படிப்பட்ட மதியீனமான காரியங்களில் ஈடுபடாதிருக்கவும் அவர் கிருபையளிப்பாராக! நாம் தேவனுடைய குமாரர்களாயிருந்து, சுவிசேஷத்திற்கு தகுதியுள்ள வாழ்க்கையை வாழ்வோம். உங்களை தெருக்களில் காண்பவர்கள், கிறிஸ்தவர் என்று ஒருவர் யாராகிலும் இருந்தால், அதோ போகிறாரே அவர் தான். தேவன் தம்மை எப்பொழுதும் அவருக்கு வெளிப்படுத்தி வருகிறார். அவரே உண்மையான கிறிஸ்தவர் என்று கூற வேண்டும். கிறிஸ்தவர் என்று ஒருவர் யாராகிலும் இருந்தால்... அவள் பழமை நாகரீகம் கொண்டவள் என்று நினைக்கலாம். ஆனால் அவள் தான் உண்மையான சீமாட்டி நீங்கள் நற்பெயர் கொண்ட கிறிஸ்தவர்களாயிருங்கள். ஏனெனில் நாம் இங்கு அந்நியர்களாயிருக்கிறோம். இது நம்முடைய குடியிருப்பு அல்ல. நமது குடியிருப்பு பரலோகத்தில் உள்ளது. நாம் ராஜாவின் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நமது வாழ்க்கை நற்பெயர் கொண்டதாக இருக்கட்டும். நாம் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகிறோம். அதற்கு கெளரவத்தைக் கொண்டு வரும் வாழ்க்கையை நாம் வாழ்வோம். அப்படிப்பட்ட வாழ்க்கை உங்களால் வாழ முடியாமல் போனால், நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று உங்களை அழைத்துக் கொள்வதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில் அந்த நோக்கத்துக்கு நீங்கள் நிந்தையை வருவிப்பவர்களாய் இருப்பீர்கள். 134மக்களே, உங்களுக்கு நன்றி. இந்த உஷ்ணமான இரவில் நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த நாளில் நீங்கள் ஒருவராவது இழந்து போவதில்லையென்று நம்புகிறேன். நான் எப்பொழுதும் சத்தியத்துக்காக உறுதியாய் நின்று உங்களை புண்படுத்தாமலிருக்கவும், நீங்களும் என்னைக் குற்றப்படுத்தாமலிருக்கவும், நீங்களும் நானும் ஒருமித்து தேவனுடைய கிருபையைப் பெறுவோமென்று நம்புகிறேன். என் மகனுக்கு விருப்பமானதையெல்லாம் செய்ய அவனை நான் விட்டுக் கொடுப்பேனானால், நான் நல்ல தகப்பனாக இருக்க முடியாது. அவனை நான் திருத்த வேண்டும். அன்பு அதைத்தான் செய்யும். அன்பு திருத்தும் தன்மை வாய்ந்தது. பாட், அன்று நீர் எனக்கு எழுதியனுப்பின குறிப்பு எனக்கு ஞாபகமுள்ளது. அதை நான் இன்னும் வைத்திருக்கிறேன். அன்பு திருத்தும் தன்மை வாய்ந்தது என்று வேதம் கூறுகின்றது. தவறு செய்தால்... அதனால் தான் தேவன் நம்மை திருத்துகிறார். அவர் நம்மை நேசிக்கிறார். இன்று முதல் நாம் இனிமையோடும் மிருதுவான தன்மையுடனும் தகுதியுள்ள வாழ்க்கை வாழ்வோமாக! நீங்கள் கவனம் செலுத்தாதீர்கள்.... “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவள் அதை பெற்றிருக்கிறாள் என்று அறிந்திருக்கிறேன். அவள் அந்நிய பாஷை பேசினாள், அவள் ஆவியில் நடனமாடினாள்'' என்று நீங்கள் கூறலாம். அதெல்லாம் சரிதான். ஆனால் அவளிடம் ஆவியின் கனி காணப்படாமற்போனால், ஆவி அங்கில்லை. அவள் ஏதோ ஒருவகை உணர்ச்சி வசப்பட்டு, ஆவியுள்ளது போல் காண்பிக்கிறாள். ஏனெனில் பரிசுத்த ஆவி, ஆவியின் கனி கொண்ட வாழ்க்கையை வாழமுடியும். அது ஒன்றை தான் அது செய்ய முடியும். 135தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். இந்த கடைசி நாளில் தமது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்த தேவன் தாமே - எனக்கு முன்னால் வேதாகமம் உள்ளது. இந்த தூதர்களிடம் - கூர்நுனிக் கோபுர வடிவில் உள்ள இந்த பரம ஒளி - எப்படி தோன்றினது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அவர்களால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை. ஆனால் பிதாவே, அது தோன்றுவதற்கு அநேக மாதங்களுக்கு முன்பே எங்களிடம் அதை கூறினதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, உம்முடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் இன்றிரவு பாவத்தை விட்டு - அவிசுவாசத்தை விட்டு - விலகுவார்களாக! என் சகோதரிகளுக்கு விரோதமாக நான் கடுமையாய் பேசிவிட்டேன். கர்த்தாவே, அவர்களை நான் நேசிக்காததனால் அல்ல. பிசாசு அவர்களை வளைந்து கொண்டு, என்றாவது ஒருநாள் அவர்கள் இறந்து போய், தேவனுடைய சத்தியத்தை அவர்கள் கேட்ட பின்பும் அந்த நிலையில் அவர்கள் உம்மை சந்திப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அது உண்மையாவென்று அறிந்து, முழங்காற்படியிட்டு, உத்தமமாக, “தேவனே, அது உண்மை தானா?'' என்று உம்மிடம் கேட்பது அவர்களுக்கு ஏற்றதாயுள்ளது. ஆண்டவரே, அவர்கள் மாத்திரம் உத்தமமாயிருந்தால், அது மாத்திரமே அவசியமாயிருக்கும். ஏனெனில் உமது வசனமே சத்தியம். 136ஜனங்கள் இவ்வளவு நேரமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்களைப் புண்படுத்தின சில காரியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் தேவ ஆவியானவரே அவர்களோடு பேசினார். அவர்கள் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தனர். நேரம் தாமதமாகிக் கொண்டே போகின்றது. இப்பொழுது சாயங்கால நேரமாயுள்ளது. நாங்கள் வாழும் காலம் மிகவும் தாமதமான ஒரு நேரம். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. தேவனே, விரைவில் அந்தகாரம் உண்டாகும். பிறகு சபையை எடுத்துக் கொள்ள கர்த்தருடைய வருகை இருக்கும். கர்த்தாவே, இதற்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! உம்முடைய திவ்விய சமுகத்தினால் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். கர்த்தாவே, உலகம் முழுவதிலும் இந்த ஒலி நாடாவைக் கேட்கும் ஒவ்வொருவரும், அந்த பழைய கோட்பாடுகள் முதலானவைகளினின்று விலகி, ஜீவனுள்ள தேவனை சேவித்து, தென்தேசத்து ராஜஸ்திரீ செய்தது போல் இதில் முதலீடு செய்வார்களாக, அவள் பரலோகத்தின் தேவனின் பிரதிநிதியாகிய சாலொமோனைக் காண மூன்று மாதங்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. சாலொமோனின் ஞானத்தைக் கேட்க அவள் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கேயிருக்கிறார் என்று இயேசு கூறினார். சாலொமோனிலும் பெரியவர் - அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே - இங்கிருக்கிறார் என்றும், அவர் ஜனங்களின் மூலம் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்றும் நாங்கள் அறிவோம். பிதாவே, இதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! உம்முடைய ஆசீர்வாதங்கள் தங்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். 137ஆண்டவரே, எங்கள் அருமை போதகர்சகோ. நெவிலை ஆசீர்வதிப்பீராக. அவரை நோக்கி, அவருடைய அன்பின் பிரயாசங்களை நான் நினைக்கும் போது, என் இருதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. அவரை நான் நேசிக்கிறேன். அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவர் பராமரிக்கும் போது, அவரைப் பாதுகாத்து அவரைப் பெலப்படுத்தி அவருக்கு தைரியத்தை தர வேண்டுமாய் ஜெபிக்கிறேன். நாங்கள் பணியாற்றும் இந்த மகத்தான அறுவடையின் வயலில், அவருக்கு அநேக ஆண்டுகள் ஊழியத்தையளித்து அவரை ஆசீர்வதிப்பீராக. இன்றிரவு இங்கு அமர்ந்துள்ள இந்த ஊழியக்காரர் சகோதரர் அனைவரையும் ஆசீர்வதிப்பீராக. அவர்களில் அநேகர் வெளியிடங்களிலிருந்து இங்கு வந்துள்ளவர்கள். அவர்களுடன் நீர் இருக்க வேண்டுமாய் ஜெபிக்கிறேன். ஜூனி, சகோ. ரட்டல், இந்த சபைக்கு துணை சபைகளாக இருந்துவரும் சபைகளுக்கு போதகர்களாக இருக்கும் இந்த விலையேறப் பெற்ற மனிதர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்கள் உறுதியாக நின்று, சுவிசேஷ ஒளியை பல்வேறு நகரங்களில் பிரகாசிக்கச் செய்து, அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவரே, இவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்களை உற்சாகப்படுத்தி, கிறிஸ்தவர்களை சோதிப்பதற்கென இப்பூமியில் நேரிடுகின்ற அந்த மகத்தான சோதனைகளைத் தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கிருபையளிப்பீராக! கர்த்தாவே, வியாதியஸ்தரையும், துன்பப்படுகிறவர்களையும் சுகப்படுத்தும். வரப்போகும் வாரத்தில் எங்களுடன் இரும். எங்களுக்கு தைரியத்தை தரும். இன்று அளிக்கப்பட்ட ஞாயிறு பள்ளி பாடங்கள் அவர்களுடைய இருதயத்தை விட்டு விலகாமல், அவர்கள் இதை இரவும் பகலும் தியானிக்கட்டும், பிதாவே, இந்த ஆசீர்வாதங்களை அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 138நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? ”ஆமென் '' நாம் ஒன்றாக இணைந்து, நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் என்னும் நம்முடைய அருமையான பாடலை பாடுவோம். சகோதரி உங்கிரன் எங்கே? அவர்கள் இங்கிருக்கிறார்களா? யாராகிலும் ஒருவர். பியானோ வாசிக்கும் அந்த சகோதரி... இங்குள்ள ஸ்திரீகளில் ஒருவர்... நான் யாரையும் காணவில்லை... ஆம், அதோ அந்த ஸ்திரீ இருக்கிறார்கள். நான் சகோ. உங்கிரனைக் காணவில்லை. இன்றிரவு அவர் எனக்காக நீர் எவ்வளவு பெரியவர் என்னும் பாடலைப் பாட வேண்டுமென்று விரும்பினேன். அவர் வீடு சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன். பாருங்கள்? இன்று காலையில் அந்த பாடலை நான் கேட்டேன். அதை மிகவும் ரசித்தேன். என்னே, ஓ, என்னே, அது என் இருதயத்தில் தொனித்தது. அவர், நீர் எவ்வளவு பெரியவர் என்னும் பாடலைப் பாடுவதைக் கேட்க விரும்புகிறேன். 139இப்பொழுது நாம், நேசிக்கிறேன் என்னும் பாடலை எல்லோரும் சேர்ந்து பாடுவோம். உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவரை இப்பொழுது நாம் நோக்குவோம். “கர்த்தாவே, என்னில் மாம்சீகம் ஏதாகிலும் இருந்தால், அதை இப்பொழுதே களைந்து போடும்'' என்று அவரிடம் கூறுவோம். இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களே, இந்த பாடல் பாடப்படுவதை நீங்கள் கேட்கும் போது, எங்களுடன் சேர்ந்து பாடுங்கள். நீங்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பீர்களென்றால் அங்கிருந்து கொண்டே பாருங்கள், அது அப்படியாக இருக்குமென்றால், நீங்கள் வார்த்தையினால் கடிந்து கொள்ளப்பட்டிருப்பீர்களானால், அது வார்த்தை அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்களானால் வேத வாக்கியங்களை ஆராய்ந்து அது உண்மையாவென்று பாருங்கள். அப்படி செய்வது உங்களுக்கு ஏற்றதாயிருக்கும். அது உங்களுக்கு ஜீவன் அல்லது மரணமாக அமையும். நாம் இந்த பாடலைப் பாடும் போது, உங்கள் வாழ்க்கையில் மாம்சீகம் ஏதாகிலும் காணப்பட்டால், உங்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டே உங்கள் கைகளையுயர்த்துவீர்களா? உங்கள் பிள்ளைகளும், மனைவியும், உங்களைக் சுற்றியுள்ள அன்பானவர்களும் தங்கள் கைகளையுயர்த்தும்படி செய்யுங்கள், நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலைப் பாடி, உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, “ஆண்டவரே, எல்லா பொல்லாங்கினின்றும் என்னை சுத்திகரியும்'' என்று கூறுங்கள். நாம் எழுந்து நின்று பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் (கர்த்தராகிய இயேசுவே, இந்த கைக்குட்டைகளை அணியும் மக்களை நீர் சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை ஆசீர்வதிக்கிறேன். ஆமென்) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 140இப்பொழுது இந்த பெரிய ஆசீர்வாதத்தின் போது, சகோதரியே, வாசித்துக் கொண்டேயிருங்கள், உங்கள் கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். நம்முடைய இருதயத்தில் நாம் இவ்வாறு ஜெபம் செய்வோம்: ''கர்த்தராகிய இயேசுவே, என்னை ஆராய்ந்து பாரும். நான் உண்மையாகவே நேசிக்கிறேனா?“ என்னில் அன்பாயிருந்தால், நான் கூறியிருப்பதை கைக் கொள்வாய் ”என்னில் அன்பாயிருந்தால் என் வசனத்தைக் கைக் கொள்வாய் என்று நீர் சொல்லியிருக்கிறீர்“. உங்கள் இருதயத்தில், ”கர்த்தாவே, உம்முடைய வசனத்தை நான் கைக்கொள்ளட்டும். அதை என் இருயத்தில் மறைத்து, இனி ஒருக்காலும் உமக்கு விரோதமாய் பாவஞ்செய்யாதிருப்பேனாக (அதாவது, நீர் கூறின எதையும் அவிசுவாசிக்காமல் இருப்பேனாக)'' என்று கூறுங்கள். இப்பொழுது நாம் நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலைப் பாடும் போது, நமக்கு அருகிலுள்ள ஒருவருடன் கைகுலுக்கி, “சகோதரனே அல்லது சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று கூறுங்கள். இப்பொழுது மிகவும் அமைதலாக இருங்கள். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் என்ன நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்போது அவரிடம் நமது கரங்களை உயர்த்துவோம்: நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 141அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி ) அவர் அற்புதமானவர் அல்லவா? ('ஆமென்') பிள்ளைகளே, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். இது உங்களுக்கு உதவி செய்யும் என்று என் இருதயத்தில் நான் விசுவாசியாமற் போனால், இங்கு நான் நின்று கொண்டு இவைகளைக் கூறுவதனால் என்ன பயன்? நான் களைப்புற்றிருக்கும் இந்நேரத்தில்... என்னால் நிற்கவும் கூட முடியவில்லை. என் பாதங்கள் வலிக்கின்றன. என் பாதங்கள் நோகும் வரைக்கும் நான் இந்த காலணிகளை அணிந்து, என் பாதங்கள் வியர்த்து இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் மிகவும் களைப்பாயிருக்கிறேன். நான் இன்னும் வாலிபன் அல்ல. நான் மூன்று அல்லது நான்கு மணி நேரம் பிரசங்கம் செய்து, வியாதியஸ்தருக்கு இரவும் பகலும் ஜெபித்த நாட்கள் உண்டு. நான் ஏன் இங்கு நின்றுகொண்டு இதை செய்ய வேண்டும்? கடந்த முப்பது ஆண்டுகளாக நான் புகழுக்காக அதை செய்யாமல், புகழை வேண்டாமென்று தள்ளியிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் பணம் வாங்குவதில்லையென்று உங்களுக்குத் தெரியும்... நான் கர்த்தருடைய நாமத்தில் கூறின ஏதாகிலும் நிறைவேறாமல் இருந்ததுண்டா? அது அப்படியே நிறைவேறினது என்று உங்களுக்குத் தெரியும். உங்களை நான் நேசிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் என் இருதயத்திலுள்ள தேவனுடைய அன்பு தான் அது... நான் தேவனுக்கு முன்பாக நின்று, “தேவனே, அவர்களுக்கு நான் உதவி செய்யட்டும். இதை நான் செய்யட்டும்” என்று கூற முடிந்தால் நலமாயிருக்கும். என்னால் அதை செய்யமுடியாது. ஒவ்வொருவரும் அவர்களாகவே தனிப்பட்ட விதத்தில் இதை செய்ய வேண்டும். 142நாமெல்லோரும் இந்நாட்களில் ஒன்றில் மேலே போகப் போகிறோம் என்று நான் நம்புகிறேன். அதற்குள் நாம் நித்திரையடைந்தால், நான் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால், உங்களை அங்கு சந்திப்பேன் என்பதை நினைவு கூருங்கள். அந்த இடம் அங்குள்ளது என்று எனக்குத் தெரியும். நான் கண்ட தரிசனம் உங்களுக்கு எல்லாவற்றையும் அறிவித்துள்ளது. இத்தனை காலமாக நான் தரிசனம் கண்டு உங்களுக்கு அறிவித்தவைகளில் ஒன்றாகிலும் நிறைவேறவில்லையென்று இங்கு எவருமே கூற முடியாது. உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் அதை அறிவார்கள். மேடையின் மேலிருந்து அறிவிக்கப்பட்டவை அனைத்தும் உண்மையென்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? அது எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. அதே தேவன் காலம் என்னும் திரைக்குப் பின்னால் நான் காணும்படி செய்தார். பெண்களும் ஆண்களும் தங்கள் கரங்களை என் மேல் போட்டு, என்னைக் கட்டித் தழுவி, “ஓ, சகோ. பிரன்ஹாமே'' என்றனர். நான் உட்கார முடியாது. எனக்கு களைப்பாயிருந்தாலும், நான் எப்படியாகிலும் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு முதுகு வலிக்கிறது. நான்... ஒவ்வொரு நாளும்... எனக்கு ஐம்பத்து நான்கு வயதாகிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது வலி தொடங்குகிறது. என் ஜெபம் என்னவெனில்: “தேவனே, என் மகன் ஜோசப்புக்கு வயதாகும் வரைக்கும்”, தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து சத்தியத்தில் உறுதியாய் நிற்க எனக்கு ஆயுளைத் தாரும். அப்பொழுது நான் பழையதாய்ப் போன இந்த வேதாகமத்தை அவனுடைய கையில் கொடுத்து, “மகனே, உன் ஆயுள் முடியும் வரைக்கும் இதை சுமந்து செல். எந்த காரணத்தைக் கொண்டும் ஒப்புரவாகாதே'' என்பேன். 143பில்லி ஒருக்கால் சுவிசேஷத்தை பிரசங்கிப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால் தேவன் அவனை அதற்கு அழைக்கவில்லை, ஆனால் ஜோசப், தற்பொழுது சிறிய பையனாக இருந்த போதிலும், தேவன் அவனை அழைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். அதனால்தான் சிறு பிள்ளைகளுக்கு அவனுடன் ஒத்துப் போக முடியவில்லை. அவன் ஒரு தலைவன். தேவன் அவனை அழைத்திருக்கிறார் என்று நானறிவேன். தேவனுடைய வார்த்தையின் வழியில் அவனுக்கு பயிற்சியளிக்க விரும்புகிறேன். அப்பொழுது அவன் அந்த வார்த்தையை புறக்கணிக்க மாட்டான். கர்த்தருக்கு சித்தமானால் நானே அதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்கு வயதாகி, அவன் பிரசங்க பீடத்தில் நின்று, “இதே சுவிசேஷத்துக்காக என் தந்தை உறுதியாய் நின்றார். இன்றிரவு அவர் வயோதிபராய், தளர்ந்து போய் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் அவருடைய இடத்தை எடுத்துக் கொண்டு அதை நிறைக்க விரும்புகிறேன்'' என்று கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். அப்பொழுது நான் மேலே நோக்கி, ''ஆண்டவரே, உமது அடியானை சமாதானத்துடன் போகவிடும்'' என்பேன். அதை தான் நான் காணத் துடிக்கிறேன். அந்த நேரம் வரும் வரைக்கும்... 144நான் வேறாரு சந்ததியில் தோன்றியிருந்தால் என்னவாயிருக்கும்? அது முடியவே முடியாது. நான் இந்த சந்ததியில் தான் தோன்ற வேண்டும். நான் உங்களிடம் தான் நிற்க வேண்டும். உங்களுக்கு நான் பிரசங்கித்த சுவிசேஷத்தினிமித்தம் தேவனுக்கு முன்பாக நான் கணக்கொப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறேன். இங்கு நான் நின்று கொண்டு, நான் சரியென்று அறிந்துள்ள காரியங்களிலிருந்து உங்களை திசைதிருப்பி வழிவிலகச் செய்வேன் என்று நினைக்கிறீர்களா? உங்களை நான் உற்சாகப்படுத்தலாம். ஆனால் அது தவறென்று நான்அறிந்தால், அதிலிருந்து நீங்கள் விலகி, சரியானதற்குள் வர வேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். என் இருதயத்தின் ஆழத்திலிருந்து இதை கூறுகிறேன். இதற்கு தேவனே சாட்சி. உங்கள் ஒவ்வொருவரையும் நான் உண்மையான தெய்வீக கிறிஸ்தவ அன்பினால் நேசிக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எனக்காக ஜெபியுங்கள். என் எதிர்காலம் எனக்கு என்ன வைத்துள்ளதென்று நான் அறியேன். ஆனால் என் எதிர்காலம் யார் கையில் உள்ளது என்பதை அறிவேன். அதில் நான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன். இந்த பிரசங்க பீடத்தை, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள மனிதரிடம் - நமது போதகரான சகோ. நெவிலிடம் - ஒப்படைக்கிறேன்.